In The Shadow Of The Moon – இன் தி ஷாடோ ஆஃப் தி மூன் (2019)

சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த ஆக்ஷ்ன் திரைப்படம். 

1988 -ல் ஆரம்பிக்கிறது திரைப்படம். போலீஸ் அதிகாரியான டாம் மற்றும் அவரது பார்ட்னர் இருவரும் இணைந்து ஒரு கொலை வழக்கை விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் கொலை நடந்த விதம் வித்தியாசமாக இருக்கிறது. 

அவர்களின் மூளை உருகி காது , மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியே வந்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் பின் கழுத்தில் மூன்று துறைகள் உள்ளன. இதே முறையில் மூன்று கொலைகள் நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.  

வழக்கின் விசாரணையில் ஒரு பெண் இந்த கொலைகளில் தொடர்பு உள்ளதை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தருணத்தில் அந்த பெண்ணை துரத்தி செல்லும் போது துரதிர்ஷ்டவசமாக ரயிலில் சிக்கி இறந்து விடுகிறார். கேஸ் முடித்து வைக்கப்படுகிறது.  

அன்று டாம்மிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அவர் மனைவி பிரசவத்தில் இறந்து விடுகிறார். 

படம் 9 வருடங்கள் முன்னோக்கி நகர்கிறது. மீண்டும் மூளை உருகி சில பேர் இறக்கிறார்கள். டாம் மறுபடியும் விசாரணையில் இறங்குகிறான். 

இம்முறையும் அந்த பெண்ணை பிடிக்க முடியாமல் போகிறது. 

பைத்தியம் பிடித்தது போல இந்த வழக்கு விசாரணையில் இறங்குகிறான். மகளுடன் உள்ள உறவில் விரிசல் விழுகிறது இந்த வழக்கின் காரணமாக.. வேலையை இழந்து தனியார் துப்பறியும் நிபுணராக பணிபுரிந்து அப்பொழுதும் அந்த வழக்கை விசாரித்து இறந்தவர்களுக்கு இடையே உள்ள தொடர்பை கண்டுபிடிக்கிறார். 

9 வருடங்கள் முடிகிறது மீண்டும் அந்த பெண் வருகிறார்… யார் அந்த பெண் ? ஏன் 9 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறார்? எதற்காக கொலைகள் செய்கிறார் என்பதை படத்தில் பாருங்கள். 

படம் ஆரம்பம் முதலே சஸ்பென்ஸ் ஆகவே செல்கிறது. டாம் ஏன் இந்த அளவு இந்த வழக்கில் இறங்குகிறார் என்பதற்கு சரியான காரணங்கள் சொல்லப்படவில்லை…. 9 வருடங்கள் என்பது மிக பெரிய இடைவெளி இந்த நேரத்தில் என்ன மாதிரியான விசாரணை செய்தார் என்பது பற்றியும் சொல்லப்படவில்லை… 

மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் இல்லை… பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் டைம் பாஸ் படம் பார்க்க வேண்டும் என்பவர்கள் தாராளமாக பார்க்கலாம். 

IMDb Rating : 6.2/ 10

Available in Netflix

Director : Jim Mickle

Starring: Boyd Holbrook, Michael C. Hall, Bokeem Woodbine, Cleopatra Coleman, Sarah Dugdale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014

Kungfu Killer (Kung Fu Jungle ) – 2014 – Review In Tamil  அருமையான அதிரடி ஆக்சன் படம். குங்ஃபூ படம் பாத்து இருப்போம், சீரியல் கில்லர் படம் பார்த்து இருப்போம். ஒரு குங்ஃபூ வீரன் சீரியல் கில்லரா

The Tiger – A Hunter’s Tale – 2015The Tiger – A Hunter’s Tale – 2015

The Tiger – A Hunter’s Tale – 2015 Korean Movie Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்சன், அட்வென்சர் படம்.  50+ வயதில் இருக்கும் திறமையான வேட்டைக்காரன் ஹீரோ. சில கசப்பான அனுபவங்களால் வேட்டையை விட்டு விட்டு

Titane – 2021Titane – 2021

Titane – 2021 Tamil Review  இது ஒரு French Sci-fi , Horror , Thriller .  இது ரொம்பவே Weird ஆன படம். ஆபாசத் காட்சிகள் மற்றும் வன்முறைக் காட்சிகள் ரொம்ப ரொம்ப அதிகம்.  படத்தோட ஹீரோயினுக்கு சின்ன