The Family man – 2 – தி ஃபேமிலி மேன் – 2 – 2021
2019 ஆம் ஆண்டு வெளிவந்த முதல் சீசன் பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது சீசன் பெரும் காலதாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் வெளி வந்து உள்ளது.
முதல் சீசனுக்கும் இரண்டாவது சீசனுக்கும் கதையளவில் பெரிய தொடர்புகள் இல்லை. ஆனால் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுக்கு இடையேயான தொடர்புகள் முதல் சீசன் பார்த்தால் தான் தெளிவாக புரியும்.
ஹீரோவாக Srikanth Tiwari கதாபாத்திரத்தில் Manoj Bajpai , அவரின் மனைவியாக Suchi கதாபாத்திரத்தில் Priyamani நடித்துள்ளார். இவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் ஒரு மகளும் , தொடக்கப்பள்ளியில் படிக்கும் மகனும் உள்ளனர். Srikanth- ன் நெருங்கிய நண்பர் மற்றும் உடன் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் JK (Sharib Hashmi) வருகிறார் .
Srikanth மற்றும் JK இருவரும் வேலை பார்ப்பது TASC எனும் படுரகசியமான ஒரு அரசு அமைப்பில் . இதன் முக்கிய பணி நாட்டிற்கு தீவிரவாதிகளால் வரும் அச்சுறுத்தல்களை வரும் முன் கண்டுபிடித்து தடுப்பது. ரகசியம் காப்பதற்காக வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளிடம் தான் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
முதல் சீசனில் நடந்த சில வேண்டத்தகாத நிகழ்வுகளால் டாஸ்க் அமைப்பில் இருந்து வெளியே வந்து ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியில் சேருகிறார்.
முதல் சீசனில் தங்களுடைய திட்டம் தோல்வி அடைந்தால் கடுப்பில் இருக்கும் ISIS தீவிரவாத இயக்கம் மற்றும் இலங்கையில் தனி நாடு கேட்கும் போராளிகள் குழு தலைவர் என இரண்டும் இணைந்து இந்திய பிரதமரை போட்டுத் தள்ள திட்டம் இடுகின்றன. டாஸ்க் அமைப்பு எவ்வாறு இந்த திட்டத்தை முறியடித்து பிரதமரை காப்பாற்றியது என்பதை பற்றியது இரண்டாவது சீசன்.
இதற்கு நடுவில் Srikanth – ன் குடும்ப வாழ்க்கையில் விரிசல் விழுந்து கொண்டே போகிறது. அதையும் எவ்வாறு சரி செய்தார் என்பது தனி ட்ராக்.
மூன்றாவது அகதியாக சென்னையின் ஒரு மூலையில் மில்லில் வேலை பார்க்கும் போராளியாக சமந்தா. நல்ல தேர்வு… அமைதியாக இருக்கும் இவர் தன்னிடம் தவறாக நடப்பவனிடம் தன்னுடைய சுயரூபத்தை காட்டும் இடம் அசத்தல். சோகம் , சண்டை என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் செம அதிரடி.
இலங்கை போராளிகள் கூட்டத்தின் தலைவர் தன்னுடைய தம்பியின் கொலைக்கு பழிவாங்குவதற்காக ISIS இயக்கத்துடன் இணைந்து இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுவது கொஞ்சம் பொருந்தாமல் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.
மற்றபடி ஒவ்வொரு எபிசோடும் பரபரவென நகர்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் நடக்கும் கதை என்பதால் நிறைய தமிழ் நடிகர்கள் உள்ளனர். ஹிந்தி தொடர் என்றாலும் கதை நடக்கும் இடம் தமிழ்நாடு என்பதால் பெரும்பாலும் தமிழ் பேசப்படுகிறது.
குறிப்பாக தமிழ் நாட்டு டாஸ்க் பிரிவு போலீசாக முத்துப்பாண்டி கேரக்டரில் வருபவர், பெண் போலீசாக வரும் தேவதர்ஷினி நல்ல நடிப்பு.
இந்த தொடரின் வெற்றிக்கு காரணம் அதிரடி ஆக்ஷன் உடன் சேர்ந்து குடும்பம் , காமெடி என அனைத்தையும் சரியான விகிதத்தில் கலந்து அளித்தது தான். பிரியா மணி , இவர்களது மகன் மற்றும் மகள் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்த தொடரை பற்றி பல எதிர்மறையான விமர்சனங்கள் உள்ளது.குறிப்பாக விடுதலைப் புலிகள் மற்றும் அவரது தலைவர் பற்றியது. இதை தவிர்த்து பார்த்தால் அருமையான முறையில் எடுக்கப்பட்ட தொடர்.
கண்டிப்பாக பார்க்கலாம்…
IMDb Rating : 8.7/ 10
Available in Amazon Prime
Director :
Raj Nidimoru & Krishna D.K
Cast:
Manoj Bajpayee as Srikant Tiwari
Samantha Akkineni as Raji
Priyamani as Suchitra Tiwari
Sharib Hashmi as JK Talpade
Shreya Dhanwanthary as Zoya
Sunny Hinduja as Milind
Sharad Kelkar as Arvind
Darshan Kumaar as Major Sameer
Dalip Tahil as Mr. Kulkarni
Vipin Sharma as Sambit
Seema Biswas as PM Basu
Asif Sattar Basra as a counselor
Shahab Ali as Sajid
Ashlesha Thakur as Dhriti Tiwari
Vedant Sinha as Atharv Tiwari
Ravindra Vijay as Muthu Pandian
Devadarshini Chetan as Umayal
Mime Gopi as Bhaskaran
N Alagamperumal as Deepan
Anandsami as Selvarasan
Abhay Verma as Kalyan