No escape – நோ எஸ்கேப் – 2015

 2015 – ல் வெளிவந்த ஆக்ஷன் திரில்லர் படம் தான் நோ எஸ்கேப். 

படத்தின் ஹீரோவாக Jack கதாபாத்திரத்தில் Owen Wilson  ( Behind enemy lines , Shanghai Noon ) நடித்து உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகரான Pierce Brosnan ( Tomorrow never dies) ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் . 

Jack தண்ணீர் மேலாண்மை துறை வல்லுனராக உள்ளார். நிறைய சம்பளத்திற்கு ஆசைப்பட்டு தெற்காசியாவில் உள்ள ஒரு நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க கம்பெனியின் பிரிவுக்கு வேலைக்கு செல்கிறார். 

மனைவி மற்றும் இரு மகள்களுடன் ஃப்ளைட் டில் வருகையில் Hammond (Pierce Brosnan ) ஐ சந்திக்கிறார். மொழி தெரியாத நாட்டில் சில உதவிகள் செய்கிறார் Hammond. 

இவர்கள் வந்த நேரம் அந்த நாட்டின் அதிபரை போராளிகள் குழு போட்டுத் தள்ளுகிறது.  தண்ணீரை கட்டுப்படுத்தும் உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு கொடுத்து நாட்டை விற்று விட்டார் அதிபர் என்பது குற்றச்சாட்டு. 

போலீசார் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் சண்டை நடக்கிறது . போராளிகள் குழு கண்ணில் பட்ட வெளிநாட்டவர்களை எல்லாம் கொடூரமாக கொன்று தள்ளுகிறது. 

இன்டர்நெட் மற்றும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வெளி தொடர்பு இல்லாமல் தன் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றினான்  ஹீரோ என்பது தான் மிச்ச படம். 

படம் பரபரவென்று நகர்கிறது. இக்கட்டான நேரத்தில் Hammond வந்து காப்பாற்றுகிறார். 

கடைசியில் ஒரு த்ரில்லிங்கான க்ளைமேக்ஸ். 

லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் பெரிதாக குறைகள் இல்லை. 

நல்ல டைம் பாஸ் திரைப்படம். 

IMDb Rating : 6.8/10

Available in Amazon Prime Video 

Director: John Erick Dowdle

Cast: Owen Wilson, Lake Bell, Pierce Brosnan, Sterling Jerins, Claire Geare, Sahajak Boonthanakit

Screenplay: John Erick Dowdle & Drew Dowdle

Cinematography: John Erick Dowdle

Music: Marco Beltrami & Buck Sanders

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Sea – ப்ளாக் ஸீ – 2014Black Sea – ப்ளாக் ஸீ – 2014

Black Sea – ப்ளாக் ஸீ – 2014 Movie Review In Tamil  இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன

The Menu – 2022The Menu – 2022

The Menu Tamil Review  ஒரு வேளை சாப்பாட்டுக்கு $1250 (₹1L +) காசு கொடுத்து ஒரு தீவுக்கு போற எலைட் குரூப் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம்.  அதுல ஹீரோயின் எதிர்பாராதவிதமாக மாட்டுகிறாள். யாராவது இங்கிருந்து தப்பித்தார்களா என்பதை படத்தில்

Talk To Me – 2022Talk To Me – 2022

Talk To Me – 2022 – Review தனிமை, சோகம் மற்றும் விரக்தி ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ஹாரர் கலந்து சொல்லும் படம். ⭐⭐⭐.75/5Tamil ❌ அம்மாவை இழந்த ஒரு பெண் Mia அவளின் ப்ரண்ட் மற்றும்