The Last Ship Tamil Review
கதைச் சுருக்கம்:
ஒரு மர்மமான வைரஸ் உலகின் 80% மக்களை கொன்று விடுகிறது. நாதன் ஜேம்ஸ் என்னும் போர் கப்பல் கேப்டன் டாம் தலைமையில் 2 விஞ்ஞானிகள் துணையுடன் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க கிளம்புகிறது. அவர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார்களா ?
மொத்தம் 5 சீசன்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சராசரியாக 10 எபிசோட்கள் உள்ளது.
Season 1 & 2
நாதன் ஜேம்ஸ் கப்பல் கேப்டன் தலைமையில் விஞ்ஞானிகள், ராணுவ வீரர்கள், கப்பல் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவுடன் ஆர்க்டிக் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து தான் முதன் முதலில் வைரஸ் வந்ததால் அங்கு சென்று Samples சேகரித்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.
இந்த பயணத்தில் இவர்களுக்கு எதிர்கொள்ளும் சவால்கள் நிறைந்த சாகச பயணத்தை பற்றியது தான் முதல் இரண்டு சீசன்கள்.
உதாரணமாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி கேப்டன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரியும் என்பதால் மற்றவர்களுக்கு சந்தேகம் வருகிறது மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சினைகள், கப்பலில் உணவு பற்றாக்குறை காரணமாக உணவு சேகரிக்க செல்லும் இடத்தில் நேரும் பிரச்சினைகள், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்படும் போட்டி காரணமாக இன்னொரு ரஷ்யா கப்பலுடன் மோதல் என பரபரப்பாகவே நகர்கிறது தொடர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் ஆட்சி மாறுகிறது , புதிய அதிபர் மற்றும் அவரது ஆட்கள் பொறுப்பை ஏற்கின்றனர். இந்த புது ஆட்சி வைரஸில் இருந்து தப்பிய திறமை வாய்ந்த நபர்களை சேர்த்து கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்க தயாராகிறது.
இன்னொரு புறம் இந்த வைரஸ் தாக்குதலை இயற்கையாக தாங்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் ஒரு குழுவாக சேர்கின்றனர். இவர்கள் நோக்கம் வைரஸை முடிந்த அளவு பரப்பி விட்டு எல்லாரையும் கொன்று விட்டு புதிய உலகத்தை உருவாக்குவது.
இந்த அனைத்து பிரச்சனைகளையும் கேப்டன் மற்றும் அவரது குழுவினர் நாதன் ஜேம்ஸ் கப்பல் உதவியுடன் எவ்வாறு சமாளித்து அமெரிக்கா மற்றும் உலகத்தை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை முதல் இரண்டு சீசனில் பாருங்கள்.
கேப்டன் டாம் கதாபாத்திரத்தில் Eric Dane கலக்கி இருக்கிறார். நம்ம கேப்டன் விஜயகாந்த் ஏற்கும் கதாபாத்திரம் போன்றது .
தன்னுடைய புத்திக்கூர்மையால் பலம் வாய்ந்த எதிரி கப்பல்களை வீழ்த்துகிறார். கப்பலே விட்டு வெளியே சிறு படகில் செல்ல தேவைப்படும் நேரத்தில் தானே தலைமை ஏற்று வழி நடத்தி செல்கிறார்.
அவரது குழுவினராக வருபவர்களும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆக்ஷ்ன் மற்றும் கப்பல் சேசிங் , ஏவுகணை தாக்குதல்களை பரபரப்பாக செல்கிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல டைம் பாஸ் சீரிஸ். கண்டிப்பாக பார்க்கலாம்.
Amazon Prime – ல் உள்ளது.
Directors: Jack Bender, Paul Holahan, Michael Katleman, Peter Weller, Sergio Mimica-Gezzan
Writers: Steven Kane, Hank Steinberg
Starring: Eric Dane, Rhona Mitra, Adam Baldwin, Charles Parnell, Travis Van Winkle