Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018)

Operation Odessa – ஆப்ரேஷன் ஒடெசா (2018) Documentary  Tamil Review

இது ஒரு நெட்ப்ளிக்ஸ் டாக்குமெண்டரி… 

டாக்குமெண்டரி ஆரம்பத்தில் ஒருவர் பேசுகிறார்.. 

நான் ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி ஒரு நீர்மூழ்கிக் கப்பல் வாங்கனும் கிடைக்குமா என்று கேட்டேன்… 

Operation Odessa Netflix, operation Odessa IMDb, operation Odessa Review in tamil, Pablo Escobar, drug cartel, submarine, real story, cali cartel,

அவன் நான் கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டான். 

இரண்டு நாள் கழித்து ஃபோன் பண்ணி With nuclear missiles or without nuclear missiles? வேண்டுமா என்று கேட்டான் என்று சொல்லி சிரிக்கிறான். 

ஆம் அமெரிக்காவில் வசிக்கும் 3 நண்பர்கள் இணைந்து ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலை விலை பேசி கொலம்பியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தும் குழுவுக்கு விற்பனை செய்வதற்கு செய்த கூத்துகளை பற்றி சொல்வது தான் இந்த ஆவணப்படம். 

படத்தில் முக்கியமான 3 பேர் நடந்த உண்மைச் சம்பவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். 

முதலில் Tarzan – ரஷ்யாவை சேர்ந்த இவன் பிழைப்புக்காக அமெரிக்கா வந்து சட்டவிரோத சம்பவங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து மியாமி நகரில் இரவு விடுதி‌ நடத்தி வருகிறான். 

Juan – இவன் ஒரு ப்ளே பாய் ..‌ படகுகள் விற்பது , மோட்டார் சைக்கிள், கார்கள் விற்பனை செய்வது இவன் தொழில்.. 

Tony – கியூபாவை சேர்ந்த உளவாளி 

இவர்கள் மூவரும் எவ்வாறு சந்தித்தார்கள் நண்பர்களான பின்பு செய்த அட்டகாசங்களை அவர்களே சொல்கின்றனர். 

உதாரணமாக ரஷ்யா சென்று வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து செல்லும் இடத்திற்கு வழி தெரியாமல் ஊருக்கு நடுவே இறக்கி முகவரி கேட்டது பற்றி சொல்கிறார்கள். 

இதற்கு நடுவே இந்த வழக்கை விசாரனை செய்த அமெரிக்கா போலீசார் எவ்வாறு இந்த கூட்டத்தின் மீது சந்தேகம் வந்தது இவர்களை பிடிக்க செய்த சாகசங்களை பற்றி பேசுகிறார்கள். 

ஆவணப்படங்கள் பொதுவாக கொஞ்சம் மெதுவாக செல்லும் ஆனால் இந்த படம் வேற லெவல்… 

திரைப்படமாக எடுக்க கூடிய கன்டென்ட் உள்ளது இப்படத்தில்…

நம்பவே முடியாத சம்பவங்கள்… ஆனால் ஆவணப்பட குழுவின் கூற்றுப்படி இது 100% உண்மை… பல ஆதாரங்களும் காட்டப்படுகிறது… 

நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்…

IMDb Rating : 7.8/10

Available in Netflix 

Director: Tiller Russell

Producer: Eli Holzman, Aaron Saidman, Sheldon Yellen

Cinematographer: Kenny Stoff

Editor: Greg Tillman

Music: Shrapnel

Cast: Ludwig Fainberg, aka “Tarzan”, Juan Almeida, Nelson Tony Yester, Kristy Galeota, Tony Galeota, Brent Eaton, Mike McShane, Dick Gregorie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Lone Survivor – லோன் சர்வைவர் – 2013Lone Survivor – லோன் சர்வைவர் – 2013

உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இராணுவ ஆக்ஷன் திரைப்படம்.  இராணுவம் பற்றிய திரைப்படம் என்பதால் படத்தின் ஆரம்பத்திலேயே அமெரிக்க ராணுவத்தில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள் டைட்டிலோடு காட்டப்பட்டுகிறது. 4 பேர் கொண்ட ஒரு சின்ன படைவீரர்கள் குழு ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிக்குள் செல்கிறது.

Indian Predator: The Butcher Of Delhi- 2022Indian Predator: The Butcher Of Delhi- 2022

Indian Predator: The Butcher Of Delhi – Tamil Review  தலைநகரில் 2003 ஆம் வருடத்தில் இருந்து ஏகப்பட்ட கொலைகளை செய்து பிணத்தின் தலைகளை திஹார் ஜெயில் வாசலிலேயே போட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்துட்டு இருந்த ஒரு சீரியல் கில்லர்

Just Mercy – ஜஸ்ட் மெர்சி – 2020Just Mercy – ஜஸ்ட் மெர்சி – 2020

Just Mercy Tamil Review  Jamie Foxx (Django Unchained,  Collateral , Project Power) பெயர் இருந்ததால் பார்த்த படம். உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.  ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் அமெரிக்காவின் நிறவெறியை மையப்படுத்தி வந்துள்ள இன்னும் ஒரு படம்.