படத்தின் ஆரம்பத்தில் ஒரு மிலிட்டரி வீரன் அதிநவீன ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் அவனுடைய அதி நவீன கண் கண்ணாடி வழியாக ஆவி போன்ற ஒரு உருவம் தென்படுகிறது. என்ன என யோசிப்பதற்குள் அவனை கொன்று விடுகிறது அந்த உருவம்.
க்ளைன் (James Badge Dale) – இராணுத்திற்கு ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.இராணுவ வீரர்கள் உபயோகிக்கும் அதிநவீன கண்ணாடிகள் உட்பட பல கருவிகள் இவருடைய உழைப்பில் உருவானவை.
முதல் காட்சியில் இறந்த வீரனின் மரணத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கும் இராணுவ தலைமை அதிகாரி க்ளைனின் உதவியை நாடுகிறார்.
இராணுவ முகாமிற்கு செல்கிறார் க்ளைன். அவருக்கும் எதுவும் புரியவில்லை… இந்நிலையில் அங்கு உள்ள CIA அதிகாரி ஃப்ரான் (Emily Mortimer) இது எதிரிகளினால் கண்டுபிடிக்கப் பட்ட உருவத்தை மறைக்கும் புதிய டெக்னாலஜி என்கிறார். ஆதாரங்கள் இல்லாமல் மேலிடத்திற்கு தெரிவிக்க முடியாது என்பதால் அதை படம் பிடிக்க புது வித கேமராவுடன் இராணுவ வீரர்களுடன் ஆப்ரேஷனுக்கு கிளம்புகிறார் க்ளைன் மற்றும் ஃப்ரான்.
போன இடத்தில் பல உருவங்கள் சேர்ந்து தாக்குகின்றன. கண்ணுக்கு புலப்படாத நிலையில் இருப்பதால் என்னவேன்று யோசிப்பதற்குள் பெரும்பாலான வீரர்கள் இறந்து விடுகின்றனர். இவர்கள் வந்த வாகனமும் சேதமடய அங்கு உள்ள ஒரு கட்டிடத்தில் தஞ்சம் அடைகிறார்கள். உருவங்கள் சில காரணங்களால் கட்டிடத்தை நெருங்க முடியாமல் போகிறது. கட்டிடத்தின் உள்ளே இரு குழந்தைகளை மீட்கின்றனர். அவர்களின் மூலம் இந்த உருவங்களை பற்றி தெரிந்து கொள்கிறான் க்ளைன்.
அந்த உருவங்கள் பெருகி ராணுவ முகாமை அழித்து விடுகிறது. இந்த தாக்குதலில் தப்பித்த அனைவரும் ஒரு அகதிகள் முகாமில் தஞ்சம் அடைகிறார்கள்.
அங்கு இருந்து கொண்டு எவ்வாறு இந்த கண்ணுக்கு தெரியாத உருவங்களுடன் போரிட்டு வெற்றி பெற்றனர் என்பதை படத்தில் பாருங்கள்.
படம் பரபரப்பாக செல்கிறது ஆரம்பத்தில் இருந்து. அந்த உருவம் ஆவி , ஏலியன், ப்ரிடேட்டர் படத்தில் வரும் ஏலியன் என அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது.
அந்த உருவம் அமானுஷ்ய சக்தியா, ஏலியனா இல்லை அறிவியல் கண்டுபிடிப்பா என்று தெரியும் முன்பே பாதி படத்திற்கு மேல் பரபரவென்று சென்று விடுகிறது.
அதன் பின்பு கண்ணுக்கு தெரியாத உருவங்களை பிளான் பண்ணி தூக்குகிறார் நாயகன் மற்றும் மிலிட்டரி வீரர்கள்.
நல்ல ஒரு சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்ஷ்ன் திரைப்படம். நல்ல டைம் பாஸ் திரைப்படம்.
கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் 👍
IMDb Rating: 6.3/10
Cast : James Badge Dale, Emily Mortimer, Bruce Greenwood, Max Martini, Cory Hardrict, Clayne Crawford, Gonzalo Menendez, Ursula Parker, Aaron Serban, Stephen Root, Royce Pierreson, Jimmy Akingbola, Philip Bulcock, Ryan Robbins, Dylan Smith, Louis Ozawa Changchien, James D. Dever, Mark O’Neal, Michael Bodie, Declan Hannigan
Director: Nic Mathieu