Lone Survivor – லோன் சர்வைவர் – 2013
உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இராணுவ ஆக்ஷன் திரைப்படம்.
இராணுவம் பற்றிய திரைப்படம் என்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்க ராணுவத்தில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள் டைட்டிலோடு காட்டப்பட்டுகிறது.
4 பேர் கொண்ட ஒரு சின்ன படைவீரர்கள் குழு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிக்குள் செல்கிறது. தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவன் ஒருவன் ஆன ஷா அந்த மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கிறான். ஷாவை உயிருடன் பிடிப்பது அல்லது கொல்வது இந்த இராணுவ வீரர்களின் மிஷன்.
மிகவும் கடினமான தட்பவெப்ப நிலை மற்றும் சூழ்நிலையில் நால்வரும் மலைப்பகுதியில் விமானம் மூலமாக இறங்கி கால்நடையாக கிராமத்தை நோக்கி நகர்கின்றனர். இவர்களுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சினை தங்களது கமாண்ட் சென்டருடன் தொடர்பு கொள்வது. மலைப்பகுதியில் சிக்னல் கிடைக்கால் போய் விடும் என முதலிலேயே சொல்லி விடுகிறார்கள்.
கிராமத்துக்கு போகும் வழியில் எதிர்பாராத விதமாக ஆடு மேய்க்க வரும் மூன்று பேர் இவர்களை பார்த்து விடுகின்றனர். அப்போது எடுக்கும் ஒரு முடிவு இவர்கள் மிஷினை எவ்வாறு மாற்றுகிறது என்பது மீதிக்கதை.
நான்கு வீரர்களாக Mark Wahlberg, Taylor Kitsch, Emile Hirsch, Ben Foster ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் தலைப்பை பார்த்தவுடன் தெரிந்து இருக்கும் இதில் ஒருவர் தான் உயிரோடு திரும்புவார் என்று. அவர் மட்டும் எப்படி தப்பினார் என்பது தான் மெடிக்கல் மிராக்கிள்…
ஆக்ஷன் காட்சிகள் செம அதிரடி… அதிலும் மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில் வீரர்கள் தவறி விழும் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களை காப்பாற்ற ஹெலிகாப்டரில் வரும் குழுவிற்கு நேரும் முடிவு எதிர்பாராத ஒன்று.
படம் செம ஸ்பீடாக பரபரவென நகர்கிறது … கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
IMDb Rating : 7.5/ 10
Available in Netflix India
Director: Peter Berg
Cast: Mark Wahlberg, Taylor Kitsch, Emile Hirsch, Ben Foster, Eric Bana
Screenplay: Peter Berg
Cinematography: Tobias A. Schliessler
Music: Steve Jablonsky