நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள திகில் திரைப்படம்.
Kaali Khuhi – காலி குகி (2020)
ஷபனா ஆஸ்மி இருந்ததால் வித்தியாசமான ஹாரர் படமாக இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.
படத்தின் ஆரம்பத்தில் இருளில் ஒரு கிராமம் காட்டப்படுகிறது. ஒருவன் சுத்தியலோடு சென்று மூடி சீல் வைக்கப்பட்ட கிணறை உடைக்கிறான்.
அதிலிருந்து ஒரு கை வெளியே வந்து அவனை பிடிக்கிறது. அப்பவே நமக்கு தெரிஞ்சு போச்சு பேய் கிளம்பிருச்சு என்று.
அடுத்த காட்சியிலேயே ஒரு சைக்கிள்காரன்ட லிஃப்ட் கேட்டு ஊருக்குள்ள வந்து ஒரு வீட்டு கதவ தட்டுது. ஒரு வயசான அம்மா(Leela Samson) அத பாத்துட்டு மயக்கம் போட்டு கீழ விழுது. அந்த பேய் அந்த வீட்டுல உள்ள மாடி ரூம்க்கு பொறுமையாக போகுது.
இன்னொரு ஊர்ல 10 வயது பெண் சிவாங்கி கிணத்துக்குள்ள எட்டி பார்த்துட்டே குச்சி ஐஸ் சாப்டுட்டு இருக்குரப்ப தண்ணீல ஒரு சின்ன பெண் உருவம் தெரியுது.
சொந்த கிராமத்தில் இருக்கும் பாட்டி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்காங்க என்று சொல்லி அப்பா, அம்மா மற்றும் சிவாங்கி மூன்று பேரும் கிராமத்துக்கு கிளம்புகிறார்கள்.
வீட்டில் சிவாங்கிக்கு ஒரு பெண் உருவம் தெரிந்து கொண்டே இருக்கிறது. பாட்டிக்கு திடீரென உடம்பு சரியாகி விடுகிறது. அடுத்த நாளே மாடி ரூம்க்கு போற பாட்டி கருப்பு கலர்ல வாந்தி எடுத்து இறந்து விடுகிறது. அடுத்த நாள் குடிபோதையில் மகள் என்று நினைத்து மாடி ரூம்க்கு செல்லும் சிவாங்கி அப்பாவிற்கும் தர்ம அடி கிடைக்கிறது பேயிடம் இருந்து.
ஷபனா ஆஸ்மி பக்கத்து வீட்டில் உள்ள ஆண்ட்டியாக வருகிறார். ஒரு மர்மமான புக் வைத்துள்ளார். நடக்கும் மர்மங்களின் காரணங்கள் இவருக்கு தெரிகிறது ஆனால் மறைக்கிறார்.
ஒரு கட்டத்தில் சிவாங்கியின் அம்மாவும் நோயில் படுக்கிறார். கிராமம் முழுவதும் நோய் நொடியால் அவதிப்படுகிறது.
ஏன் இவ்வாறு நடக்கிறது ? யார் அந்த சின்ன பெண் பேய்? ஏன் எல்லாவற்றையும் கொல்கிறது என தெரியும் போது ஆச்சரியமாக இருக்கும் என நினைக்காதீர்கள்… நமக்கு ஏற்கனவே ஏன் என்று தெரிஞ்சு இருக்கும்..
கடைசியில் எல்லாவற்றையும் காப்பாற்றும் பொறுப்பு பாவம் சிவாங்கியின் தலையில் விழுகிறது. கிளைமாக்ஸ்யை படத்தில் பாருங்கள்…
கண்டிப்பாக பாருங்கள் என்று எல்லாம் சொல்ல மாட்டேன்… 😝.. உங்கள் விருப்பம்… ஆவரேஜ் படம்..
Available in Netflix
Cast: Shabana Azmi, Riva Arora, Satyadeep Mishra, Sanjeeda Sheikh.
Director: Terrie Samundra