The Little Things – தி லிட்டில் திங்ஸ் -2021

 இது ஒரு க்ரைம் டிடெக்டிவ் திரில்லர். நம்ம தலைவர் Denzel Washington வேற போலீஸ் ஆபீசரா வர்றார். இந்த காரணம்  போதாத படம் பார்க்க.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கொஞ்சம் பக்கத்தில் உள்ள சின்ன ஊரில் போலீசாக இருக்கிறார் Deke Deacon. ஒரு முக்கியமான ஆதாரத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறையில் இருந்து பெற்றுக்கொண்டு வருமாறு Deke ஐ அனுப்புகிறார் மேலதிகாரி.

லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள எல்லாரையும் தெரிந்து வைத்துக்கொள்ளார் Deke . அவர் அதே ஸ்டேஷனில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி உடல் நலம் குன்றி சிறிய ஊருக்கு மாறுதல் ஆனது தெரிய வருகிறது. 

தற்போது அவரது பதவியில் உள்ளவர் Jimmy என்ற ஒரு இளம் டிடெக்டிவ். Deke போன வேலை தாமதமாக ஆகிறது. இந்த கேப்பில் ஒரு கொலை நடக்கிறது Jimmy  கொலை நடந்த இடத்திற்கு போகையில் Deke ஐ  உதவிக்கு அழைத்துச் செல்கிறான்.  

ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்க இது Deke  வேலை பார்த்த போது நடந்த கொலையை ஒத்து உள்ளது. இது சீரியல் கொலை என முடிவானதால் இருவரும் இணைந்து கொலைகாரனை தேட ஆரம்பிக்கிறார்கள். 

கொலைகாரனை கண்டுபிடித்தார்களா ? Deke ரொம்பவே ஆர்வத்துடன் இந்த கேஸில் உதவ காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த படம். படம் சீரான வேகத்தில் ஆனால் ஒரு வித எதிர்பார்ப்புடன் நகர்கிறது. 

கொலைகாரன் இவனாக தான் இருக்கும் என கண்டுபிடித்தும் ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் திணறுவது எவ்வளவு கொடுமையானது, ஒரு நேர்மையான தொழில் பக்தி கொண்ட டிடெக்டிவ்  உண்மையை கண்டுபிடிக்க எந்த எல்லைக்கும் போவான் என்பதை இரண்டு டிடெக்டிவ் கதாபாத்திரங்கள் வழியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.  Denzel Washington மற்றும் Rami Malek நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

வில்லனாக வரும் Sparma கதாபாத்திரத்தில்  Jared Leto கலக்கி இருக்கிறார். அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் நமக்கே எரிச்சல் வரவைக்கும் அளவு நல்ல நடிப்பு.

கடைசியில் பக்காவாக ஒரு ட்விஸ்ட் மற்றும் முடிவை நம்மிடம் விட்டு விடுகிறார்கள். 

படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல் கில்லர் வகையான படம் என்பதாலும் Seven படம் லைட்டாக மனதில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. 

கண்டிப்பாக பார்க்கலாம்… 

IMDb Rating : 6.3/ 10

Available in Amazon Prime Video

Director: John Lee Hancock

Cast: Denzel Washington, Rami Malek, Jared Leto, Chris Bauer, Michael Hyatt, Terry Kinney, Natalie Morales, Isabel Arraiza

Screenplay: John Lee Hancock

Cinematography: John Schwartzman

Music: Thomas Newman

Genre: Thriller

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Split – ஸ்பிலிட்(2016)Split – ஸ்பிலிட்(2016)

Sixth Sense , The Village, Signs போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர் M. Night Shyamalan இயக்கத்தில் வந்த ஒரு அருமையான psychological thriller படம் தான் Split.  படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளம்பெண்களை Casey(Anya Taylor -Joy

The Drop – 2014The Drop – 2014

The Drop Movie review  Crime, Drama, Thriller ⭐- Ing : Tom Hardy, Naomi Repace ⭐⭐⭐.5/5 Tamil & OTT ❌ பாரில் வேலை பார்க்கும் ஹீரோ அந்த ஏரியா கேங் நடுவுல மாட்டிக்கிட்டு சந்திக்கும் பிரச்சினைகள். 

Dear Child – 2023Dear Child – 2023

ஒருத்தன் 13 வருஷமா ஒரு பெண்ணையும், 2 குழந்தைகளையும் வீட்டு சிறையில் வைத்து இருக்கிறான். Episodes: 6Language: German , Tamil ❌⭐⭐⭐.75/5 அந்த பெண் வீட்டுச் சிறையில் இருந்து ஒரு நாள் தப்பிக்கிறாள் அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான்