His House – ஹிஸ் கவுஸ் (2020)

இது UK – வில் இருந்து வந்த ஒரு பேய் படம். பேய் படம் என்பதை விட ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் படம் என்றால் சரியாக இருக்கும். 

சூடானில் நடக்கும் உள்நாட்டு போரில் சிக்கிய ஒரு கருப்பின தம்பதியினர் (Bol – Sope Drisu மற்றும் Rial – Wummi Mosaku) குழந்தையுடன் கள்ளப் படகில் தப்பி இங்கிலாந்து வருகின்றனர். ஆனால் வரும் வழியில் கடலில் நடந்த விபத்தில் குழந்தையை பறிகொடுத்து விடுகின்றனர். 
இங்கிலாந்து வந்து சேர்ந்த பின்பு காவலில் வைக்கப்படுகின்றனர். சிறிது காலம் கழித்து பல நிபந்தனைகளுடன் ஒரு வீடு கொடுக்கிறது அரசு. 
Bol புதிய வாழ்க்கை தொடங்கலாம் என சந்தோஷமாக உள்ளான். ஆனால் Rial குழந்தை இறந்த நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாமல் தவிர்க்கிறார். 
இந்நிலையில் இரவு நேரங்களில் வீட்டின் சுவருக்குள் இருந்து பல விதமான சத்தங்கள் கேட்கிறது. திடீர் திடீரென்று கோரமான உருவங்கள் சுவரில் இருந்து வந்து Bol – ஐ பயமுறுத்துகிறது.‌ குறிப்பாக அவர்களுடைய இறந்து போன மகளின் உருவத்துடன் கொடூரமான ஒரு பேய் அடிக்கடி வருகிறது. 
ஆனால் Rial – ன் கணிப்புப்படி அவர்கள் கடலில் பயணம் செய்து வந்தபோது கூடவே வந்த ஒரு சூனியக்காரன் இங்கு உள்ள வீட்டில் இருக்கிறான் என்றும் அவனுக்கு தேவையானது கிடைக்கும்வரை அவன் அவர்களை விட மாட்டான் என்றும் கூறுகிறாள். 
இதற்கு நடுவில் பேயை கொல்லுகிறேன் என்று சொல்லி வீட்டை சேதப்படுத்தி விடுகிறான். குடியுரிமை அதிகாரிகள் இதனை பார்த்து இந்த தம்பதியினரை சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு உதவி செய்கின்றனர். 
இந்த பிரச்சனையிலிருந்து மீண்டார்களா மற்றும் குடியுரிமை கிடைத்ததா என்பதை படத்தில் பாருங்கள். 
படம் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த அகதிகள் பற்றிய படம் என்பதாலோ என்னமோ ஒரு சோகத்துடன் நகர்கிறது. பேய்கள் வரும் காட்சிகள் கிளாசிக் திகில் படங்களை ஞாபகப் படுத்துகிறது. கடைசியில் ஒரு நல்ல ட்விஸ்ட் உடன் முடிகிறது.
சொற்பமான கதாபாத்திரங்கள் தான் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 
நல்ல ஒரு திகில் படம் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். 
IMDb Rating : 6.5/ 10
Available in Netflix 
Director; Remi Weekes
Stars: Sope Dirisu, Wunmi Mosaku, Matt Smith

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

எ கொயட் பிளேஸ் (A quiet place)எ கொயட் பிளேஸ் (A quiet place)

எ கொயட் பிளேஸ் (A quiet place) சமீபத்தில் பார்த்த அருமையான திகில் திரைப்படம்.  நாம் கொஞ்சம் சத்தமாக பேசினாலோ அல்லது வேறு ஏதேனும் சத்தம் கேட்டாலும் ஏலியன் போன்ற மிருகம் வந்து கொடுரமாக கொல்கிறது. எதிர்பாராத விதமாக மகன் மிருகத்தின்

m3gan – 2022m3gan – 2022

m3gan Tamil Review  ⭐⭐⭐.5/5  #scifi #horror #Tamil ❌ – வில்லன் சிட்டி ரோபோட்டின் குட்டி வெர்சன் – மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் படி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ‌ பொம்மை உருவாக்கியவர்களை கொல்ல முயற்சி செய்கிறது – எளிமையான

You Won’t Be Alone – 2022You Won’t Be Alone – 2022

ஒரு வித்தியாசமான ஸ்லோவான ஹாரர் படம்.  ஒரு சூனியக்காரி கொஞ்சம் கொஞ்சமாக மனித உணர்வுகளை புரிந்து கொள்வதைப் பற்றிய படம் இது.  நிறைய ரத்தக்களரி + Sexual சீன்ஸ் இருக்கு.  So not for everyone ❌ 19 வது நூற்றாண்டில்