Wind River (வின்ட் ரிவர்) – 2017

 ஒரு திறமையான வேட்டைக்காரன் கோரி (Jeremy Renner). வேட்டைக்கு செல்லும் போது கொல்லப்பட்டு பனியில் உறைந்து போன பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்கிறார்.  இந்த வழக்கை விசாரிக்க வரும் இளம் FBI பெண் அதிகாரி‌ Jane க்கு  (Elizabeth Olsen) கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறார். இருவரும் சேர்ந்து கொலையாளியை கண்டுபிடிப்பது தான் படம்.

என்னை பொருத்தவரை இது ஒரு அருமையான சஸ்பென்ஸ் கலந்த திரைப்படம். கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

படத்தின் முதல் காட்சியில் அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு இளம் பெண் பனி படர்ந்து இருக்கும் மலையில் ஒடி வந்து கீழே விழுந்து இறக்கிறார். 

சில நாட்கள் கழித்து வேட்டைக்கு செல்லும் கோரி தற்செயலாக சடலத்தை கண்டுபிடிக்கிறார். லோக்கல் போலிஸிடம் தகவல் சொல்லப்படுகிறது. எல்லை பிரச்சினைகள் காரணமாக FBI டம் செல்கிறது வழக்கு. 

விசாரணை செய்ய வரும் FBI அதிகாரிக்கு இடம், தட்பவெப்பநிலை , பூர்வ குடிமக்களின் கலாச்சாரம் என எல்லாம் புதிதாக இருப்பதால் திணருகின்றார். ஒரு கட்டத்தில் கோரியின் திறமையை கண்டு தனக்கு உதவுமாறு கோரிக்கை வைக்கிறார்.

இருவரும் இணைந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடித்தனர் என்பதை திரையில் பாருங்கள். 

Jeremy Renner – கோரி கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பு. சில வருடங்களுக்கு முன்பு மகளை இழந்த சோகம் மற்றும் வாழ்க்கையை வெறுத்து வலிகளை உள்ளே வைத்துக் கொண்டு உலாவும் கதாபாத்திரம்.  எனக்கு தெரிந்து அவருடைய கேரியரில் சிறந்த நடிப்பை இத்திரைப்படத்தில் கொடுத்து இருக்கிறார். 

தன் இறந்து போன மகளை பற்றி Jane-டம் பேசும் காட்சி கண் கலங்க வைக்கும் ரகம். 

இறந்து போன பெண்ணின் தந்தையாக மார்ட்டின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் Gil Bermingham சிறப்பாக நடித்திருக்கிறார். நம்ம நாசர் சாயலில் இருக்கிறார். 

அவரும் கோரியும் பேசும் காட்சிகள் அனைத்தும் உணர்வு பூர்வமான காட்சிகள். 

Jane கதாபாத்திரத்தில் Elizabeth Olsen இளம் CBI அதிகாரி கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வு. 

நன்றாக நடித்துள்ளார் கடைசியில் இறந்த பெண்ணை நினைத்து கண் கலங்கும் காட்சி அருமை. 

பனி மற்றும் பனி சார்ந்த இடங்கள் படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே உபயோகப்படுத்தி உள்ளார் இயக்குனர். ‌பிண்ணணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 

இயக்குனர் (Taylor Sheridan)  பற்றி படித்து பார்த்ததில் திறமையானவர் என தெரிகிறது . அவருடைய மற்ற ‌படங்களான Hell or Highwater (Writer)  மற்றும் Sicario (Writer) படங்களை பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். 

Slow burning வகையிலான திரைப்படம். கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை தூண்டிவிட்டு கடைசியில் ஒரு அதிரடியான கிளைமாக்ஸ்.

ஆங்காங்கே  தங்களை முன்னேறிய நாடாக காட்டிக்கொள்ளும் அமெரிக்கா எவ்வாறு பூர்வகுடி மக்களை நடத்துகிறது என்பதை சொல்கிறார் இயக்குனர். அதிலும் கடைசியில் காணாமல் போகும் பூர்வகுடி பெண்களை பற்றிய புள்ளிவிபரம் செவிட்டில் அறையும் ரகம். 

ஆனால் பூர்வ குடியை சேர்ந்த ஹீரோக்கள் யாரும் கிடைக்கவில்லை போல… 😝

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

Don’t miss this film. 

IMDb Rating : 7.7/10

Not available in streaming services. 

Director: Taylor Sheridan

Cast: Jeremy Renner, Elizabeth Olsen, Gil Birmingham, Jon Bernthal, Julia Jones, Kelsey Chow, Graham Greene

Screenplay: Taylor Sheridan

Cinematography: Ben Richardson

Music: Nick Cave, Warren Ellis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Vadh – 2023 – HindiVadh – 2023 – Hindi

Vadh Movie Tamil Review   @NetflixIndia   #crime #thriller #Hindi #Tamil ❌ ⭐⭐⭐ .75 /5 வாங்கிய கடனுக்காக ரவுடிகளால் தினமும் டார்ச்சர் செய்யப்படுகிறார் ஒய்வு பெற்ற ஆசிரியர். ஒரு நாள் நடைபெறும் சம்பவம் இவரது வாழ்க்கையை மாற்றுகிறது  –

The Place Beyond The Pines(2012)The Place Beyond The Pines(2012)

இது ஒரு க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படம். 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகளை சொல்கிறது. ஆனால் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பில் கலவரம் எதுவும் பண்ணாமல் எளிமையான திரைக்கதை மூலம் படம் நகர்கிறது… Luke

Kadaisi Nodigal – 2022 (Forensic)Kadaisi Nodigal – 2022 (Forensic)

Kadaisi Nodigal Tamil Review (Forensic)  2020 ல் மலையாளத்தில் வெளிவந்த Forensic படத்தின் தமிழ் டப் தான் கடைசி நொடிகள்.  IMDb 6.8 Tamil Dub ✅ Available @ Zeethirai  சிறு குழந்தைகளை கடத்தி கொல்லும் சீரியல் கில்லரை