To The Lake – Epidemiya- டு தி லேக் (2020) – Season 1

இது ஒரு நெட்பிளிக்ஸ் சீரிஸ். ரஷ்யாவில் இருந்து வந்துள்ள தொடர்… 

தொடரின் போஸ்டர்களை பார்த்தால் ஜாம்பிகள் பற்றிய தொடர் மாதிரி இருந்தது. அது போக உலகம் அழியும் போது தப்பிப்பதை பற்றிய தொடர் போல இருந்தது. 
To the lake Netflix review, to the lake Netflix, to the lake cast, to the lake imdb, epidemiya Russian Netflix series, haunting of bly manor, series

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒருவிதமான நோய் பரவுகிறது. நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் கண்கள் வெள்ளை நிறமாக மாறி இறந்து விடுகின்றனர். எப்படி இந்த நோய் வந்தது ? எவ்வாறு பரவுகிறது என்பது மர்மமாக உள்ளது. 
இந்நிலையில் நாயகன் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் மாஸ்கோவிற்கு வெளியே வசித்து வருகிறான். அப்போது அங்கு வரும் நாயகனின் அப்பா மிகப்பெரிய அழிவு இந்த நோயால் ஏற்படும் என்கிறார். 
தனக்கு சொந்தமான போட் ஒன்றை ஏரி ஒன்றில் புதுப்பித்து வைத்து உள்ளதாகவும் அது மாஸ்கோவில் இருந்து வெகுதொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதாக சொல்கிறார். இந்த கலவரம் முடியும் வரை அங்கு சென்று தங்கி விடலாம் என்கிறார். 
நாயகனின் முன்னாள் மனைவி மற்றும் அவன் ‌குழந்தை மாஸ்கோவில் வசிக்கின்றனர். அவர்களையும் சேர்த்து கொண்டு ஏரிக்கு செல்ல திட்டம் இடுகின்றான் நாயகன். 
நாயகன், அவன் மனைவி, முன்னாள் மனைவி, அவனுடைய 2 மகன்கள்(ஒரு சிறுவன் மற்றும் கொஞ்சம் வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட டீன் ஏஜ் பையன்) , நாயகனின் பணக்கார நண்பன், அவனுடைய கர்ப்பிணி மனைவி மற்றும் குடிக்கு அடிமையான மகள் மற்றும் நாயகனின் அப்பா என 3 கார்களில் கிளம்புகிறார்கள். 
போகும் வழியில் இந்த குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் குடும்ப உறவில் வரும் சிக்கல்களை மையமாக வைத்து நகர்கிறது இந்த தொடர். 
ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பாகவே செல்கிறது.  
இசை மற்றும் ஒளிப்பதிவு அருமை… அதுவும் பனி படர்ந்து இருக்கும் ரஷ்யாவின் அமைப்பு அழிவு சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு நன்கு பொருந்துகிறது. 
பெரிதாக தெரிந்த நடிகர்கள் எவரும் இல்லை .. அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். 
மனிதாபிமானம் , குடும்ப உறவில் வரும் சிக்கல்களை கலந்து எடுக்கப்பட்ட ஒரு சர்வைவல் தொடர் தான் இது. 
நல்ல டைம் பாஸ் கண்டிப்பாக பார்க்கலாம். 
IMDb Rating: 7.2/ 10
Available in Netflix 
Director: Pavel Kostomarov
Stars: Kirill Käro, Maryana Spivak, Viktoriya Agalakova, Viktoriya Isakova

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Trollhunter – 2010Trollhunter – 2010

இது நார்வேயில் இருந்து வந்துள்ள Sci Fi + Horror படம்.  இந்த படம் முழுவதும் Live Footage  வகையில் எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு கரடி வேட்டைக்காரனை பின் தொடர்ந்து வீடியோ எடுக்க முயலும் மாணவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவம் தான் இந்த

Shut In – 2022Shut In – 2022

ஒரே ரூமுக்குள் நடக்கும் ஹாரர் திரில்லர் இது.  இரண்டு சின்ன குழந்தைகளுடன் வசிக்கும் அம்மா ரூமுக்குள் மாட்டிக்கிறார். வெளியில் தனியாக விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து வருகிறது. உள்ளே இருந்து கொண்டு எப்படி அவர்களை காப்பாற்றினார் என்பது தான் படம்.  IMDb 6.4

Dead calm – 1989Dead calm – 1989

Dead calm tamil review  ஒரு துயர சம்பவத்தை மறக்க சொகுசு Boat ல் தனியாக பயணம் செய்யும் ஒரு ஜோடி. நடுக்கடலில் படகு மூழ்க போகிறது என தஞ்சம் அடையும் ஒருவன்‌. அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான்