Into the badlands – இன் டு தி ஃபேட்லான்ட்ஸ் – 2015 – 2019

மொத்தம் 3 Season – 32 Episodes 

இது உலகம் அழிந்து போன பின்பு நடப்பது போன்று உருவாக்கப்பட்ட ஒரு தொடர். 

Into the badlands review in tamil , இன் ட்டு தி ஃபேட்லான்ட்ஸ் தொடர் விமர்சனம், action tv series, post apocalyptic, martial arts, Amazon prime, amc tv

தொடரில் துப்பாக்கி கலாசாரம் ‌கிடையாது, பழைய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் வருகின்றன, சண்டைக்காட்சிகள் முழுவதும் தற்காப்புக் கலைகளை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அமானுஷ்யம் கலந்த விஷயங்களும் தொடர் முழுவதும் உள்ளது. பெரும்பாலும் சண்டைக்காட்சிகளில் வாள், கம்பு, கத்தி போன்ற ஆயுதங்கள் உபயோக படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ஆக்ஷ்ன் படங்கள் மற்றும் தொடர்கள் விரும்பும் ரசிகர்கள், ஒரு வித்தியாசமான தொடர் பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். 

கதை: 

உலகம் அழிந்து போன நிலையில் மிச்சம் இருக்கும் மக்களை 6 தலைவர்கள் கட்டுக்குள் வைத்து உள்ளனர். இந்த தலைவர்கள் குறுநில மன்னர்கள் போல ஆட்சி நடத்தி வருகின்றனர். 

ஒவ்வொரு தலைவரிடமும் கிளிப்பர்ஸ் எனப்படும் தற்காப்புக் கலைகளில் வல்லுநர்களான படை உள்ளது. இந்த படைகளுக்கு தலைவன் Regent என அழைக்ப்படுகிறான். இந்த Badlands மற்றும் Baron களுக்கு என்று தனியே சட்ட திட்டங்கள் வைத்து உள்ளனர்.

Regent – என்பவன் Baron – னுக்கு வேட்டை நாய் போன்ற பணி செய்பவன். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மற்றும் யாரையாவது கொல் என்றால் பதில் கேள்வி கேட்காமல் கொன்று வருவது இவர்களுடைய வேலை. 

மொத்தம் உள்ள 6 Baron களில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மூவர். 

Quinn , Widow and Chou. 

க்வின்னின் கிளிப்பராக வேலை செய்பவர் நம்ம ஹீரோ சன்னி . 6 மண்டலத்தில் சண்டையிடுவதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது.  

விடோ – பெண்ணியம் பேசும் ஒரு தலைவி. பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என பாடுபடுகிறார். சண்டை செய்வதில் வல்லவர். 

Chou – மற்றோரு பெண் Baron ஆனால் மிகவும் கொடூரமானவள். 

இந்த 6 Baron களும் ஆட்சி செய்யும் நிலப்பரப்பு Badlands என அழைக்கப்படுகிறது. இந்த Badlands வெளியே உள்ள இடம் Wasteland என அழைக்கப்படுகிறது.‌

இந்நிலையில் க்வின்னின் கோட்டைக்கு வந்து சேர்கிறான் MK எனும் ஒரு 15 வயது மர்ம சிறுவன் . அவனுக்கு ரத்தம் வரும் படியான காயம் ஏற்ப்பட்டால் ராட்சத பலம் வந்து எதிரில் இருப்பவர்களை துவம்சம் செய்கிறான். 

அஷ்ரா எனும் ஊரை குறிக்கும் பதக்கத்தை வைத்திருக்கிறான் ‌MK , அதே போன்ற பதக்கம் சன்னியிடமும் உள்ளது. இந்நிலையில் சன்னியின் காதலி கர்ப்பமாகிறார். 

கிளிப்பர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் காதலியை கூட்டிக்கொண்டு MK உதவியுடன் Badlands யை விட்டு தப்பிக்க திட்டமிடுகிறார். 

அதீத சக்தி படைத்த சிறுவன் MK வை பற்றி தெரிந்து கொண்ட விடோ அவனை கைப்பற்ற முயல்கிறார். 

ஒரு கட்டத்தில் மூவரும் பிரிந்து விடுகிறார்கள். சன்னி அடிமையாக ஒரு சுரங்கத்தில் விற்கப்படுகிறான். அங்கு பாஜி என்பவனை சந்திக்கிறான். இருவரும் அங்கிருந்து தப்பித்து மறுபடியும் அவனுடைய காதலியை கடைப்பிடிக்க Badlands க்குள் நுழைகிறான்.

அவன் காதலியுடன் சேர்ந்தானா ? யார் இந்த MK.? பாஜி எவ்வாறு சன்னிக்கு உதவினான் என்பதை தொடரில் பாருங்கள். 

சன்னி கதாபாத்திரத்தில் Daniel Wu, சண்டை காட்சிகளில் கலக்கி இருக்கிறார். 

விடோ கதாபாத்திரம் சிறப்பான ஒன்று. Emily Beecham பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். அவருடைய ஸ்டைலான சண்டைக்காட்சிகள் சிறப்பு. 

பாஜி கதாபாத்திரத்தில் Nick Frost. ஆரம்பத்தில் காமெடியன் போல அறிமுகம் ஆகும் இவரின் கதாபாத்திரம் ஒவ்வொரு எபிசோடிலும் நினைத்து பார்க்க முடியாத படி மாறுகிறது. ஹீரோவின் தோழன் கதாபாத்திரத்தில் சிறப்பாக பொருந்தி உள்ளார். 

சன்னியின் குரு மற்றும் பிற்பகுதியில் விடோவின் ஆலோசகராக Weldo கதாபாத்திரத்தில் Stephen Lang (Don’t Breathe, Avatar -ல்  military commander )சிறப்பாக நடித்திருக்கிறார். 

இவர்களை தவிர அதீத சக்தி படைத்தவர்களை கண்டுபிடித்து அவர்களின் சக்தியை கட்டுப்படுத்த பயிற்சி கொடுக்கிறது ஒரு அமைப்பு. 

அதீத சக்தி படைத்தவர்களை கண்டுபிடித்து கூண்டோடு அழிக்க முயற்சி செய்ய பிளாக் லோட்டஸ் எனும் அமைப்பு முயல்கிறது. 

அதீத சக்தி படைத்த வீரர்களை உருவாக்கும் ரகசியத்தை கண்டுபிடித்து உலகத்தை கைப்பற்ற நினைக்கிறான் Pilgrim என்பவன். 

Baron – களுக்கு இடையே அதிகார சண்டை, வாழ நினைக்கும் சன்னி, அதீத சக்தி படைத்த சிறுவன் மற்றும் அவர்களை பிடிக்க/அழிக்க நினைக்கும் அமைப்புக்கள் , உலகத்தை கைப்பற்ற நினைக்கும் பில்கிரிம் என பல தரப்பட்ட குழுக்களில் யார் ஜெயித்தார்கள் என்பதை பரபரப்பு மற்றும் பல திருப்பங்களுடன் சொல்கிறது தொடர். 

மொத்தத்தில் ஒரு நல்ல டைம் பாஸ் தொடர். ‌

IMDb Rating : 7.9

Cast: Marton Csokas, Daniel Wu, Emily Beecham

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Boss Level – 2021Boss Level – 2021

இது ஒரு Sci Fi + Time loop Concept படம். கொஞ்சம் Comedy + நிறைய Action.  படம் பார்த்தற்கான காரணங்கள்.  Mel Gibson, Naomi Watts and Time Loop concept.  படத்தை பத்தி முடிஞ்ச வரைக்கும் ஸ்பாய்லர்

க்ராவ்ல் (Crawl) – 2019க்ராவ்ல் (Crawl) – 2019

க்ராவ்ல் (Crawl) –  2019  இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிருகத்தின் ‌இடமிருந்து தப்பிப்பது பற்றிய திரைப்படம்.  நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையாக வருகிறார்.‌ஒரு நாள் அவருடைய அக்கா  ஃபோன் செய்து அவர்களுடைய அப்பா ஃபோன் எடுக்கவில்லை என்றும் கடுமையான புயல்

Confession Of Murder – 2022Confession Of Murder – 2022

கொரியன் சட்டப்படி 15 வருடத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் குற்றவாளியை அதுக்கு அப்புறம் எதுவும் செய்ய முடியாது என்பதை அடிப்படையாகக் கொண்டு வந்து உள்ள படம‌.  IMDb 7.0 Tamil dub ❌ OTT ❌ சீரியல் கில்லர்களுக்கும் தென் கொரியாவிறகும்