Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013

ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம். 

இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone.

படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான். 

Phil Broker (Jason Statham) அமெரிக்க அரசின் போதை பொருள்கள் தடுப்புபபிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்து விட தன் சிறு குழந்தையுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டை வாங்கி செட்டில் ஆகிறார். 

குழந்தையின் பள்ளியில் ஒரு பையன் மகளை வம்புக்கு இழுக்க அது கைகலப்பில் முடிகிறது. பையனின் அம்மா தன் கணவனை விட்டு Phil-,ஐ அடிக்க சொல்ல நொடிப்பொழுதில் அவனை அடித்து காலி பண்ணுகிறார் . 

இதனால் கடுப்பான அவள் தன் தம்பியும் லோக்கல் போதைப் பொருள் கூட்டத்தின் தலைவனான Gator (James Franco) உதவியை நாடுகிறார். 

Gator –  Phil Broker  வீட்டில் அவன் இல்லாத நேரம் உள்ளே நுழைந்து பழைய ஃபைல்களை நோண்டி அவனுக்கும் ஒரு பைக் கேக் தலைவனுக்கும் இடையே உள்ள பழைய பகையை கண்டுபிடிக்கிறான்.

பழைய பகையாளிகள் இரண்டு பேரையும் கோர்த்து விட்டு அதன் மூலம் தன் போதைப் பொருள் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுகிறான். 

அப்புறம் என்ன பழைய எதிரி பெரிய குரூப்பாக பயங்கரமான ஆயுதங்களுடன் வருகிறார்கள்.  இதிலிருந்து தனியாளாக மகளை காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ். 

ஆக்ஷன் படங்களுக்கே உரித்தான டெம்ப்ளேட்… Jason Statham இருப்பதால் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. 

சின்ன படம் என்பதால் பரபரவென நகர்கிறது . நல்ல டைம் பாஸ் திரைப்படம். 

IMDb Rating: 6.5/10

Available in Prime Video

Director: Gary Fleder

Cast: Jason Statham, James Franco, Izabela Vidovic, Winona Ryder, Rachelle Lefevre, Kate Bosworth, Clancy Brown, Frank Grillo

Screenplay: Sylvester Stallone, based on the novel by Chuck

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

6 அண்டர்கிரவுண்ட் (6 Underground)6 அண்டர்கிரவுண்ட் (6 Underground)

 6 அண்டர்கிரவுண்ட் (6 Underground) இது ஒரு ஆக்ஷ்ன் மசாலா திரைப்படம். ஒரு வார இறுதியில் பார்க்க ‌சிறந்த படம் நம்ம ஊரு ரஜினி , விஜய் படங்கள் வரிசையில்  சேர்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.  அதனால் லாஜிக் பார்ப்பவர்கள்

Ponniyin Selvan – 2022Ponniyin Selvan – 2022

Ponniyin Selvan Review – பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்  நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன்.

Alienoid – 2022 – KoreanAlienoid – 2022 – Korean

Alienoid Korean Movie Review In Tamil வேற்றுகிரக ஏலியன்கள் மனிதர்களுக்கே தெரியாமல் அவங்க கைதிகளை மனிதர்களின் மனதில் சிறை வைக்கிறார்கள்.  ஏலியன்கள் மனிதர்களின் மனதில் இருந்து தப்பித்தால் என்ன ஆகும்.  Sci Fi, Multiverse, Time Jump, Fantasy, Magic,