The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019 Movie Review In Tamil
இந்த படம் Down Syndrome – நோயினால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞன் செய்யும் அட்வென்ட்சர் பற்றியது. இது ஒரு நல்ல Feel Good திரைப்படம்.
டவுன் சிண்ட்ரோம்:
டவுண் சிண்ட்ரோம், குழந்தைக்குத் தாயின் கருவிலேயே ஏற்படும் குறைபாடு. மனிதனுக்கு இயற்கையாக மொத்தம் 23 இணை குரோமோசோம்கள் (46) இருக்கும். இந்த குரோமோசோம்களில் 21-வது இணையில் மூன்று குரோமோசோம்கள் இருந்தால், டவுண் சிண்ட்ரோம் ஏற்படும் (21 ட்ரைசோமி – Trisomy 21). அதிகமாக உள்ள ஒரு குரோமோசோம் அம்மாவிடமிருந்தோ அப்பாவிடமிருந்தோ வந்திருக்கலாம்.
டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலின் அமைப்புகளைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படலாம். கண்களில் புரை, கேட்டல் திறன் குறைபாடு, முக அமைப்பில் மாற்றம், இதய நோய்கள், குடலில் குறைபாடு, தைராய்டு குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு… இவையெல்லாம் ஏற்படலாம்.
Source: https://www.vikatan.com/health/healthy/119750-what-is-down-syndrome-facts-causes
Zak (Zack Gottsagen) – ஒரு முதியவர் காப்பகத்தில் வசித்து வருகிறார். இவருக்கு Wrestling கற்றுக் கொண்டு பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசை. ஆனால் இவருடைய குடும்பம் இவருடைய குறைபாடுகளை காரணமாக காட்டி வீட்டில் சேர்க்க மறுத்ததால் அரசாங்க காப்பகத்தில் வாழ்கிறார். இவர் WWF ஸ்டாரான Salt Water Redneck (Thomas Haden Church) போல வரவேண்டும் மற்றும் அவர் நடத்தும் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும் என்பது அவரின் குறிக்கோள். இந்த காப்பகத்தில் இவரது பராமரிப்பாளராக இருக்கும் பெண் Eleanor ( Dakota Johnson – Fifty Shades Of Grey) .
அந்த ஊரில் இன்னோரு புறம் மற்றவர்களின் நண்டு வலைகளில் சிக்கியுள்ள நண்டுகளை திருடுகிறார் Tyler ( Shia LaBeouf – Fury, Transformers)
Zak ஒருநாள் காப்பகத்தில் இருந்து தப்பி ஒரு மீன்பிடி படகில் பதுங்குகிறார். அன்று Tyler எதிரிகளிடம் இருந்து தப்பிக்க Zak ஒளிந்து இருக்கும் படகை எடுத்துக் கொண்டு போகிறார்.
இருவரும் சந்தித்து நண்பர்கள் ஆகின்றனர். Tyler – உதவியுடன் Wrestling School – ல் Zak சேர்ந்தானா அல்லது அவனை தேடிப்பிடித்து திரும்ப காப்பகத்திற்கு கூட்டிச்செல்ல முயற்சி செய்யும் Eleanor – இடம் மாட்டினான என்பதை கொஞ்சம் கல கலப்புடன் பாஸிட்டிவ்வாக சொல்லி இருக்கின்றனர் இயக்குனர்கள் Tyler Nilson மற்றும் Michael Schwartz.
என்ன ஒரு அருமையான திரைப்படம். இரண்டு நண்பர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி அருமை .. இருவரும் கலக்கி இருக்கிறார்கள்.
கண் தெரியாமல் வருபவர், Wrestler ஆக வருபவர் என அனைவரும் நிறையான நடிப்பு.
Eleanor கதாபாத்திரத்தில் அழகு பதுமையாக வருகிறார் Dakota Johnson .
மொத்தத்தில் அருமையான feel good திரைப்படம்.
கண்டிப்பாக பாருங்கள்.
IMDb Rating : 7.6/ 10
Available in Amazon Prime Video
Directed by: Tyler Nilson, Mike Schwartz
Written by: Tyler Nilson, Mike Schwartz
Starring: Shia LaBeouf, Zack Gottsagen, Dakota Johnson, Thomas Haden Church, and Bruce Dern
Watch Trailer: