Army of the dead – ஆர்மி ஆஃப் தி டெட் (2021)

Army of the dead – ஆர்மி ஆஃப் தி டெட் (2021) – Tamil Review 

எனக்கு ரொம்பவே பிடித்த ஜாம்பி வகையை சேர்ந்த படம். 
300, Wonder Women போன்ற திரைப்படங்களை இயக்கிய Zack Snyder என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. 
Army of the dead movie review in tamil, army of the dead Netflix , army of the dead in Netflix, Zack Snyder director, zombie apocalypse, las vegas

இது Heist மற்றும் ஜாம்பி திரைப்படங்களின் கலவையாக வந்துள்ளது. நீங்கள் நினைப்பது சரிதான் லேசாக Train to Busan 2  திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது. 
படத்தின் ஆரம்பத்தில் இராணுவம் ஒரு பெட்டியில் எதையோ பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்கிறது. எதிர்பாராமல் நிகழும் விபத்தில் அந்த பெட்டியில் இருந்து ஒரு ஜாம்பி தப்பிக்கிறது. 
இது சாதாரண ஜாம்பி போல மெதுவாக நகராமல் செம ஸ்பீடாக நகர்கிறது, ஓடுகிறது,  குதிக்கிறது , வேட்டையாடுகிறது. 
பாதுகாப்புக்கு வந்த அனைவரையும் கொன்று ஜாம்பியாக மாற்றி விடுகிறான். 
இந்த ஜாம்பி கூட்டம் அருகில் இருக்கும் லாஸ் வேகாஸ் நகருக்குள் புகுந்து எல்லாரையும் கடித்து ஜாம்பியாக மாற்றி விடுகிறது. அமெரிக்க அரசு லாஸ் வேகாஸ் பகுதியை தனிமைப்படுத்தி விடுகிறது. 
சிறிது காலம் கழித்து ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் ஹீரோ ஸ்காட்  (Dave Bautista) தொடர்பு கொள்கிறான் பெரிய பணக்காரணான Tanaka . ஜாம்பிகளால் சூழப்பட்ட ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பான ஒரு லாக்கருக்குள் 250 மில்லியன் டாலர்கள் பணம் இருப்பதாகவும் அதை எடுத்து வந்தால் அதில் பாதியை நீயே எடுத்துக் கொள்ளலாம் என்கிறான். 
ஆனால் அமெரிக்க அரசு 2 நாளில் அணு ஆயுதங்களை கொண்டு முழு நகரத்தையும் அழிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்குள் திரும்ப வேண்டும் என்றும் சொல்கிறான். 
இந்த இடைவெளியில் தன்னுடைய குழுவை சேர்த்து உள்ளே நுழைய தயாராகிறான் ஸ்காட். எதிர்பாராத விதமாக ஹீரோவின் மகளும் இந்த குழுவில் இணைய சென்டிமென்ட் காட்சிகள் உள்ளது என்பது தெளிவாகிறது.
ஒரு வழியாக உள்ளே நுழையும் குழு சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதனை தாண்டி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே தப்பித்து வந்தார்களா என்பது க்ளைமாக்ஸ். 
வேகமாக நகரும் ஜாம்பிகள், குழுவாக செயல்படும் ஜாம்பிகள், ஜாம்பி புலி என வித்தியாசமாக வருவது நன்றாக உள்ளது. 
நம்ம காலா படத்தில் நடித்த ஹிமா குரோஷி ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 
2 1/2 மணி நேரம் ஓடும் படம் என்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. இன்னும் கொஞ்சம் கிரிஸ்ப்பாக இருந்து இருக்கலாம். 
கிராஃபிக்ஸ் , சண்டைக்காட்சிகள், கேமரா என அனைத்தும் அருமை. 
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 
நெட்பிளிக்ஸ்ஸில் வெளியாக உள்ளது. 
Director : Zack Snyder 
Cast: 
Scott Ward (Dave Bautista),  Maria Cruz (Ana de la Reguera), Vanderohe (Omari Hardwick),  Marianne Peters (Tig Notaro),  Ludwig Dieter (Matthias Schweighöfer) ,Mikey Guzman (Raúl Castillo), Huma Qureshi, Ella Purnell and Nora Arnezeder 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Trollhunter – 2010Trollhunter – 2010

இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம்.  இந்த படம் முழுவதும் Live Footage  வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த

The Woman King – 2022The Woman King – 2022

The Woman King – 2022 ஆப்பிரிக்காவில் 1800 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆக்சன் படம்.  படம் நல்லா இருக்கு ✅ கண்டிப்பாக பார்க்கலாம் 👍 IMDb 6.7 🟢| RT 94% 🟢 Tamil

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean SeriesSweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series

Sweet Home – ஸ்வீட் ஹோம் (2020) – Korean Series Review In Tamil  இது ஒரு கொரியன் சீரிஸ்..  1 சீசன் அதில் 10 எபிசோட்கள்…  பேரை பார்த்த உடன் ஏதோ குடும்ப உறவுகள் சம்மந்தப்பட்ட தொடர் என்று