இது கொரியன் ஆக்ஷ்ன் காமெடி வகையைச் சேர்ந்த படம்.
படத்தின் நாயகன் ஒரு வெட்டி ஆபிசர் ஆனால் மலை ஏறுவதில்லை திறமைசாலி. தன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். வேலை இல்லாததால் குடும்பத்தினரும் மதிப்பதில்லை.
ஒரு மலையேறும் போட்டியில் ஹீரோயினை சந்திக்கிறான். அப்போட்டியில் ஹீரோயின் வெற்றி பெறுகிறார். அவருடன் டேட்டிங் செல்ல நாள் கேட்க அதற்கும் முடியாது என்று சொல்லி விடுகிறார் நாயகி.
ஒரு நாள் நாயகனின் பாட்டியின் 70 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு ஹோட்டலில் கொண்டாட குடும்ப மொத்தமும் செல்கிறார்கள். அங்கு ஈவன்ட் மேனேஜராக வருகிறார் நாயகி.
அப்போது ஒருவன் நகரின் மையத்தில் ஒரு லாரியை நிறுத்தி சில பல வால்வுகளை திறந்து விடுகிறான். சிறிது நேரத்தில் திக்கான புகை லாரியில் இருந்து வெளியேறுகிறது. அந்த புகையை சுவாசித்தவர்கள் இறந்து விடுகிறார்கள்.
புகை தரை மட்டத்தில் இருக்கிறது என்றும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. அனைவரையும் கட்டிடங்களின் மொட்டை மாடிக்கு செல்ல சொல்கிறது அரசு. ஹெலிகாப்டர் மூலமாக மீட்க திட்டம் இடுகின்றனர்.
ஹோட்டல் மொட்டை மாடியின் சாவி கிடைக்காத நிலையில் அனைவரும் மாட்டிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஹீரோ எவ்வாறு தன் குடும்பத்தை காப்பாற்றினான் என்பது மீதி படம்.
சிம்பிளான கதை மற்றும் பெரிய வில்லன்கள் என்று யாரும் இல்லை. மலை ஏற்றத்தை மையமாக வைத்து இவ்வளவு நல்ல பொழுது போக்கு படத்தை தர கொரியர்களால் மட்டும் தான் முடியும்.
பேமிலி சென்டிமென்ட் அருமையாக உபயோகித்து உள்ளனர். படம் முழுவதும் கொஞ்சம் காமெடி இருப்பதால் படம் பாஸிட்டிவாகவே செல்கிறது. இந்த அதகளத்தில் நாயகன் நாயகி நடுவே காதல் மலர்கிறது…
படத்தில் பெரிய திருப்பம், சஸ்பென்ஸ் எல்லாம் இல்லை. நிறைய விஷயங்களை நம்மால் யூகிக்க முடிகிறது.
ஆனாலும் படம் பரபரப்பாகவே நகர்கிறது…
குடும்பத்துடன் பார்க்க சிறந்த திரைப்படம். நல்ல டைம் பாஸ். கண்டிப்பாக பாருங்கள்.
IMDb Rating : 7.0/10
Cast: Cho Jung-Suk, Lim Yoona, Go Doo-Shim, Park In-Hwan, Kim Ji-Young, Kang Ki-Young, Kim Jong-Gu, Kim Byung-Sun, Hwang Hyoeun, Lee Bong-Ryun.