Just Mercy – ஜஸ்ட் மெர்சி – 2020

Just Mercy Tamil Review 

Jamie Foxx (Django Unchained,  Collateral , Project Power) பெயர் இருந்ததால் பார்த்த படம். உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

 ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் அமெரிக்காவின் நிறவெறியை மையப்படுத்தி வந்துள்ள இன்னும் ஒரு படம். 

Just Mercy movie review in tamil, Just mercy on amazon prime, just mercy movie, Jamie Foxx, just mercy cast, Bryan Stevenson, black lives matter

படத்தின் ஹீரோ Michael B. Jordan … Bryan கதாபாத்திரத்தில் இளம் வக்கீலாக வருகிறார். 

Bryan கறுப்பினத்தை சேர்ந்த ஒரு திறமையான சட்டக்கல்லூரி மாணவர். படித்து முடித்தவுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் கைதிகளின் தண்டனையை குறைக்க முயற்சி செய்கிறார். 

இந்நிலையில் இளம்பெண் கொலையான வழக்கில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் Walter (Jamie Foxx) ஐ சந்திக்கிறார். 

Walter – கேஸ் ஃபைலை ஆராய்ந்து பார்க்கும் Bryan எக்கச்சக்க ஓட்டைகளை கண்டுபிடிக்கிறார். அதை வைத்து கேஸ்ஸை மீண்டும் திறக்க முயல்கிறார்.  ஆனால் பல இடங்களில் இருந்து மிரட்டல்கள் வருகிறது. 

மேலும் ஆராயும் போது ஒருவர் சொல்லிய சாட்சியின் மூலமாக தான் வால்டருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்கிறார். அவரோ இன்னொரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை சரிகட்டி வால்டரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினாரா என்பது முடிவு. 

கறுப்பு இன மக்களை எவ்வளவு கேவலமான முறையில் நடத்துகின்றனர் என்பதை பல இடங்களில் காட்சிப்படுத்தி உள்ளனர். உதாரணமாக பிரையன் வக்கீலாக இருந்தாலும் உடையை கழட்டச் சொல்லி சோதனை செய்வது, போலீஸ்காரர்கள் இவரது காரை நிறுத்தி காரணமே இல்லாமல் மிரட்டுவது என பல காட்சிகளை சொல்லலாம். 

கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய வக்கீலின் வாழ்க்கையை படமாக எடுத்து உள்ளனர் . கண்டிப்பாக பார்க்கலாம். 

IMDb Rating : 7.6

Director: Destin Daniel Cretton

Cast: Michael B. Jordan, Jamie Foxx, Brie Larson, Tim Blake Nelson, Rafe Spall, O’Shea Jackson Jr.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Spy – தி ஸ்பை (2019) – Season 1The Spy – தி ஸ்பை (2019) – Season 1

இது நெட்பிளிக்ஸ் வெளியிட்ட மினி சீரிஸ்.  ஒரு சீசன் அதில் 6 எபிசோட்கள் உள்ளது.  சில சீரிஸ்களை பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அந்த வகையை சேர்ந்த தொடர் இது. ஒரே மூச்சில் 6 எபிசோட் களையும் பார்த்து முடித்து விட்டேன். 

Spartacus – Season 1 – Blood and SandSpartacus – Season 1 – Blood and Sand

இந்தத் தொடர் பண்டையகால ரோமப் பேரரசு ஆட்சியில் வாழ்ந்த ஸ்பார்ட்டகஸ் என்னும் வீரனின் வாழ்க்கையை பற்றிச் சொல்லும் தொடர்.  முதல் சீசன் –  Blood and Sand இந்த சீசனில் ஸ்பார்ட்டகஸ் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு சிறிய கிராமத்தில் மனைவியுடன் வாழ்ந்து

Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)Color Out Of Space – கலர் அவுட் ஆஃப் ஸ்பேஸ் (2019)

 இந்த படம் Prime Video recommendation section -ல் வந்தது அதுவும் தமிழ் ஆடியோவோட இருந்தது. ஹாரர், படம் summary+போஸ்டர்ஸ் பார்த்தா ஏலியன் படம் மாதிரி இருந்தது… ஹீரோ வேற  Nicholas Cage .இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த படத்தை