இது ஒரு French ரிவென்ஜ் திரைப்படம். வன்முறை அதிகமுள்ள திரைப்படம்.
ஒரு பெண் தன்னை கற்பழித்த ஆண்களை கொடூரமாக பழிவாங்கும் I Spit On Your Grave , The Nightingale – வகையான படம்.
திருமணமான நடுத்தர வயதில் உள்ள ரிச்சர்ட் Jen எனும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறான். பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த இவன் மற்றும் இவனது நண்பர்கள் வருடம் தோறும் பாலைவனத்தில் மிருக வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த வருடம் ஒரு நாளைக்கு முன்பு கிளம்பும் ரிச்சர்ட் தன்னுடன் Jen – ஐ அழைத்துச் செல்கிறான். மறுநாள் வரும் நண்பர்கள் Jen-ன் மேல் ஆசை கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் ரிச்சர்ட் இல்லாத நேரத்தில் ஸ்டான் கற்பழித்து விடுகிறான்.
ரிச்சர்ட் வந்த உடன் புகார் செய்கிறாள் Jen. ஆனால் வாய் தகராறு முற்றி Jen – ஐ மலை உச்சியில் இருந்து தள்ளி விட்டு விடுகிறான் ரிச்சர்ட்.
கீழே விழும் Jen சாகாமல் தப்பித்து திரும்ப வந்து இந்த மூவரையும் கொடுரமாக பழி வாங்குவது தான் படம்.
வழக்கமான ஒரு பழிவாங்கல் திரைப்படம்.. புதிதாக எதுவும் இல்லை. எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகள்…
ஆனால் ஒளிப்பதிவு மற்றும் படம் பிடித்த இடங்கள் அருமையாக இருக்கும். பின்னணி இசை நன்றாக இருந்தது.
ஒரு முறை பார்க்கலாம் ஆனால் குடும்பத்துடன் பார்க்க ஏற்றது அல்ல.
Directed by: Coralie Fargeat
Cast: Matilda Lutz, Kevin Janssens, Vincent Colombe, Guillaume Bouchède
Music: Rob
Cinematography: Robrecht Heyvaert
IMDb Rating : 6.3
Available in Netflix
Watch Trailer: