How to train your dragon – ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் – 2010

How to train your dragon Tamil Review 

இது பெர்க் என்னும் கிராமத்தில் அட்டூழியம் செய்யும் ட்ராகன்களை ஹிக்கப் எனும் ஊர் தலைவரின் மகன் புத்திசாலித்தனமாக கட்டுப்படுத்தி ஊரைக் காப்பாற்றுவது பற்றிய கதை.

How to train your dragon movie review in tamil, ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் திரைப்பட விமர்சனம், hiccup, Chris Sanders, Dean DeBlois, Jay Baruchel,

மிக அருமையான திரைப்படம். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். 

ஒல்லியான தேகம் கொண்ட ஹிக்கப்பிற்கு படிப்பது மற்றும் புதிய இடங்களை கண்டறிதல் பிடித்த ஒன்று. ஆனால் ஊர்த்தலைவரான அவனுடைய அப்பாவிற்கு(ஸ்டாய்க்) அவன் பெரிய வீரனாகி ஊரை துவம்சம் செய்யும் ட்ராகன்களை அழித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது விருப்பம். 

ஒரு நாள் ட்ராகன்கள் ஊருக்குள் வருகின்றன. ஸ்டாய்க் மற்றும் கோப்ளர் ( ஆயுதங்கள் மற்றும் கருவிகள் செய்பவர்)  இருவரும் அவை மீது போர் தொடுக்கின்றனர். 

ஸ்டாய்க் ஒரு வீட்டின் மீது பொருத்தப்பட்டுள்ள பெரிய வில்லை உபயோகித்து ஒரு ட்ராகனை வீழ்த்துகிறான். ஆனால் அவன் சொல்வதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். 

மறுநாள் வீழ்ந்த ட்ராகனை தேடி காட்டிற்குள் செல்கிறான் ஹிக்கப். அங்கு பார்த்தால் வித்தியாசமான ஒரு ட்ராகன் விழுந்து கிடக்கிறது. அது நைட் ப்யூரி எனப்படும் அதீதமான சக்தி வாய்ந்த அரிய வகை ட்ராகன் ஆகும். 

அது பற்கள் இல்லாமல் இருக்கிறது, வேண்டும் என்றால் அது பற்களை வெளியே கொண்டு வரக்கூடிய ஆற்றல் பெற்று இருக்கிறது. 

அதற்கு ட்டுத்லெஸ் என பெயரிடுகிறான். 

இரகசியமாக அதனுடன் பழகி ட்ராகன்களை பற்றி ‌அறிந்து கொள்கிறான். அது தன் வால் பகுதியில் உள்ள குறைபாடு காரணமாக பறக்க முடியாத நிலையில் உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக ஒரு கருவி செய்து பொருந்துகிறாரன். இருவரும் சேர்ந்து நன்றாக ஊரை சுத்து கின்றனர்..

ஒரு கட்டத்தில் ட்ராகன்கள் நல்ல குணம் கொண்டது அவற்றை பழக்கினால் அவைகளுடன் இணக்கமாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறான். 

ஊரில் ட்ராகன்களை அடக்கும் போட்டி நடத்தப்படுகிறது. அதில் அனைவரும் வன்முறையால் ட்ராகன்களை அடக்க இவன் ட்ராகன்களை தடவி கொடுத்து நாய்க்குட்டி போல சொல்வதை கேட்க வைக்கிறான். அனைவரும் ஆச்சரியமாக பார்க்க ஸ்டாய்க் தன் மகன் வீரானாக இல்லை என்று கடுப்பாகிறான். 

ஒரு நாள் ட்டூத்லெஸ் உடன் இணைந்து ஊரை சுற்றுகையில் மலைகளுக்கு நடுவே ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார்கள். ஊரில் இருந்து தூக்கி வரும் அனைத்து விலங்குகள் மற்றும் பொருட்களை ட்ராகன்கள் அங்கு தூக்கி செல்வதை பார்க்கிறார்கள். 

அங்கு உள்ள ஏதோ ஒன்று தான் ட்ராகன்களை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்து மற்ற ட்ராகன்கள் மற்றும் ஊரை ட்டூத்லெஸ் உதவியுடன் காப்பாற்றுவது தான் மீதி திரைப்படம். 

அனிமேஷன் சூப்பராக இருக்கிறது. ட்ராகன்களை கொடுரமான நெருப்பை உமிழும் விலங்காக பார்த்த நமக்கு (உபயம் : கேம் ஆஃப் த்ரோன்ஸ்) இது வித்தியாசமான ஒரு அனுபவம். அதிலும் ட்டூத்லெஸ் ட்ராகனின் வடிவமைப்பு மற்றும் அது முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் மிக மிக அருமை. .

அனைத்து ட்ராகன்களும் செம க்யூட்டாக இருக்கிறது. 

ஹிக்கப்பின் கேர்ள் ப்ரண்ட் மற்றும் நண்பர்கள் கதாபாத்திரங்களும் அருமை. .

மொத்தத்தில் தவற விடக்கூடாத திரைப்படம். 

இதுவரை பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக குடும்பத்துடன் பாருங்கள். 

IMDb Rating : 8.1/10

Available in Netflix.

Director: Chris Sanders, Dean DeBlois.

Cast: (voices) Jay Baruchel, America Ferrera, Gerard Butler, Craig Ferguson, Jonah Hill, Kristin Wiig, David Tennant.

Screenplay: Chris Sanders & Dean DeBlois.

Music: John Powell 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Dune – 2021Dune – 2021

இயக்குனர் Denis Villeneuve குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்.  இவரது படங்களான Arrival, Sicario, Prisoners etc., எல்லாம் வேற லெவலில் இருக்கும்.  IMDb 8.3 தமிழ் டப் இப்போதைக்கு இல்லை.  இந்த படம் ஒரு Sci Fi, Adventure படம்.

E.T. The Extra-Terrestrial – 1982E.T. The Extra-Terrestrial – 1982

E.T. The Extra-Terrestrial Tamil Review  ⭐⭐⭐⭐.5/5 Tamil ❌ – ஏலியன் தெரியம பூமில மாட்டிகிது – Scientists இத தேடுறாங்க – ஏலியன் ஒரு பையன் கூட ப்ரண்ட் ஆகுது – இந்த பையன் & Co எப்படி