Sweet Tooth – ஸ்வீட் டூத் – Season 1 – 2021

இது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள தொடர். 
1 Season வெளியாகி உள்ளது அதில் 8 எபிசோட்கள் உள்ளன. 
Sweet tooth Netflix series review in tamil, Netflix original series, based on dc comics, sweet tooth Netflix, sweet tooth season 2, sweet tooth cast,

இது ஆக்ஷன் அட்வேன்சர் உடன் கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த தொடர். 
பாதி மனிதனும் பாதி மானும் கலந்து பிறந்த சிறுவன் தன் தந்தையால் காட்டில் தனிமையில் வளர்க்கப் படுகிறான். 10 வயதில் தந்தை இறந்து விட தனது தாயை தேடி கிளம்புகிறான் Gus . ஆபத்தான பயணத்தில் அவன் செய்யும் சாகசங்கள் தான் தொடரின் கதை. 
தொடரின் ஆரம்பத்தில் ஒரு வித வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும்பான்மையான மனித இனம் அழிந்து விடுகிறது.  அந்த சமயத்தில் பிறந்த குழந்தைகள் பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் பிறக்கின்றனர்.  இவர்களை Hybrid என்று அழைக்கிறார்கள். 
தப்பி பிழைத்த கூட்டத்தின் ஒரு பகுதி இந்த வைரஸ் தாக்குதலுக்கு காரணம் மிருக உருவில் பிறந்த குழந்தைகள் என நினைத்து அந்த குழந்தைகளை தேடிப் பிடித்து கொல்கிறார்கள் அல்லது வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க அவர்கள் மீது ஆராய்ச்சி செய்கின்றனர். இந்த மாதிரியான கொடுரமான செயல்களை செய்வது Last Men எனப்படும் இராணுவம் போன்ற ஒரு குழு. 
இன்னொரு பெண் Aimee ஒரு மிருகக்காட்சி சாலையை புகலிடமாக மாற்றி  ஆதரவற்ற Hybrid – களை காப்பாற்றுகிறார். 
Gus – ஐ ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றுகிறான் Jepperd எனும் ஒருவன். அவன் Last Men கூட்டத்தை சேர்நதவனாக இருந்தாலும் திருந்தி வாழ நினைக்கிறான். 
Jepperd மற்றும் Gus உடன் இணைகிறார் Bear – எனும் சிறுமி இவரும் Hybrid குழந்தைகளை காப்பாற்றுவதை கடமையாக வைத்து உள்ளார். 
இன்னொரு இடத்தில் ஒரு இந்திய தம்பதி உள்ளனர். டாக்டரான Aditya Singh தன்னுடைய மனைவியை இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து உயிரை காப்பாற்ற மருந்து தயாரிக்க முயற்சிக்கிறார். 
இது போல வெவ்வேறு இடங்களில் சம்பந்தமே இல்லாமல் நகர்கிறது தொடர். கதாபாத்திரங்களுடைய பிண்ணனியும் சொல்லப்படவில்லை. 
ஆனால் பிற்பகுதியில் உள்ள எபிசோட்களில் எல்லாவற்றையும் தெளிவு படுத்துகிறார் இயக்குனர். 
வில்லனாக வரும் Last Men குழுவின் தலைவன் எல்லா புள்ளிகளையும் இணைக்கிறான். 
ஆரம்பத்தில் மெதுவாக சென்றாலும் பிற்பகுதியில் நல்ல வேகம் எடுக்கிறது. ஆனால் பொசுக்கென்று சீசன் முடிந்து விட்டது. 
அனைத்து நடிகர்களும் நடிகைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். Hybrid ஆக வரும் குழந்தைகளின் மேக்கப்/கிராபிக்ஸ் சூப்பர்.. 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்… 
IMDb Rating : 8.3/10
Available in Netflix 
 Cast: 
Christian Convery, Dania Ramirez, drama, James Brolin, Naledi Murray, Nonso Anozie, Stefania LaVie Owen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Nightingale – 2018The Nightingale – 2018

1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில்  நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.  IMDb 7.3 Tamil dub ❌ Violent Content  தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம். 

Eye In The Sky – 2015Eye In The Sky – 2015

நம்ம சந்தில் இந்த படத்தை யாரோ ஒருவர் பரிந்துரை செய்து இருந்தார். அருமையான படம்.  IMDb 7.3 Tamil dub ❌ Available @ Amazonprimein மிலிட்டரி தாக்குதல் நடைபெறும் போது தெரியாத்தனமாக அந்த ஏரியாவிற்குள் வரும் சிறுமியால் ஏற்படும் குழப்பம்

A Prayer Before Dawn – 2017A Prayer Before Dawn – 2017

ஒரு இங்கிலீஷ் பாக்சர் தாய்லாந்துல கடும் கட்டுப்பாடுகள் கொண்ட சிறையில் மாட்டிக் கொள்கிறான்.  IMDb 6.8 Tamil dub ❌ Available Netflix  அவனுடைய பாக்ஸிங் திறமையை வைத்து அங்க இருந்து எப்படி வெளில வர்றான் என்பது தான் படம்.  உண்மைச்சம்பவத்தை