Calibre – காலிபர் (2018)

இது ஒரு நல்ல திரில்லர் திரைப்படம். Netflix நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

IMDb -ல் ரேட்டிங் நன்றாக இருந்ததால் இந்த படத்தை பார்த்தேன். படம் கொஞ்சம் மெதுவாக தான் நகர்கிறது . ஆனால் ஒரு சம்பவத்திற்கு பிறகு பரபரப்பாக நகர்கிறது. 

வான் மற்றும் மார்க்கஸ் இருவரும் நீண்ட கால நண்பர்கள். 

Calibre Netflix original movie review in tamil, காலிபர் திரைப்பட விமர்சனம், calibre full review, Netflix original film, thriller movie, slow Burning

வான் தன் காதலியுடன் வசித்து வருகிறான் . காதலி கர்ப்பமாக இருப்பதால் அப்பா ஆக போகும் சந்தோஷத்தில் இருக்கிறார். மார்க்ஸ் ஒரு சுதந்திர பறவை . 

இருவரும் நீண்ட வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள் . இருவரும் இணைந்து மலைப்பகுதியில் வேட்டைக்கு செல்லலாம் என முடிவு செய்கின்றனர். 

இருவரும் கிளம்பி மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அங்குள்ள மக்கள் அவ்வளவு நட்பாக பழகவில்லை. மேலும் அங்கு வந்த பெண்ணுக்கு போதைப் பொருட்களை கொடுக்கிறான் மார்க்கஸ். இது தெரிந்து அந்த பெண்ணின் உறவினர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்நிலையில் காட்டிற்குள் வேட்டைக்கு செல்லும் நண்பர்கள் இருவரும் ஒரு மானை வேட்டையாட முயல்கின்றனர். 

வான் தான் சுட வேண்டும் என மார்க்கஸ் சொல்கிறான். மானை சுடும் நேரத்தில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம் இவர்களது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது ‌. இதன் விளைவாக நடக்கும் தொடர்ச்சியான சம்பவங்கள் படத்தை நகர்த்தி செல்கிறது. 

படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. காடு மற்றும் மலைகளை இருட்டாக படம்பிடித்து உள்ளது படத்தின் இறுக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. 

கொஞ்சம் கதாபாத்திரங்கள் இருந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் அனைவரும்.

Slow Burning வகையான திரைப்படம். நிறைய பேசுகிறார்கள் ஆனால் ஒரு முறை பார்க்கலாம். 

IMDb Rating : 6.8

Available in Netflix

DIRECTED BY: MATT PALMER..

WRITTENBY: MATT PALMER

CAST: JACK LOWDEN, MARTIN MCCANN, TONY CURRAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Howl – 2013Howl – 2013

Howl Tamil Review  நைட் நேரம் காட்டுக்குள்ள போற ட்ரெயின் ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுது. திடீர்னு ஏதோ ஒரு மிருகம் பயணிகளை எல்லாம் அட்டாக் பண்ணி கொல்ல ஆரம்பிக்க எப்படி தப்பித்தார்கள் என்பதை படத்தில் பாருங்கள்.  படத்துல பெரிய லெவல்

Sicario – சிகாரியோ – 2015Sicario – சிகாரியோ – 2015

இது 2015 – ல் வந்த க்ரைம் த்ரில்லர்.  Sicario என்றால் மெக்சிகோவில் Hit Man என்று அர்த்தம் ‌‌  இந்த படத்தின் இயக்குனரின் மற்றொரு படமான Wind River செமயாக இருந்தது. அமெரிக்க , மெக்சிகோ எல்லைப்பகுதியில் நடக்கும் போதை

Mile 22 – 2018Mile 22 – 2018

ஒரு வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சரணடையும் ஒருத்தனை 22 மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு ஃப்ளைட்டில் பத்திரமாக ஏற்றி அனுப்ப வேண்டியவேலை ஒரு குழுவிற்கு கொடுக்கப்படுகிறது.  அவர்கள் Mission ஐ வெற்றிகரமாக முடித்தார்களா என்பது படம்.  IMDb 6.1  Tamil