இது ஒரு நகைச்சுவை கலந்த Money Heist பற்றிய திரைப்படம்.
Jimmy Logan (Channing Tatum) – ஒரு குகை பாதை உருவாக்கும் கட்டுமானத்தில் பணியாற்றி வருபவன். இவனுடைய மகள் முன்னாள் மனைவியிடம் வளர்கிறாள்.
ஒரு நாள் வேலை முடித்து விட்டு வரும் Jimmy – ஐ அழைக்கும் மேலாளர் அவனுடைய காலில் உள்ள சிறிய குறைபாட்டை காரணமாக காட்டி வேலையை விட்டு தூக்கி விடுகிறார்.
Jimmy -ன் சகோதரன் Clyde Logan (Adam Driver) நடத்தும் பாருக்கு செல்கிறான். முன்னாள் ராணுவ வீரரான Clyde போரில் ஒரு கை முழங்கை வரைக்கும் சேதமடைந்தால் போலியாக கை பொருத்தி உள்ளான். இருவரும் தங்கள் குடும்பத்தின் சாபக்கேடு பற்றி பேசுகிறார்கள்.
வீட்டிற்கு வரும் Jimmy தான் வேலை பார்த்த குகைக்கு அருகில் உள்ள கார் ரேஸ் நடக்கும் மைதானத்தில் கொள்ளையடிக்க திட்டம் இடுகிறார். அங்கு கவுண்டர்களில் வாங்கும் பணத்தை ட்யூப்களின் வழியாக பத்திரமான பெட்டகத்திற்கு அனுப்புகிறார்கள். அந்த பெட்டகத்தை உடைத்து திருட திட்டமிடுகிறான்.
முதலில் தன் சகோதரன் Clyde – ஐ கூட்டாளியாக சேர்க்கிறான். தன் உறவுக்கார பெண்ணான Mellie Logan (Riley Keough) -ம் தனது குழுவில் சேர்க்கிறார்.
இருவரும் இணைந்து பெட்டகம் திறப்பது மற்றும் வெடிவைத்து இடிப்பது போன்றவற்றில் நிபுணரான Joe Bang (நம்ம ஜேம்ஸ் பாண்ட் நடிகரான Daniel Craig சிறப்பு கதாபாத்திரம்) சிறையில் சந்தித்து உதவி கேட்கிறார்கள். Joe – அவனுடைய சகோதரர்கள் இருவரை சந்தித்து உதவி கேட்குமாறு சொல்கிறான்.
Joe – வின் சகோதரர்கள் செம காமெடி பண்ணுகிறார்கள்.. அவர்களையும் பேசி சரி கட்டி ஒரு வழியாக திட்டத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்கள்.
இதன் பிறகு தான் கதை பரபரப்பாக நகர்கிறது. Joe -வை எப்படி திருடு நடக்கும் நேரம் வெளியே கொண்டு வந்தார்கள்.. ட்யூப் வழியாக செல்லும் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தனர் என்பது Jimmy – ன் மாஸ்டர் பிளான்… கடைசியில் ஒரு ட்விஸ்ட் உடன் முடிகிறது.
ஆனால் இவ்வளவு சீரியசான படத்தை காமெடியாக நகர்த்தி செல்வது இயக்குனரின் திறமை.
எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக பொருந்தி உள்ளனர்.
தமிழ் டப்பிங்ல் அமேசான் ப்ரைமில் உள்ளது. டப்பிங் குரல்கள் மற்றும் தமிழ் வசனங்கள் செம காமெடியாக உள்ளது.
குறிப்பாக ஜெயிலில் நடைபெறும் போராட்டம் மற்றும் அதை வார்டன் கையாளும் விதம் கல கலப்பாக செல்கிறது.
சில வசனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய சிறப்பான பொழுது போக்கு திரைப்படம்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய காமெடி திரைப்படம்.
IMDb Rating : 7.0/10
Available in Amazon Prime – Watch Now
Director: Steven Soderbergh
Cast: Channing Tatum, Hilary Swank, Seth MacFarlane, Katie Holmes, Katherine Waterston, Sebastian Stan, Riley Keough, Daniel Craig, Adam Driver, David Denham
Screenplay: Rebecca Blunt
Cinematography: Steven Soderbergh
Music: David Holmes