Pandora – Pan-dola- பண்டோரா(2016)

 இது அணு உலை விபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கொரியன் திரைப்படம். .

 அணு உலைகளில் வேலை செய்பவர்கள், அதை எதிர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் போராளிகள் … கடைசியில் விபத்து மற்றும் அதை எப்படி சரி செய்ய போராடினார்கள் என்பது போன்ற யூகிக்க முடிந்த கதை தான். ஆனால் படமாக்கப்பட்ட விதம் மிகவும் அருமையாக உள்ளது. நிறைய காட்சிகளில் Chernobyl சீரியல் கண்முன்னே வந்து போகிறது. 

Jae-hyuk (Nam-gil) Hanbyul அணுஉலையில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்கிறான். அவனுடைய அப்பா மற்றும் அண்ணன் இருவரும் இதே அணுஉலையில் பணிபுரியும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்து விடுகிறார்கள். இதனால் தனக்கும் அதே நிலைமை தான் என நினைத்து வேலையில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். 

அவனுடைய அம்மா Mrs. Seok (Yeong-ae), அண்ணி Jung-hye (Junghi) மற்றும் அவளுடைய குழந்தையுடன் வசித்து வருகிறான். இவனுடைய அழகான காதலி Yeon-ju (Joo-hyeon) இவரும் அணுஉலையில் வேறு ஒரு பிரிவில் வேலை செய்கிறார். 

இந்நிலையில் அணுஉலையின் தலைமை தொழில்நுட்ப வல்லுநர் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நாட்டின் அதிபருக்கு விரிவான அறிக்கை அனுப்புகிறார். ஆனால் அணுஉலையை நிர்வாகம் செய்யும் அமைப்பு நாட்டின் பிரதமர் துணையுடன் இந்த அறிக்கையை மூடி மறைத்ததோடு மட்டும் அல்லாமல் தலைமை அதிகாரயை வேறு துறைக்கு தூக்கி அடிக்கின்றனர். 

திடீரென அணுஉலை பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் சிறிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அணுஉலையை குளிர்விக்க செலுத்த படும் திரவம் செல்லும் குழாயில் சிறிய உடைப்பு ஏற்படுகிறது. 

கையாலாகாத நிர்வாகம் மற்றும் பிரதமரின் தவறுகள் காரணமாக சிறிய பாதிப்பு ஒரு அணுஉலை வெடித்து சிதறும் அளவிற்கு பெரிதாகிறது. கதிர்வீச்சு காற்றில் பரவ ஆரம்பிக்கிறது. இதை சரி செய்யாமல் விட்டுவிட்டால் பக்கத்தில் இருக்கும் பெரிய நகரம் உட்பட பெரும்பாலான பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்படுகின்றது. 

மீட்பு பணி செய்பவர்கள் யாருமே உலையை நெருங்க முடியாத அளவுக்கு கதிர்வீச்சு உள்ளது. 

இந்த இக்கட்டான நிலையில் வேறு வழியின்றி அணு உலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பாதிப்பை கட்டுப்படுத்த களத்தில் இறங்குகிறார்கள்.  

எவ்வாறு சரி செய்தார்கள் என்பதை சென்டிமென்ட் , தியாகம் , வீரம் என அனைத்தும் கலந்து படத்தில் சொல்லப்படுகிறது

இன்னொரு ட்ராக்கில் ஹீரோவின் குடும்பத்தை காப்பாற்ற அவரின் காதலி போராடுகிறார்.. 

படம் சிறப்பாக உள்ளது… ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பெரிய குறைகள் இல்லை… 

குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்… அணுஉலைகளின் சாதகம் மற்றும் பாதகங்களை சிறப்பாக சொல்கிறது.‌

பேரழிவு காட்சிகள் மற்றும் அந்த தருணத்தில் மக்களின் மனநிலை போன்றவை சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளனர்.‌ அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

Cast: Nam-gil Kim, Jung Jin-Young, Yeong-ae Kim, Junghi Moon, Kyeong-yeong Lee, Myung-min Kim, Shin-il Kang, Se-dong Kim, Seong-mok Yoo, Dae-myeong Kim, Joo-hyeon Kim, Gang-yoo Bae, Han-jong Kim.

Directed by: Jong-woo Park 

IMDb Rating: 6.7

Available in Netflix

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013Homefront – ஹோம் ப்ரண்ட் – 2013

ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் Jason Statham நடித்து 2013 -ல் வந்த ஆக்ஷன் படம்.  இது போதாதென்று திரைக்கதை எழுதியவர் Sylvester Stallone. படத்தின் கதை பல வருடங்களாக அடித்து துவைத்து எடுக்கப்பட்ட குடும்பத்தை கெட்டவர்களிடம் காப்பாற்றும் கதை தான்.  Phil Broker

Hunt For The Wilderpeople – 2016Hunt For The Wilderpeople – 2016

நல்ல அருமையான Comedy, Adventure படம்.  IMDb 7.8 Tamil dub ❌ OTT ❌ Family ✅✅ ஒரு அநாதை சிறுவனும் அவனுடைய Foster Uncle இருவரையும் ஒரு சின்ன சம்பவம் காரணமாக பெரிய போலீஸ் கூட்டமே  காட்டுக்குள் தேடுகிறது.