Criminal – கிரிமினல் – 2016

இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று Sci Fi கலந்திருக்கிறார் இயக்குனர். படத்தில் நிறைய தெரிந்த நடிகர்கள். 

திறமையான அரசு உள்வாளி Bill Pope ( Ryan Reynolds – 6 Underground) இவரது மனைவி Jill Pope (Gal Gadot – Wonder Women ) மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.  
இவர் ஒரு ரகசிய ஆப்ரேஷனில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு தெரிந்த சில தகவல்களை வைத்து உலகத்துக்கு வரப்போகும் பெரிய ஆபத்தை தடுத்து நிறுத்தலாம். 
Bill – போலீஸ் தலைவரான Quaker ( Gary Oldman – Dark Knight ) – ஐ சந்தித்து அந்த ராணுவ ரகசியத்தை சொல்ல வரும் வழியில் வில்லன் குரூப் அவரை கடத்தி அந்த ரகசியத்தை கேட்டு டார்ச்சர் பண்ணி கொன்று விடுகிறது. இதனால் ரகசியம் யாருக்கும் தெரியாமல் Bill இறந்து விடுகிறார். 
இந்நிலையில் Franks (Tommy Lee Jones – Men In Black) மெமரியை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றும் டெக்னாலஜியை கண்டுபிடித்து அது சோதனை கட்டத்தில் உள்ளது. இதை கேள்விப்பட்ட Quaker இதை உபயோகித்து இறந்த Bill -ன் மெமரியை இன்னொருவருக்கு மாற்ற சொல்கிறார். 
ஜெயிலில் இருக்கும் கொடூர குணம் படைத்த  Jerico  ( Kevin Costner ) என்பவனுக்கு Bill மெமரியை மாற்ற முடிவு செய்து , அறுவை சிகிச்சை செய்து மெமரியை மாற்றுகிறார் டாக்டர் Franks. 
இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தததா? மெமரி மாறியதா ? உலகையே பாதிக்கப்படும் அளவிலான ரகசியத்தை கண்டுபிடித்தார்களா என்பதை படத்தில் பார்க்கலாம். 
 
படம் என்னவோ எப்பவும் எடுக்கப்படும் டெம்ப்ளேட் தான்… ஹீரோ உலகத்தை காப்பாற்றுவது..  இதில் Blackbox, தமிழில் மாயவன் போன்ற படங்களில் வரும் மெமரியை ட்ரான்ஸ்பர் பண்ணுவது என்பதை புகுத்தி உள்ளனர். 
மற்றபடி நல்ல டைம் பாஸ் படம். ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம்.. 
IMDb Rating : 6.3/ 10 
My Rating: 3/5 
Available in Amazon Prime Video , தமிழ் டப்பிங்லயும் உள்ளது. 
Director: Ariel Vromen
Cast: Kevin Costner, Gal Gadot, Gary Oldman, Jordi Molla, Ryan Reynolds, Tommy Lee Jones, Michael Pitt, Antje Traue
Screenplay: Douglas Cook, David Weisberg
Cinematography: Dana Gonzales
Music: Keith Power, Brian Tyler

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Super Dark Times – 2017Super Dark Times – 2017

Super Dark Times Tamil Review  High School ல் படிக்கும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே பெண் மீது கண். எதிர்பாராத ஒரு  சம்பவம் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. IMDb 6.6 Tamil dub ❌ OTT

[Korean Movie ] Unstoppable – 2018[Korean Movie ] Unstoppable – 2018

நீங்க ஹாலிவுட் ரயில் படமான Unstoppable னு நினைத்து வந்து‌ இருந்தால் இங்கே தொடரவும்  Unstoppable (Hollywood-English) [Quick Review]  நம்ம அதிரடி ஹீரோ Don Lee (Train To Busan , The Gangster The Cop The Devil) 

Only Murders in the building – 2021Only Murders in the building – 2021

Only Murders in the building Tamil Review இது‌ ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each