Collateral – கொலாட்ரல் (2004)

Collateral Movie Tamil Review 

இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். ஒரே இரவில் நடப்பது போன்ற படம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத படம். அதிலும் Tom Cruise (Edge Of Tomorrow) , Jamie Foxx (Project Power, Django Unchained ) , Jason Statham (ஒரே ஒரு காட்சி) போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். 

Collateral 2004 movie review in tamil, Tom Cruise, Jamie Foxx, collateral Netflix, collateral amazon prime video, Michael Mann, கொலாட்ரல் பட விமர்சனம்

மேக்ஸ் (Jamie Foxx) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேரத்தில் வாடகை கார் ஓட்டுபவர். இவருக்கு சொந்தமாக வாடகை கார் கம்பெனி ஆரம்பிப்பது லட்சியம். ஆனால் 12 வருடங்கள் கார் ஒட்டியும் அவரால் சம்பாதித்து கம்பெனி ஆரம்பிக்க முடியவில்லை. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மூலை முடுக்குகள் எல்லாம் தெரிந்து வைத்து உள்ளார். யார் காரில் ஏறினாலும் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களை பற்றி யூகித்து விடுவார். 
ஒரு நாள் இரவு வழக்கம் போல வேலைக்கு வருகிறார். ஒரு பெண் வக்கீல் அன்னி (Jada Pinkett Smith) காரில் ஏறுகிறார். சாதரணமாக பேச ஆரம்பிக்கிறார். பேச்சு சுவாரஸ்யமாக மாறி அப்பெண் இறங்கும் பொழுது ஏதாவது உதவி வேண்டும் என்றால் ஃபோன் செய்யுங்கள் என்று கூறி தன் ஃபோன் நம்பரை கொடுத்து விட்டு போகிறார். 
சிறிது நேரத்தில் வின்சென்ட் (Tom Cruise) எனும் டிப்டாப் ஆசாமி காரில் ஏறுகிறார். அவரிடமும் இயல்பாக பேசுகிறான் மேக்ஸ். தனக்கு இன்று இரவு 5 வெவ்வேறு இடங்களில் வேலை இருப்பதாகவும் மேக்ஸ்யை அன்று அவனுக்காக கார் ஓட்ட சொல்கிறான். ஆரம்பத்தில் மறுக்கும் மேக்ஸ் நிறைய பணம் தருகிறேன் என்றதும் சரி என்கிறான். 
முதல் இடத்தில் ஒரு கட்டிடத்தின் கீழே காரை நிறுத்த சொல்லி விட்டு மேலே செல்கிறான் . திடீரென ஒருவன் சுடப்பட்டு மேலிருந்து கீழே விழுகிறான். வின்செண்ட் தான் சுட்டான் என தெரிய வருகிறது. துப்பாக்கி முனையில் மேக்ஸயை மிரட்டி இறந்தவனை காரின் டிக்கியில் போட்டு விட்டு அடுத்த இடத்திற்கு செல்ல சொல்கிறான். 
இந்த காட்சியில் இருந்து படத்தில் பரபரப்பு எகிறுகிறது. வின்சென்ட் ஒரு கான்ராக்ட் கில்லர் என தெரிய வருகிறது. 5 இடங்களில் உள்ள 5 பேரை கொல்ல வந்து இருக்கிறான் என்று மேக்ஸ் க்கு தெரிய வருகிறது. 
மேக்ஸ் தப்பித்தானா? 5 பேரில் ஒருவர் மேக்ஸ் க்கு தெரிந்தவராக இருக்கிறார்… அவரை காப்பாற்றினானா? என்பதை படத்தில் பாருங்கள். 
கொடூரமான கில்லர் கதாபாத்திரத்தில் Tom Cruise கலக்கி இருக்கிறார். சாக்லேட் பாய் மற்றும் நல்லவனாகவே பார்த்து பழகிய நமக்கு இதில் வித்தியாசமான அனுபவம். செம வில்லத்தனமான நடிப்பு. 
மேக்ஸ் கதாபாத்திரத்தில் Jamie Foxx, இவருடைய நடிப்பும் கலக்கல். ஆரம்பத்தில் சோகமாக வருவது ஆகட்டும், வின்சென்ட் இடம் மாட்டிக் கொண்டு அவன் சொல்வதை வேண்டா வெறுப்பாக செய்வது, பிற்பகுதியில் மெதுவாக ஹீரோ அவதாரம் எடுப்பது என கலக்கி இருக்கிறார். வின்செண்ட் மற்றும் மேக்ஸ் இடையே நடக்கும் உரையாடல்கள் அருமை. 
வின்சென்ட் டை தேடும் போலீசாக வருகிறார் Mark Ruffalo (Hulk) … பெரிதாக வாய்ப்புகள் இல்லை அவருக்கு…
மொத்தத்தில் அருமையான திரில்லர் படம். கண்டிப்பாக பாருங்கள். 
IMDb Rating : 7.5/ 10
Available in Amazon Prime
Director: Michael Mann
Cast: Tom Cruise, Jamie Foxx, Jada Pinkett Smith, Mark Ruffalo, Peter Berg, Bruce McGill, Irma P. Hall
Screenplay: Stuart Beattie
Cinematography: Dion Beebe, Paul Cameron
Music: James Newton Howard

1 thought on “Collateral – கொலாட்ரல் (2004)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

6565

65 movie review in Tamil  Tamil ✅ @Amazon (Not in India) ⭐⭐.75/5 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு விண்கற்கள் பூமியில் மோதியதில் டைனோசர்கள் இனமே அழிந்து விட்டது என படிச்சு இருப்போம்.  அந்த நிகழ்வை வைத்து வந்துள்ள

Those Who Wish Me Dead – 2021Those Who Wish Me Dead – 2021

Taylor Sheridan டைரக்ட் பண்ண படம். இவரோட Wind River படம் செம சூப்பரா இருக்கும். இது போக Angelina Jolie வேற இருந்தாங்க அதுனால பார்த்த படம்.  IMDb 6.1 தமிழ் டப் இல்லை.  படத்தோட கதை என்னனா Angelina

Only Murders in the building – 2021Only Murders in the building – 2021

Only Murders in the building Tamil Review இது‌ ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each