Sixth Sense , The Village, Signs போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்த இயக்குநர் M. Night Shyamalan இயக்கத்தில் வந்த ஒரு அருமையான psychological thriller படம் தான் Split.
படத்தின் ஆரம்பத்தில் மூன்று இளம்பெண்களை Casey(Anya Taylor -Joy – The Queen’s Gamebit) , Claire (Haley Ku Richardson ), Marcia (Jessica Sula) கடத்துகிறான் Dennis (James McAvoy ) . மூவரையும் ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறான்.
மூவரும் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இந்நிலையில் Beast கூடிய விரைவில் வரப்போகிறது என்று சொல்கிறான்.
சரி ஏதோ சைகோ என நினைக்கும் வேளையில் திடீரென என் பெயர் Patricia என்று சொல்லி பெண்மை கலந்த குரலில் பேசுவதுடன் பெண் போல உடை அணிந்து வருகிறான். அடுத்து கொஞ்ச நேரத்தில் Hedwig எனும் பெயரில் சிறுவன் போல பேசுகிறான்.
பெண்கள் மூவரும் மரண பீதியில் குழப்பத்தின் உச்சிக்கு போகின்றனர்.
Casey – க்கு சிறிது சிறிதாக இவன் DID (dissociative identity disorder) அதாங்க Multiple Personality Disorder… சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறுவது, அந்நியன் படத்தில் விக்ரம் ரெமோ மற்றும் அந்நியநாக மாறி மாறி வருவது .. அதே போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என தெரிய வருகிறது.
ஆனால் இப்ப வந்து வந்து போகும் Dennis, Patricia மற்றும் Hedwig போன்றவர்கள் கொஞ்சம் நல்லவர்கள் என்றும் Beast வந்தால் உயிர் போவது உறுதி என்று தெரிந்து கொள்கிறாள்.
இந்நிலையில் எவ்வாறு இந்த பெண்கள் தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.
இந்த படத்தை ஹாரர் , திரில்லர் என எதிலும் சேர்க்க முடியாது ஆனால் படம் மெதுவாக சென்றாலும் போரடிக்காமல் போகிறது.
அதுவும் கடைசி 30 நிமிடங்கள் செம பரபரப்புடன் நகர்கிறது.
நடிப்பில் James McAvoy பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். ஒவ்வொரு Split Personality மாறி வரும் போது அவருடைய பாடி லாங்க்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பு அருமை.
அவன் உடம்பில் குடியிருக்கும் மொத்த personalities மற்றும் கடைசியில் வரும் Beast கதாபாத்திரம் என ஆச்சர்யம் கொடுக்கும் ட்விஸ்ட் நிறைய உள்ளது.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய அருமையான படம்.
Director: M. Night Shyamalan
Cast: James McAvoy, Anya Taylor-Joy, Haley Lu Richardson, Jessica Sula, Betty Buckley
Screenplay: M. Night Shyamalan
Cinematography: Michael Gioulakis
Music: West Dylan Thordson
IMDb Rating: 7.3/ 10
Available in Netflix