Edge Of Darkness – எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ் -2010
பிரபல ஹீரோவான Mel Gibson (Brave heart) நடிப்பில் வெளியான கொஞ்சம் மர்மம் கலந்த ஆக்ஷன் திரைப்படம்.
போலீஸ் அதிகாரி Craven (Mel Gibson) அவரது மகள் Emma ( Bojana Novakovic)வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
மகள் ஒரு நாள் திடீரென அப்பாவை பார்க்க வருகிறார். ஆரம்பத்தில் நன்றாக இருக்கும் Emma , சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுக்கிறார். ஆஸ்பத்திரிக்கு கிளம்பி வெளியே வரும் இருவரில் மகளை கொடுரமாக சுட்டுக் கொல்கின்றனர் ஒரு கும்பல்.
முதலில் Craven – க்கு வைக்கப்பட குறி தவறி அவரது மகள் கொல்லப்பட்டதாக காவல்துறை விசாரணையை துவக்குகிறது. ஆனால் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கும் Craven தனிப்பட்ட முறையில் விசாரணையில் இறங்குகிறார்.
இந்த விசாரணையில் தன் மகள் வேலை பார்க்கும் நிறுவனம் சட்டவிரோதமாக அணு ஆயுதங்களை தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார்.
ஆனால் அந்த நிறுவனம் மிகுந்த அதிகாரம் மிகந்ததாகவும் அரசு அதிகாரிகள் மற்றும் பல அரசு துறைகளை சேர்ந்தவர்களை தன் கைக்குள் வந்திருப்பது தெரிய வருகிறது.
மகளுக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஏதோ பிரச்சினை அதன் காரணமாகவே மகள் கொல்லப்பட்டதையும் கண்டுபிடிக்கிறார்.
சட்டப்படி எதுவும் செய்ய இயலாமல் தனி ஆளாக பழிவாங்கும் படலத்தில் இறங்குகிறார் Craven .
அதிகாரம் மற்றும் பணபலம் நிறைந்த கம்பெனியை எதிர்த்து வெற்றி பெற்றாரா என்பதை படத்தில் பாருங்கள்.
Mel Gibson – தனி ஆளாக படத்தை நகர்த்துகிறார். நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர் காணமல் போகின்றனர்.
இது பரபரவென செல்லும் அதிரடி ஆக்ஷன் படம் கிடையாது. கொஞ்சம் மெதுவாக செல்லும் ஸ்லோ பர்னர் வகையான படம்.
Mel Gibson – ,க்காக ஒரு முறை பார்க்கலாம்.
IMDb Rating : 6.8/10
Available in Amazon Prime video
Director: Martin Campbell
Cast: Mel Gibson, Ray Winstone, Danny Huston, Bojana Novakovic, Shawn Roberts, David Aaron Baker, Jay O. Sanders
Screenplay: William Monahan and Andrew Bovell, based on the television series by Troy Kennedy Martin
Cinematography: Phil Meheux
Music: Howard Shore