The Social Dilemma – தி ஷோசியல் டைலெம்மா (2020)

Some quotes from this movie :  

If you are not paying for the product then you are the product 

It’s a market place that trades exclusively in human futures

இப்போது இருக்கும் சோசியல் நெட்வொர்க் காலகட்டத்தில் நமக்கு மிகவும் தேவையான ஒரு ஆவணப்படம். 

Facebook, Twitter, Pinterest, Google போன்ற App – களை உபயோகிப்பவர்களா நீங்கள் அப்படியானால் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள். 

நம்முடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த app – கள் சேகரித்து வைத்து உள்ளது என தெரியும் நமக்கு. இதை வைத்துக் கொண்டு அடுத்து நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை அவர்களால் கணிக்க முடியும். 

ஆனால் நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற மாதிரி Feed களை‌ நமக்கு அனுப்புகிறார்கள் என்பது தெரியுமா? நீங்கள் ஒவ்வொரு முறை Scroll செய்யும் பொழுதும் உங்கள் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப் படுகிறது..

ஒரு கட்டத்தில் நம் மனநிலையை படிப்படியாக மாற்றி நாம் பார்க்க வேண்டியதை அவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். அதை உபயோகித்து விளம்பர கம்பெனியிடம் நம்மை விற்று விடுகிறார்கள். 

இது எவ்வாறு சாத்தியமாகிறது? இதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை இதனை உருவாக்கிய/ மூளையாக இருந்தவர்களின் பேட்டி தான் இந்த திரைப்படம்.

உதாரணமாக பேஸ் புக் லைக் பட்டனை கண்டுபிடித்தவர்,  விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க யுக்திகளை வகுத்த Facebook அலுவலர்களின் தலைவர். Pinterest மற்றும் Google நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின் குறைகள் மற்றும் மனித தன்மையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை விளக்குகிறார்கள். 

ஆனால் தொழில்நுட்ப விஷயங்களை பற்றி விளக்காமல் எளிதாக மக்களுக்கு புரியும் வகையில் விளக்கியுள்ளார்கள். 

இன்னொரு ட்ராக்கில் ஒரு குடும்பத்தை Artificial intelligence ( செயற்கை அறிவுத்திறன்) +Social Networks எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை நாடகம் போல் காட்டுகிறார்கள். .

ஆனால் AI -க்கு பதிலாக 3 மனிதர்கள் ஒரு வீடியோ கேம் செட்டப்பில் இருந்து கொண்டு பென் என்ற இளைஞனின் மனநிலையை மாற்றுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள். 

எடுத்துக்காட்டாக அவன் மொபைல் ஒரு வாரம் தொடமாட்டேன் என குடும்பத்தினரிடம் சவால் விடுகிறான். ‌

அவனை வர வைக்க AI மனிதர்கள் உரையாடல் 

AI 1: என்ன 2 நாளா பயல ஆள காணும் .

AI 2 : நானும் அவனுக்கும் பிடித்த விளையாட்டு , நண்பர்கள் பற்றி அலர்ட் அனுப்புறேன் பயல் வரவே மாட்டிக்கிறான். 

AI3 : அவனோட பழைய லவ்வர் நேத்து இன்னொருத்தன் கூட சேர்ந்து இருக்கா அதை பற்றி இப்ப அலர்ட் போடுறேன் பாரு பய கண்டிப்பா வருவான். 

அவன் மொபைலை எடுத்து பார்க்க . 

AI 1 : வந்துட்டான் பாரு அந்த விளம் பரத்த போடு நமக்கு 4 சென்ட் லாபம்.  

கடைசியில் App – களின் காரணமாக நண்பர்கள், குடும்பத்தினரை இழந்து அவனுக்கு நேரும் முடிவு நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும். 

மியான்மார் ரோகின்யா முஸ்லிம்கள் பிரச்சினை, 2016 அமேரிக்கா தேர்தல், இந்தியாவில் சில காலம் முன்பு நடந்த கூட்டு வன்முறை, கொரனா போன்ற பிரச்சனைகளில் Social Network ன் பங்கு மற்றும் போலி செய்திகள் எவ்வாறு பரவுகின்றன அதன் விளைவுகள் பற்றியும் அலசுகிறது இந்த படம். 

கொஞ்சம் மெதுவாக போகிறது , பேசிக்கொண்டே இருப்பதால் கொஞ்சம் போரடித்தாலும் அருமையான தகவல்கள். எவ்வளவோ நேரம் நமக்கு Social Network ஆப்களினால் விரயம் ஆகிறது. 90 நிமிடங்கள் இதற்கு ஒதுக்கி பார்ப்பதால் எதுவும் ஆகி விடாது. 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவண திரைப்படம். 

The film features interviews with – 

Former Google design ethicist and Center for Humane Technology co-founder Tristan Harris, 

his fellow Center for Humane Technology co-founder Aza Raskin, 

Asana co-founder and Facebook’s like button co-creator Justin Rosenstein, 

Harvard University professor Shoshana Zuboff, 

Former Pinterest president Tim Kendall, 

AI Now director of policy research Rashida Richardson,

Yonder director of research Renee DiResta, 

Stanford University Addiction Medicine Fellowship program director Anna Lembke, and virtual reality pioneer Jaron Lanier..

The interviews are cut together with dramatizations starring actors Skyler Gisondo, Kara Hayward, and Vincent Kartheiser, which tell the story of a teenager’s social media addiction.

IMDb Rating: 8.1 

Available on Netflix 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Becoming Warren Buffett – 2017Becoming Warren Buffett – 2017

Warren Buffett – முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த பெயர் மிகவும் பிரபலம். சரியான கம்பெனியில் முதலீடு, பொறுமை போன்றவற்றின் மூலம் நம்மால் கூட நினைத்து பார்க்க முடியாத படி சம்பாதித்தவர்.  இவரது வாழ்க்கையை பற்றிய டாக்குமெண்டரி.  முதலீடுகள் மூலமாகவே பணக்காரர் ஆனவர்.

DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)DAVID ATTENBOROUGH: A LIFE ON OUR PLANET (2020)

டேவிட் அட்டன்பரோ – குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் விலங்குகள் பற்றிய பல ஆவணப்படங்களில் பணி புரிந்து உள்ளார்.  தனிப்பட்ட முறையில் அவருடைய விசிறி நான். அவருடைய டாக்குமெண்டரிகள் அனைத்தும் வாவ் சொல்ல வைக்கும் ரகங்கள். Planet

[Documentary] Earthlings – 2005[Documentary] Earthlings – 2005

கொடூரமான டாக்குமெண்டரியா இருக்கு..  கொல கொடூரமான படத்தை எல்லாம் கேஷீவலா பார்த்துருக்கேன். ஆனால் இந்த டாக்குமெண்டரி ரொம்பவே disturbing. நம்ம சாப்பாடு, பொழுதுபோக்கு, பொருட்கள் உற்பத்தி பண்ண எப்படி எல்லாம் விலங்குகளை use பண்ணுறோம் என்பதை சொல்லும் படம்.  விலங்கு பண்ணைகளில்