13 Hours – தேர்ட்டீன் ஹவர்ஸ் – 2016

2012 -ஆம் ஆண்டு லிபியாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சர்வாதிகாரி Gadaffi இறந்த பின்னர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு படிப்படியாக குறைந்து விட்டது. ஆனால் அங்குள்ள போராளிகள் கடாஃபி பதுக்கி வைத்த இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கொள்ளை அடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். குறிப்பாக Benghazi எனும் ஊர் இவர்கள் கட்டுப்பாட்டில் மிகவும் அபாயகரமான ஊராக உள்ளது. தெருவில் போறவன் வருபவன் எல்லாம் துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சரோடு சுற்றுகிறார்கள்.. ஊராடா இது.

பெரும்பாலான இடங்களை அமெரிக்கா துருப்புக்கள் காலி செய்து விட்டாலும் Benghazi -ல் ஒரு பெரிய காம்பௌண்டில் படுரகசியமாக ஒரு CIA அலுவலகத்தை நடத்தி வருகிறது. 

இந்த அலுவலகம் மற்றும் தலைமை அதிகாரிக்கு பாதுகாப்பை ஒரு தனியார் அமைப்பை (GRS – Global Response Staff)  சேர்ந்த 6 முன்னாள் ராணுவ வீரர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்த காம்பௌன்டில் இருந்து கொஞ்சம் தொலைவில் இன்னொரு கட்டிடத்தில் லிபியாவிற்கான அமெரிக்க தூதர் உள்ளார். அவருக்கு லிபியா அதிகாரிகளுடன் சந்திப்பு நடக்கிறது அதற்கும் GRS பாதுகாப்பு அளிக்கிறது. 

அமெரிக்காவிற்கு பெரிய எதிர்ப்புகள் இல்லாத நிலையில் அமைதியாக செல்கிறது. ஆனால் செப்டம்பர் 12, 2012 அன்று ஒரு பெரிய குழு அமெரிக்க தூதுவர் வசிக்கும் பில்டிங்ஐ திடீரென தாக்குகிறது.  என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் முன் தூதுவர் கொல்லப்படுகிறார் .

CIA காம்பௌண்டில் இருப்பவர்களுக்கு அடுத்து நாம் தான் என பீதி தொற்றிக்கொள்கிறது. பாதுகாப்பிற்காக கொஞ்சம் லிபியா அதிகாரிகள், இன்னொரு நட்பு அமைப்பு மற்றும் GRS அமைப்பை சேர்ந்த 6 பேர் மட்டுமே இருக்கிறார்கள். வெளியில் இருந்து வேறு உதவிகள் கிடைக்காத நிலையில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள் என்பதை சொல்வது தான் 13 Hours. 

படம் மெதுவாக ஆரம்பித்து மெதுவாக வேகம் எடுக்கிறது. அட்டாக் ஆரம்பித்த உடன் டாப் கியரில் பரபரப்பாக நகர்கிறது. 

துப்பாக்கி சண்டை, கார் சேஸிங்குகள், குண்டு வெடிப்புகள் என ஆக்ஷன் படத்திற்கு தேவையான அனைத்தும் perfect -ஆக உள்ளது. அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் அருமையாக படமாக்கப்பட்டு உள்ளது. 

ஹீரோக்கு என தனிப்பட்ட ரோல் எதுவும் இல்லை ‌‌எல்லாரும் சண்டை போடுகிறார்கள் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றும் பொருட்டு.

நல்ல ஒரு ஆக்ஷன் படம் .. கண்டிப்பாக பார்க்கலாம். 

IMDb Rating : 7.3/ 10

My Rating : 4/5

Available in Amazon Prime Video. 

தமிழ் டப் இல்லை.

Director: Michael Bay

Cast: John Krasinski, James Badge Dale, Pablo Schreiber, Dave Denman, Dominic Fumusa, Max Martini, Dave Costabile, Toby Stephens

Screenplay: Chuck Hogan based on “13 Hours” by Mitchell Zuckoff

Cinematography: Dion Beebe

Music: Lorne Balfe

13 hours the secret soldiers of Benghazi movie review in tamil, 13 hours movie, 13 hours IMDb, 13 hours cast, 13 hours movie, Gaddafi libiya based movie 

 ‌ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Sweet Tooth – ஸ்வீட் டூத் – Season 1 – 2021Sweet Tooth – ஸ்வீட் டூத் – Season 1 – 2021

இது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள தொடர்.  1 Season வெளியாகி உள்ளது அதில் 8 எபிசோட்கள் உள்ளன.  இது ஆக்ஷன் அட்வேன்சர் உடன் கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த தொடர்.  பாதி மனிதனும் பாதி மானும் கலந்து பிறந்த சிறுவன்

Confession Of Murder – 2022Confession Of Murder – 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌.  IMDb 7.0 Tamil dub ❌ OTT ❌ சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும்

Squid Game – 2021Squid Game – 2021

 இந்த சீரிஸ் இப்ப செம ஹாட்டா போய்ட்டு இருக்குது. நிறைய பேர் பார்த்து இருப்பீங்க. இன்னும் பார்க்காமல் இருக்கும் மக்களுக்காக இந்த போஸ்ட் 😊 IMDb 8.3  இந்த சீரிஸ் ஓட கான்செப்ட் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு.  உதாரணமாக Statue, release