The Dead Don’t Die – தி டெட் டோன்ட் டை -2019

படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது மற்றும் திறமையான நடிகர் மற்றும் நடிகைகள் இருந்ததால் பார்த்த படம். 
It’s not recommendation, Warning to escape …
அமெரிக்காவின் கடைக்கோடியில் உள்ள ஒரு சின்ன ஊர். மொத்த மக்கள் தொகையே 700 சொச்சம் தான். பூமியின் அச்சு சில டிகிரி மாறிவிட்டது என செய்திகளில் சொல்லப்படுகிறது. இரவு நேரம் ஆகியும் இருள் சூழாமல் இருக்கிறது. 
ஊருக்குள் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ஒருவர் வயதான தலைமை அதிகாரி Cliff ( Bill Murray- Zombieland
இன்னொருவர் Ronnie ( Adam Driver – Logan Lucky)  மற்றும் மற்றொரு பெண் அதிகாரியான Mindy (Chloe) 
ஒரு வழியாக இருண்ட பின்பு கல்லறையில் இருந்து ஒரு ஜோடி ஜோம்பிஸ் எழுந்து வந்து அந்த ஊர் மோட்டலில் வேலை பார்க்கும் ரெண்டு பேரை கடித்து கொன்று விட்டு அங்கு உள்ள காப்பியை குடித்து விட்டு சென்று விடுகின்றன.  ஆமாங்க காபியை குடித்துவிட்டு காப்பி காப்பி என்று பொலம்பிட்டே போகுது. 
ஊருக்கு இன்னொரு பக்கம் ஊர் சைசுக்கு சம்பந்தமே இல்லாத வகையில் அமைந்த ஒரு  பெரிய Funeral Home . அதன் ஓனராக  Zelda (Tilta Swindon – Okja, Snowpiercer). இவர் ஒரு பெரிய வாள் வைத்து  இருக்கிறார் மற்றும் புத்தர் சிலையை கும்பிடுகிறார். 
இதற்கு நடுவே வெளியூரில் இருந்து 3 பேர் வந்து அங்குள்ள லாட்ஜில் தங்குகிறார்கள், சூப்பர் மார்க்கெட்டில் 4 பேர் வேலை பார்க்கிறார்கள். 
இது போக காட்டுவாசி மாதிரி ஒருவர் காட்டுக்குள் சுற்றிக்கொண்டு இருக்கிறார். 
எல்லாரும் எதிர் பார்த்த மாதிரியே ஜோம்பிஸ் படை வந்து தாக்கி எல்லாரையும் காலி பண்ணுகிறது. 
அந்த Funeral Home Zelda மட்டும் எஸ்கேப் ஆக விடுகிறார். அவ்வளவு தான் படம். அவர் யார் என்பதற்கு ஒரு ட்விஸ்ட்!!!! படம் செம ஸ்லோ , எதுக்கு இத்தனை கேரக்டர்கள் என்று தெரியவில்லை. பரபரப்பு என்று சொல்லிக்கொள்ள ஒரு காட்சி கூட கிடையாது.
 
தவிர்ப்பது நல்லது 😉
IMDb Rating : 5.5./10 ( முதல்லயே பார்க்காமல் விட்டு விட்டேன்) 
Available in Netflix 
Director: Jim Jarmusch
Cast: Bill Murray, Austin Butler, Steve Buscemi, Tom Waits, Tilda Swinton, Caleb Landry Jones, Danny Glover, Chloë Sevigny, Adam Driver, Selena Gomez
Screenplay: Jim Jarmusch
Cinematography: Frederick Elmes
Music: Sturgill Simpson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fear Street Part One : 1994 (2021)Fear Street Part One : 1994 (2021)

எழுத்தாளர் R.L.Stine எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாரரர்  திரைப்படம்.  இந்த திரைப்படம் அடுத்த அடுத்த வாரங்களில் மூன்று பாகங்களாக வெளிவருகிறது. July 2 முதல் பாகமான இந்த படம் வெளிவந்து உள்ளது. July 9 மற்றும் July 16 -ல்

Bedevilled – 2010Bedevilled – 2010

இது ஒரு கொரியன் ஹாரர் திரில்லர்.  இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்ப்பது நல்லது. IMDb 7.3 தமிழ் டப் இல்லை.  சிட்டியில் ஒரு வேலை பார்க்கும் இளம்பெண் தனிமையில் வசிக்கிறார். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் வலுக்கட்டாயமாக லீவில் அனுப்பப் படுகிறார்.  இவர்

His House – ஹிஸ் கவுஸ் (2020)His House – ஹிஸ் கவுஸ் (2020)

இது UK – வில் இருந்து வந்த ஒரு பேய் படம். பேய் படம் என்பதை விட ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் படம் என்றால் சரியாக இருக்கும்.  சூடானில் நடக்கும் உள்நாட்டு போரில் சிக்கிய ஒரு கருப்பின தம்பதியினர் (Bol –