Widows – விடோஸ் – 2018

இந்த படத்தை பார்க்க முக்கிய காரணம் இயக்குனர் மற்றும் நடித்த நடிகைகள். 

12 Years a slave என்ற அகாடமி அவார்டு வாங்கிய திரைப்படத்தை கொடுத்த இயக்குநர் Steve McQueen -ன் படைப்பு தான் இந்த படம். 

இயக்குநருக்கு அடுத்தபடியாக நடிகைகள் …. 

முதலில் Viola Davis (How to get away with murder, Prisoners) . இவர் சில வருடங்களுக்கு முன்பு சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஆவார். 

Michelle Rodriguez – இவர் பெரும்பாலும் அதிரடி ஆக்ஷன் (Avatar, Fast and Furious)  கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் . 

Elizabeth Debicki – இவர் Tenet , Night Manger போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

இது Heist பற்றிய ஒரு திரைப்படம் தான். 

படத்தின் ஆரம்பத்தில் 4 பேர் இணைந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் இதற்கு லீடராக இருப்பவர் Harry (Liam Neeson) . கொள்ளையில் ஏற்படும் குழப்பத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். 

இறந்தவர்கள் அனைவரும் எக்கச்சக்க கடன்களை விட்டுட்டு செல்கின்றனர். கடன் கொடுத்தவர்கள் எல்லாரும் வந்து விதவைகளின் சொத்துக்களை பிடிங்கி விடுகின்றனர் அது மட்டும் அல்லாமல் மிரட்டல்கள் விடுகின்றனர். 

இதனால் கடுப்பான Harry – ன் மனைவி Veronica செய்வது அறியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் கணவன் அடுத்த கொள்ளை மற்றும் அதை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய விபரங்களை எழுதி வைத்த டைரி கிடைக்கிறது. 

ஆனால் இதை செய்ய குறைந்து 4 பேர் வேண்டும் என்பதால் தனது கணவருடன் இறந்த மூன்று பேர்களின் மனைவிகளின் உதவியை நாடுகிறார். ஒருவர் இதில் ஆர்வம் இல்லை என விலகி விட இவர்கள் நால்வரும் இணைந்து கொள்ளை அடித்து கடனை அடைத்தார்களா இல்லையா என்பது மீதிக்கதை. 

படம் மெதுவாக தான் செல்கின்றது. பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை.  வீட்டில் நல்ல குடும்பத் தலைவிகளாக இருந்த பெண்கள் திடீரென பொங்கி எழுந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்பது கொஞ்சம் நம்ப முடியாத வகையில் உள்ளது. அதையும் ஈடுகட்ட இயக்குனர் சில காட்சிகள் வைத்து இருந்தாலும் கொஞ்சம் இடிக்கிறது. 

மற்றபடி படம்  மெதுவாக தான் செல்கிறது ஆனால் போரடிக்காமல் செல்கிறது. ஒரு சின்ன திருப்பம் உள்ளது அதையும் சொல்லிவிட்டால் படம் ரொம்பவே ஃபோர் அடித்து விடும். 

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 

 

IMDb Rating : 6.9/ 10

Available in Amazon Prime Video

Director: Steve McQueen

Cast: Viola Davis, Daniel Kaluuya, Brian Tyree Henry, Robert Duvall, Colin Farrell, Cynthia Erivo, Carrie Coon, Elizabeth Debicki, Michelle Rodriguez, Liam Neeson

Screenplay: Gillian Flynn & Steve McQueen, based on the novel by Lynda La Plante

Cinematography: Sean Bobbitt

Music: Hans Zimmer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Karthikeya-2014Karthikeya-2014

Karthikeya Telugu Movie Review  இது ஒரு தெலுகு mystery thriller.  சுப்ரமணியபுரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் நடந்த மரணங்களால் மூடப்படுகிறது. இதனை பற்றி பேசுபவர்கள் பாம்பு கொத்தி இறந்து விடுகிறார்கள்.  Tamil ❌ Telugu ✅ Available

Most Dangerous Game – 2020Most Dangerous Game – 2020

இது மனிதர்களை பொழுதுபோக்குக்காக வேட்டையாடும் ஒரு பணக்கார சைக்கோ குரூப் மற்றும் அவர்களின் விளையாட்டில் சிக்கிக்கொண்ட ஹீரோவை பற்றிய கதை.  IMDb 6.9 Tamil Dub available in Prime Video நல்ல பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் . கண்டிப்பாக பார்க்கலாம்

Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013

ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்.  இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone. படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான்.  Phil Broker