2020 ஆம் ஆண்டில் வெளிவந்த 1.5 மணி நேரம் ஓடக்கூடிய டாக்குமெண்டரி படம் தான் மை ஆக்டோபஸ் டீச்சர்.
இந்த வருடம் சிறந்த ஆவணப்பட பிரிவில் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இது தென் ஆப்ரிக்காவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் பாசிகள் சூழ்ந்த பகுதியில் வசித்து வரும் ஒரு ஆக்டோபஸ்க்கும் அதே பகுதியில் உள்ள ஊரில் வாழ்ந்து வரும் Craig Foster என்ற மனிதருக்கும் இடையே உண்டான ஒரு நட்பு/பாசம்/கனெக்சன் பற்றிய ஆவணப்படம்.
நீர் மூழ்கி வீரரான Craig Foster கடல் பாசிகள் உள்ள பகுதிக்கு சென்று வருகிறார். ஒரு முறை அங்கு ஒரு ஆக்டோபஸை சந்திக்கிறார் . இவரை கண்ட உடன் ஓடிச்சென்று அதன் மறைவிடத்தில் ஒளிந்து கொள்கிறது. இந்த நடவடிக்கை Craig – ன் ஆர்வத்தை தூண்டுகிறது. தினமும் ஆக்டோபஸை சந்திப்பதற்காக வருகிறார்.
ஆரம்பத்தில் பயப்படும் ஆக்டோபஸ் சிறிது காலத்தில் இவருடன் பழக ஆரம்பிக்கிறது. Craig – ஆக்டோபஸ் உடன் பயணிக்கிறார். அதன் பழக்க வழக்கங்கள், வேட்டையாடும் முறை போன்ற ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த ஆக்டோபஸை பின் தொடர்ந்து அதன் தினசரி நடவடிக்கைகளை படம் பிடிக்கிறார்.
ஆக்டோபஸ் அறிவுள்ள பிராணி என்பது தெரியும் ஆனால் மனிதனுடன் பழகும் அளவிற்கு அறிவுள்ளது என்பது மிகுந்த ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.
ஆக்டோபஸ் அதன் பரம எதிரியான பைஜாமா சுறாக்களிடம் இருந்து தப்பிக்க அது செய்யும் ஜாலங்கள் அருமை.
கடைசியில் ஆக்டோபஸ்ஸுக்கு நேரும் முடிவு வருத்தம் அளிக்கிறது.
Craig Foster ன் அர்ப்பணிப்பு ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக தினமும் ஆக்டோபஸை தொடர்ந்து சென்று படம்பிடிப்பது என்பது சாதாரண காரியமல்ல..
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாக்குமெண்டரி… கண்டிப்பாக பாருங்கள்…
Don’t miss this … Must watch …
IMDb Rating: 8.1/ 10
Available in Netflix
Directors: Pippa Ehrlich, James Reed
Cast: Craig Foster