Furie-ஃபியூரி (2019)

வியட்நாம் நாட்டில் இருந்து வந்த அதிரடி ‌ஆக்ஷன் திரைப்படம் தான் Furie… 

படத்தின் கதை என்னமோ நம்க்கு பழகிய ஒன்று தான். நம்ம சூப்பர் ஸ்டார் பாட்ஷாவில் தொடங்கி கடைசியாக விஜய்யின் தெறி வரைக்கும் சலிக்காத ஒன்று. வேறு என்ன பெரிய ரௌடி or police  குடும்பத்திற்காக கண்காணாத இடத்திற்கு சென்று இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருவார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு அதிரடி காட்டுவார். 

Furie Vietnamese movie review in Tamil, ஃப்யூரி திரைப்பட விமர்சனம், Veronica Ngo,Cat Vy, Phan Thanh Nhiên, Pham Anh Khoa, Trần Thanh Ho

இந்த டெம்ப்ளேட் உபயோகித்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது. ஆனால் இதில் அந்த பழைய ரௌடி ஒரு பெண். 

Hai Phuong – ஒரு முன்னாள் கேங்ஸ்டர் மற்றும் தற்காப்பு கலைகளில் வல்லவர். கர்ப்பம் ஆன பிறகு திருந்தி ஒரு சிறிய கிராமத்தில் அடைக்கலமாகிறார். இவருடைய மகள் Mai . 

ஒரு நாள் அம்மாவின் கண் முன்னே Mai கடத்தப்படுகிறார். Hai – விடாமல் துரத்துகிறார். ஒரு கட்டத்தில் கடத்தல் குழு குழந்தையோடு தப்பித்து விடுகின்றனர். 

பக்கத்தில் உள்ள நகரத்திற்கு கடத்திய குழந்தையை கொண்டு சென்று இருப்பார்கள் என தெரிய வருகிறது. 

ஒரு சந்தர்ப்பத்தில் போலீஸ் நிலையத்தில் அவள் குழந்தையை கடத்தியது சாதரணமான ஆட்கள் கிடையாது என்று தெரியவருகிறது. குழந்தைகளை கடத்தி உடல் உறுப்புகளை திருடி கள்ள சந்தையில் விற்கும் மிகப்பெரிய மாஃபியா கும்பல் என தெரிய வருகிறது. 

அதை விசாரிக்கும் அதிகாரியும் சரியான ஆதாரங்கள் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றனர். 

மகளை 2 நாட்களில் கண்டுபிடிக்க முடியாமல் போனால் ரயிலில் அனுப்பி விடுவார்கள் என்பது தெரிய வர களத்தில் இறங்குகிறார். 

அதற்கு பின் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் படம். ஹீரோயினுக்கு உதவும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரி வருகிறார். 

படம் ஆரம்பத்தில் இருந்து பரபரப்பாகவே நகர்கிறது. ஹீரோயின் மகளை தேடி ஊருக்குள் வந்ததும் மேலும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. .

சண்டைகள் அனைத்தும் அதிரடி. ஹீரோயின் ஃப்ளாஷ்பேக் ஒன்றும் அவ்வளவு அழுத்தமாக இல்லை. ‌

மொத்தத்தில் நல்ல டைம் பாஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம். ஆங்காங்கே அம்மா மகள் பாசம் என ஒரு கலவையான படம். 

கண்டிப்பாக பார்க்கலாம். 

IMDb Rating: 6.3.

Available in Netflix

Director: Le-Van Kiet

Notable Cast: Veronica Ngo (Ngô Thanh Vân), Cat Vy, Phan Thanh Nhiên, Pham Anh Khoa, Trần Thanh Hoa 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Merantu – 2009Merantu – 2009

Raid, Raid 2 படத்தின் டைரக்டர் + ஹீரோ combo வின்  முதல் படம் தான் இது.  செம ஆக்சன் படத்துக்கு ஒரு சின்ன ஸ்டோரிலைன் மற்றும் கொஞ்சம் சென்டிமென்ட் சேர்த்து கொடுத்து இருக்கிறார்கள்.  IMDb 6.7  #Tamil dub ❌

Black Site – 2022Black Site – 2022

5 நாடுகள் சேர்ந்து தீவிரவாத அமைப்புகளை பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள Underground ல ஒரு இடத்தை கட்டி வைத்து இருக்காங்க.  வில்லன் அதற்குள் ஊடுருவி சில தகவல்களை அழிக்க முயற்சி செய்கிறான் . அதில் வெற்றி பெற்றான என படத்தில் பாருங்கள். 

The Bad Guys (Sheesh) – 2022The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.  ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.  IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்