The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019)

The Witcher – Season 1 – தி‌ விட்சர் (2019) post thumbnail image

The Witcher – Season 1 -2019  Series Tamil Review

இது ஒரு அமானுஷ்யம் நிறைந்த நெட்ப்ளிக்ஸ் தொடர். லொக்கேஷன்கள், ட்ராகன்கள் பதவி ஆசை என ஆங்காங்கே Game of thrones -ஐ ஞாபக படித்தினாலும் கதைக்களம் முற்றிலும் வேறுபட்டது.   

கதையில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் குறிப்பாக மூன்று கதாபாத்திரங்களை சுற்றியே படம் நகர்கிறது. 
The witcher netflix Series Review In Tamil, the witcher series timeline, the witcher web series cast, the witcher series season 2, netflix Series
Geralt Of Rivia ( Henry Cavil – Enola Holmes ) – ஒரு mutant மற்றும் அவனுடைய வேலை பணத்திற்காக ராட்சத, கொடுரமான மற்றும் அமானுஷ்ய விலங்குகளை கொல்வது. ஆனால் நல்லவன் முடிந்த வரை கொலைகள் செய்யாமல் இருக்கிறான். ஆனால் மக்கள் எவரும் இவனை விரும்புவதில்லை. அதனால் எப்பவும் தனிமையில் திரிகிறான். 
Yennefer (Anya Chalotra) – சிறு வயதில் இருந்து முதுகெலும்பு மற்றும் முகத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கொஞ்சம் அகோரமாக இருக்கிறார். இதனால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு கிண்டல் கேலிக்கு ஆளாகிறார். 
மந்திரம் கற்றுக் கொடுக்கும் பள்ளி நடத்தும் சூனியக்காரியிடம் குறைந்த விலைக்கு தன் தந்தையால் விற்கப்படுகிறார்.  
நாட்டின் இளவரசி Ciri ( Freya Allen) அரசியான தனது பாட்டியால் வளர்க்கப்படுகிறார். இவரிடம் ஒரு அமானுஷ்ய திறமை இருக்கிறது ஆனால் அது வெளியே தெரியாமல் பொத்திப் பாதுகாக்கிறார் அரசி. இன்னொரு அரசனால் நாடு சூறையாடப்படுகிறது. இதில் அரசி இறந்து விட இளவரசி தப்பி காட்டிற்குள் தப்பி ஓடி விடுகிறாள். 
விதியின் படி இந்த மூவரும் இணைய வேண்டும். அவ்வாறு இணைந்தால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். இவர்கள் எவ்வாறு இணைகிறார்கள் என்பதை சொல்வது தான் இந்த தொடர். 
மொத்தம் 8 எபிசோட்கள், ஒவ்வொரு எபிசோடும் 1 மணி நேரம் ஓடுகிறது. மிகவும் சிக்கலான கதை நேர்த்தியான முறையில் சொல்லப்படுகிறது. 
இரண்டு எபிசோட்கள் ஹீரோவான Geralt விசித்திரமான மிருகங்களை வேட்டையாடுவதை சொல்கிறது. 
சில எபிசோட்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த விஷயங்களை சொல்கிறது. ஆனால் எந்த முன்னறிவிப்பு இல்லாமல் தீடீரென ஃபிளாஷ் பேக் வருவதால் புரிய சிறிது நேரம் எடுக்கிறது. 
எவ்வளவு பழைய ஃப்ளாஷ்பேக் ஆக இருந்தாலும் அனைவரும் நிகழ்காலத்தில் உள்ள தோற்றத்திலேயே இருப்பதால் கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கு. ஆனால் பிற்பகுதியில் வரும் எபிசோட்கள் அனைத்தையும் தெளிவு படுத்துகிறது. 
மான்ஸ்டர் வேட்டை எபிசோட்கள் மற்றும் மான்ஸ்டர் பெயர்கள் பிரபல தொடரான Super Natural – ஐ ஞாபக படுத்துகிறது. 
இது ஒரு கற்பனை உலகில் நடைபெறும் தொடர். அதற்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு, இசை மற்றும் லொக்கேஷன்கள் அருமை. குறிப்பாக மந்திரம் சொல்லிக் கொடுக்கும் பள்ளி அமைந்துள்ள இடம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.
கண்டிப்பாக பார்க்கலாம் ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது. 
 IMDb Rating : 8.2/10
Available in Netflix 
Cast and crew
The Witcher is based on the eight books by Andrzej Sapkowski from the nineties and the video games developed by CD Project Red. It is created by Lauren Schmidt. 
And it stars Henry Cavill (Geralt), Anya Chalotra (Yennefer), Freya Allan (Ciri), MyAnna Buring (Tissaia) and Joey Batey (Jaskier).
Music: Sonya Belousiva, Giona Ostinelli. 
Cinematography: Gavin Struthers, Jean-Philipe Gossart.
Production companies: Netflix, Pioneer Stilking Films, Platige Image, Sean Daniel Company. 
Original network: Netflix.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இன் தி டால் கிராஸ் (In the tall grass) – 2019இன் தி டால் கிராஸ் (In the tall grass) – 2019

இயக்குனர்: விசென்சோ நடாலி திரைக்கதை: விசென்சோ நடாலி ஆண்டு: 2019 எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் படைப்புகளை தழுவி  எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வந்த வண்ணம் உள்ளன.. சமீபத்தில்  மட்டும் “பெட் செமட்டரி”, “இட் அத்தியாயம் 2”  வெளியிடப்பட்டுள்ளன.  இந்த

Prison Break Season -2Prison Break Season -2

முதல் சீசன் முழுவதும் சிறையில் இருந்து சகோதரர்கள் தப்பிப்பது பற்றியது.. இந்த சீசன் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு சேர்ந்து தப்பித்த 6 பேர்களின் சர்வைவல் பற்றி சொல்கிறது.  2 Season, 22 Episodes  Tamil dub ❌ Available @Hotstar Read