Minari – மினாரி – 2021

Minari  Tamil Review- மினாரி – 2021

இந்த வருடம் ஆஸ்கார் விருது (சிறந்த துணை நடிகைக்கான) வாங்கிய திரைப்படம் . 

அமெரிக்க திரைப்படம் என்றாலும் கொரிய குடும்பத்தை பற்றிய படம் என்பதால் பெரும்பாலும் கொரிய மொழி பேசப்படுகிறது. 

minari movie review in tamil, minari cast, minari review , academy award winner, minari movie, Korean movie, minari ending explained, Steven Yuen, kim

படத்தின் கதை ஒன்றும் பெரிதாக இல்லை. 1980 – களில் தென்கொரியாவில் இருந்து பிழைப்புக்காக அமெரிக்காவிற்கு வரும் ஒரு கொரிய குடும்பத்தின் வாழ்கையின் ஒரு பகுதியை படமாக எடுத்து இருக்கிறார்கள். 

படத்தின் ஹீரோவுக்கு பெரிய பண்ணை அமைத்து அதில் கொரிய காய்கறிகள், பழங்களை விளைய வைத்து அதை விற்று காசு பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் ஊருக்கு மிக ஒதுக்கு புறமாக ஒரு பெரிய இடத்தை வாங்கி குடும்பத்துடன் அதன் அருகே குடி வருகிறான். ஆனால் மனைவிக்கு அங்கு வருவதில் பெரிதாக உடன்பாடு இல்லை. 

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஹீரோவுக்கு. மனைவி பக்கத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழிக்குஞ்சுகளை இனம் பிரிக்கும் வேலை பார்க்கிறார்.

குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன் மனைவியின் அம்மாவை தென் கொரியாவில் இருந்து வர வழைக்கிறான். 

பேரனுக்கு பாட்டியை சுத்தமாக பிடிக்காமல் போகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் சிறு சிறு மனத்தாங்கல்கள் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் பிரிய முடிவெடுக்கின்றனர். 

ஆனால் கடைசியில் நடக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் இணைத்து குடும்பம் தான் முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது. 

சிறுவன் செம க்யூட்டாக இருக்கிறான்… நன்றாக நடித்து இருக்கிறான். மனதில் டக்கென்று ஒட்டிக்கொள்கிறான். 

பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண் செம கலக்கல். இவருக்கு தான் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 

பாட்டியும் பேரனும் வரும் காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது. 

கதாநாயகனாக Steven Yuen ( Walking dead – தொடரில் இவர் பிரபலம்) முதிர்ந்த நடிப்பு . அவரது மனைவி கதாபாத்திரத்தில் வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மொத்தத்தில் இயக்குனர் Lee Isaac Chung ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். 

மெதுவாக நகரும் படம் தான் ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 

IMDb Rating :  7.6/10

Available in Amazon Prime 

Directed by

Lee Isaac Chung

Produced by

Dede Gardner

Jeremy Kleiner

Christina Oh

Written by

Lee Isaac Chung

Cast: 

Steven Yeun

Han Ye-ri

Alan Kim

Noel Kate Cho

Youn Yuh-jung

Will Patton

Music by

Emile Mosseri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019

The Peanut Butter Falcon – தி பினட் பட்டர் ஃபால்கன் -2019 Movie Review In Tamil  இந்த படம் Down Syndrome – நோயினால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞன் செய்யும்  அட்வென்ட்சர் பற்றியது. இது ஒரு நல்ல

Unhinged – அன்ஹிஞ்ட் – 2020Unhinged – அன்ஹிஞ்ட் – 2020

Gladiator பட ஹீரோ Russell Crowe நடிச்ச திரில்லர் படம் இது. அவரு வேற தாடி வைச்சு வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். படம் டைட்டில் போடும்போதே எத பத்தினு ஒரு ஐடியா கிடைச்சது.  ட்ராஃபிக்ல போடுற சண்டை, பொதுவாக

How to train your dragon – ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் – 2010How to train your dragon – ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் – 2010

How to train your dragon Tamil Review  இது பெர்க் என்னும் கிராமத்தில் அட்டூழியம் செய்யும் ட்ராகன்களை ஹிக்கப் எனும் ஊர் தலைவரின் மகன் புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தி ஊரைக் காப்பாற்றுவது பற்றிய கதை. மிக அருமையான திரைப்படம். குழந்தைகள், பெரியவர்கள்