The Queen’s Gambit – தி குயின்ஸ் கேம்ஃபிட்(2020)

The Queen’s Gambit – தி குயின்ஸ் கேம்ஃபிட்(2020) 

செஸ் விளையாட்டை மையமாக நெட்ப்ளிக்ஸ்ஸில் வெளிவந்துள்ள லிமிடெட் சீரிஸ். 

இந்த தொடர் Elizabeth Harmon (Anya Taylor – Joy) எனும் ஒரு பெண் செஸ் வீராங்கனையை சுற்றி நகர்கிறது. 
the Queen's Gambit review in tamil, Queens Gambit cast, Anya Taylor joy, IMDb Queen's Gambit, netflix queen's gambit,chess Olympiad Chennai 2022

9 வயதில் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் எலிசபெத் அதே விபத்தில் தாயை இழந்து அநாதை ஆகிறார். 
அரசாங்கம் இவரை ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்கிறது. அங்கு பணிபுரியும் Mr.Shaibel (Bill Camp) பேஸ்மென்ட்டில் தனியாக செஸ் விளையாடுவதை பார்க்கிறார். தினமும் கவனித்து வருகிறார். 
ஒருமுறை எவ்வாறு விளையாட வேண்டும் என்று கேட்கிறார். அவர் உனக்கு இந்த விளையாட்டை பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். எனக்கு இந்த விளையாட்டின் பெயர் கூட தெரியாது ஆனால் King , Rook, Queen, knight என ஒவ்வொன்றும் எவ்வாறு நகரும் என்பதை சரியாக சொல்கிறார். 
இதனால் வியப்படையும் Shaibel செஸ் விளையாட்டை சொல்லித்தர ஆரம்பிக்கிறார். இயற்கையாகவே விளையாட வருகிறது எலிசபெத்க்கு. விரைவிலேயே Shaibel-ஐ வீழ்த்துகிறார். 
இதன் பின்னர் Shaibel தகவல் கொடுத்ததன் பெயரில் பக்கத்தில் உள்ள பெரிய பள்ளியில் இருக்கும் செஸ் கிளப்பில் இருந்து ஒருவர் வந்து செஸ் விளையாட அங்கு வருமாறு அழைக்கிறார். 
செஸ் கிளப்பில் ஒரே நேரத்தில் 12 நபர்களுடன் விளையாடி அனைவரையும் வீழ்த்துகிறார். 
இந்நிலையில் ஒரு தம்பதி எலிசபெத்தை தத்து எடுக்கின்றனர். சிறிது காலத்தில் அவரின் வளர்ப்பு தந்தை விட்டு விட்டு போய் விடுகிறான். தன் வளர்ப்பு தாய் Alma – உடன் இருவரும் பணமில்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் Shaibel உதவியுடன் 5 டாலர்கள் நுழைவு கட்டணம் செலுத்தி 100 டாலர்களை ஒரு செஸ் டோர்னமென்ட்டில் வெல்கிறார். 
இதிலிருந்து செஸ் விளையாட்டை தன் வாழ்க்கையாக்கி கொள்கிறார். அவரது வளர்ப்புத் தாயும் பணம் கிடைக்கிறது என்பதால் இதற்கு சம்மதிக்கிறார். 
இதிலிருந்து பல ஊர்களுக்கு சென்று போட்டியில் பங்கேற்று எளிதாக வெற்றி பெற்று பெரும் பணம் சம்பாதிக்கிறார். 
செஸ் விளையாட்டு தான் பிரதானம் என்றாலும் பல கதாபாத்திரங்கள் வருகிறது. பல வீரர்களை தோற்கடித்தாலும் அனைவரும் ஒரு ஸ்போர்ட்டிவ் அப்ரோச் உடன் எடுத்துக் கொள்கிறார்கள். 
வெற்றி முகத்துடன் தொடரும் எலிசபெத்திற்கு ஒரு தோல்வியை கொடுக்கிறார் Borgov எனும் ரஷ்ய உலக சேம்பியன் . 
அதன் பிறகு மீண்டும் சிறிய இடைவெளியில் Borgov – உடன் ஒரு போட்டி வருகிறது இதில் வெற்றி பெற்றாரா என்பதை தொடரில் பாருங்கள். 
1960 – களில் நடக்கும் கதை அதற்கு ஏற்றவாறு லொக்கேஷன்கள் மற்றும் செட்டிங்குகள் அருமை. 
நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றனர் ஆனால் அனைவரும் மனதில் நிற்கின்றனர். குறிப்பாக சிறப்பான கடைசி எபிசோட். இந்த எபிசோடில் அனைத்து கதாபாத்திரத்திங்களையும் எமோஷனலாக கனெக்ட் செய்த விதம் அருமை. 
ரொம்ப பரபரப்பாக செல்லும் தொடர் கிடையாது. ஆனால் அடுத்த அடுத்த எபிசோட்களை பார்க்க தூண்டுகிறது. 
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக Anya Taylor – Joy கலக்கி இருக்கிறார். என்ன ஒரு அருமையான நடிப்பு. 
இசை, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. 
கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்… 
IMDb Rating : 8.8/ 10
Available in Netflix: https://www.netflix.com/title/80234304?s=a&trkid=13747225&t=cp
Creators: Scott Frank, Scott Allan, Allan Scott
Starring: Anya Taylor-Joy, Chloe Pirrie, Bill Camp
Number of Seasons: 1
Number of Episodes: 7
Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தி சின்னர் (The Sinner)தி சின்னர் (The Sinner)

தி சின்னர் (The Sinner) இந்த தொடர் சாதாரண மக்கள் திடீரென ஏன் கொடூரமான கொலைகளை செய்கிறார்கள் என்பதை பற்றி ஆராயும் தொடர். ஒவ்வொரு சீசனிலும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் குற்றங்கள் மற்றும் அதை ஏன் செய்தார்கள் என்பதை துப்பறியும் விதமாக

The Place Beyond The Pines(2012)The Place Beyond The Pines(2012)

இது ஒரு க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படம். 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகளை சொல்கிறது. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் கலவரம் எதுவும் பண்ணாமல் எளிமையான திரைக்கதை மூலம் படம் நகர்கிறது… Luke