The Host – தி ஹோஸ்ட் (2006)

The Host Korean Movie Tamil Review 

Parasite, Mother, Okja போன்ற அருமையான படங்களை இயக்கிய Bong Joon Ho வின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த திரைப்படம் தி ஹோஸ்ட்.  

ஒரு வித்தியாசமான மிருகத்திடம் இருந்து தனது மகளை காப்பாற்ற போராடும் தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரின் போராட்டம் தான் படம். 

The host Korean‌ movie revie‌w in tamil, தி ஹோஸ்ட் கொரியன் திரைப்பட விமர்சனம், host horror movie 2020, synopsis the host Korean, host bong Joon Ho .

அருமையான திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

படத்தின் ஆரம்பத்தில் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் உள்ள டாக்டர் ஒருவர் மருத்துவ கழிவுகளை ஆற்றில் விடுமாறு உத்தரவிடுகிறார். 

Gang-Doo மற்றும் அவனது அப்பா (Park Hi Bong) ஆற்றின் அருகில் உணவகம் நடத்தி வருகிறார்கள். அவனது குழந்தை (Park Hyun Seo) சகோதரன் (Park Nam il )மற்றும் சகோதரியுடன் (Park Nam Joo) வசித்து வருகின்றனர். 

6 வருடங்கள் கழித்து ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் வித்தியாசமானமான ஒரு மிருகம் தொங்கி கொண்டு இருக்கிறது. 

தண்ணீருக்குள் செல்லும் மிருகம் சிறிது நேரத்தில் வெளியே வந்து கண்ணில் பட்டவர்களை கொன்று குவிக்கிறது. Gang Doo மற்றும் இன்னொருவன் இணைந்து மிருகத்தை தாக்குகின்றனர். ஆனால் Park Hyun Seo – வை தூக்கி கொண்டு ஆற்றில் குதித்து மறைந்து விடுகிறது அந்த மிருகம். 

இந்நிலையில் அந்த மிருகம் Corona, SARS வகையான பரவக்கூடிய வைரஸ் ஒன்றை பரப்பி விட்டு சென்று விட்டது என கொரிய அரசு சொல்கிறது. இதனால் Gang Doo – வின் மொத்த குடும்பமும் பலத்த பாதுகாப்புடன் தனிமைப்படுத்தும் முகாமில் அடைக்கப்படுகின்றனர். 

ஒரு புதிய நம்பரில் இருந்து Gang-Doo விற்கு ஃபோன் வருகிறது மறுமுனையில் பேசும் Hyun Seo தான் பாதாள சாக்கடையில் மாட்டிக் கொண்டு இருப்பதாக கூறுகிறாள். 

போலீஸ் மற்றும் அதிகாரிகள் இவர்கள் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். இதனால் குடும்பம் மொத்தமும் தனிமை முகாமில் இருந்து தப்பித்து குழந்தையை காப்பாற்ற கிளம்புகிறார்கள். 

எவ்வாறு தப்பித்தார்கள் ? குழந்தையை எவ்வாறு காப்பாற்றினார்கள்? மிருகம் என்னாயிற்று ? என்பதை படத்தில் பாருங்கள். 

சீரியசான கதைக்களம் ‌ஆனால் படம் முழுவதும் நகைச்சுவை இழையோடுகிறது.‌ நடுவே இந்த ‌சூழ்நிலையை சுற்றி நடக்கும் அரசியலையும் காட்டுகிறது படம். 

கிராஃபிக்ஸ்-ல் மிருகத்தின் வடிவமைப்பு அருமை. 

சில இடங்களில் படம் மெதுவாக செல்லும் போது எல்லாம் மிருகத்தின் என்ட்ரி வந்து படத்தின் வேகத்தை கூட்டுகிறது. 

கிராஃபிக்ஸ் , ஒளிப்பதிவு , இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது . 

Gang Doo கதாபாத்திரத்தில் Kang-ho Song (Memories of murder, Parasite) அப்பாவியான அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

அவரின் சகோதரர் கதாபாத்திரத்தில் Hae ill Park ( War of the arrows ) , சகோதரி கதாபாத்திரத்தில் Doona Bee ( kingdom) , மகளின் கதாபாத்திரத்தில் Ko Asung (Snow Piercer) என அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள். 

கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

IMDb Rating ; 7.1

Available in Netflix 

Director: Bong Joon-ho

Cast: Song Kang-ho, Byeon Hie-bong, Park Hae-il, Bae Du-na, Ko Ah-sung

Screenplay: Bong Joon-ho, Baek Chul-hyun, Ha Jun-won

Cinematography: Kim Hyung-ku

Music: Lee Byung-woo 

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

I am mother – ஐ ஆம் மதர் (2019)I am mother – ஐ ஆம் மதர் (2019)

I am mother – ஐ ஆம் மதர் (2019) – Movie Review In Tamil  இது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம்.  மனித இனம் கூண்டோடு அழிந்து விட்டால் மறுபடியும் மனித இனத்தை முதலில் இருந்து உருவாக்க

Lion – 2016Lion – 2016

செம சென்டிமென்ட் படம். கண்டிப்பா அழ வச்சுருவாங்க. சிறுவயதில் தன் குடும்பத்தை பிரிந்த ஹீரோ 25 வருடங்கள் கழித்து மீண்டும் தன் குடும்பத்தை தேடி கண்டுபிடிப்பதை பற்றிய படம்.  IMDb 8.0 தமிழ் டப் இல்லை. படத்தோட ஆரம்பத்தில் ஒரு குக்கிராமம்

Unhinged – அன்ஹிஞ்ட் – 2020Unhinged – அன்ஹிஞ்ட் – 2020

Gladiator பட ஹீரோ Russell Crowe நடிச்ச திரில்லர் படம் இது. அவரு வேற தாடி வைச்சு வித்தியாசமான கெட்டப்பில் இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். படம் டைட்டில் போடும்போதே எத பத்தினு ஒரு ஐடியா கிடைச்சது.  ட்ராஃபிக்ல போடுற சண்டை, பொதுவாக