Cold Skin Movie Tamil Review – கோல்ட் ஸ்கின் (2017)
இது 1914 – ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் நடக்கும் சம்பவங்களை பற்றிய திகில் திரைப்படம்.
வித்தியாசமான கதை கொண்ட திகில் திரைப்படம். ஒரு முறை பார்க்கலாம் 👍
Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.
அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது. கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான்.
முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன. தாக்குதல்களை சமாளித்து உயிர் பிழைக்கிறான் ஆனால் வீடு எரிந்து சாம்பல் ஆகிறது.
வேறு வழியின்றி Gruner – உடன் கலங்கரை விளக்கத்தில் ஐக்கியம் ஆகிறான். இருவரும் இணைந்து இந்த ஜந்துக்களுடன் இரவில் சண்டை இடுகின்றனர். ஆச்சரியப்படும் விதமாக Gruner இந்த ஜந்துக்களில் ஒன்றை தனது வளர்ப்பு பிராணி/அடிமை போல வைத்து உள்ளான்.
ஒரு கட்டத்தில் இந்த மிருகங்களிடம் மனித தன்மை உள்ளது என்பதை உணர்கிறான் Friend.
ஏன் இந்த மிருகங்கள் தாக்குகின்றன? இருவரும் உயிர் பிழைத்தார்களா ? இதற்கு முன்னால் வேலையில் இருந்தவனுக்கு என்னாயிற்று என்பதை படத்தில் பாருங்கள்.
ஒளிப்பதிவு சூப்பராக உள்ளது. இரவு நேரத்தில் கலங்கரை விளக்கு ஒளியில் மிருகங்கள் வரும் காட்சிகள் சிறப்பாக உள்ளது.
இரவு நேரத்தில் மிருகங்களுடனான சண்டை காட்சிகள் சிறப்பாக உள்ளது.
பிண்ணனி இசை அருமை 👌
மொத்தம் 3 கதாபாத்திரங்கள் தான் படத்தில். Friend கதாபாத்திரத்தில் David Oakes , Gruner கதாபாத்திரத்தில் Ray Stevenson நன்றாக நடித்துள்ளார்கள்.
Aneris எனும் விசித்திரமான ஜந்து கதாபாத்திரத்தில் Aura Garrido சிறப்பாக நடித்திருக்கிறார். ஹெவியான மிருக மேக்கப் போட்டுக்கொண்டு கொடுக்கும் expressions நன்றாக உள்ளது.
மொத்தத்தில் பிரெஞ்சு இயக்குநர் Xavier Gens நல்ல திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார்.
ஹாரர் திரைப்பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
IMDb Rating : 6.0
Available in Amazon Prime
Cast. Ray Stevenson as Gruner. David Oakes as Friend. Aura Garrido as Aneris.