9 – Animated Film (2009)

எதிர்காலத்தில் உலகம் அழிந்து போன பின்பு ஒரு வீட்டின் அறையில் சாக்கு பொம்மை திடீரென உயிர் பெற்று எழுகிறது.  அதன் பின்புறம் 9 என்று எழுதப்பட்டுள்ளது. 
வேளியே சென்று பார்த்தால் இருண்டு கிடக்கிறது மனிதர்கள் யாரும் இல்லை, ஒரு தாய் குழந்தையுடன் இறந்து கிடப்பதை பார்த்து பீதி அடைகிறது. 
சிறிது தூரத்தில் ‘2’ என எண் எழுதப்பட்ட பொம்மையை சந்திக்கிறது. இந்த நேரத்தில் வரும் டைனோசர் போன்ற எந்திர மிருகம் 2 ம் நம்பர் பொம்மையை தூக்கி சென்று விடுகிறது. 
பின்னர் ஒரு பாழடைந்த நிலையில் உள்ள இடத்தில் அதைப் போன்ற உருவ அமைப்பு கொண்ட இன்னும் சில பொம்மைகளை  சந்திக்கிறது.  ஒவ்வொரு பொம்மை க்கும் ஒரு நம்பர் கொடுக்கப் பட்டுள்ளது.ஔ
நம்பர் 1(குரல் Elijah Wood ) , வயதில் மூத்த பொம்மையாக உள்ளது. இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பி விட்டதாகவும் நடந்த சண்டையில் மனித இனம் கூண்டோடு அழிக்க பட்டு விட்டது என்கிறது. 
ஆனால் நம்பர் 9 இயந்திரத்தால் தூக்கி செல்லப்பட்ட 2 நம்பர் பொம்மையை காப்பாற்ற கிளம்புகிறது ‌‌. 
எவ்வாறு நம்பர் 2 ஐ காப்பாற்றுகிறது, யார் இந்த பொம்மைகள், இவர்களுக்கும் மனிதர்களுக்கும் என்ன தொடர்பு என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் படத்தில் சொல்லப்படுகிறது. 
படத்தின் கதை மிக எளிமையான ஒன்று ‌. சொல்லப்பட்ட விதம் அருமை.  படம் முழுவதும் ஒரு இருள் சூழ்ந்த ஒளியமைப்பு அழிந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது. 
பொம்மைகளுக்கு குரல் கொடுத்த நடிகர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து உள்ளார்கள். அனிமேஷன் அருமையாக உள்ளது.  ஆக்ஷ்ன் காட்சிகள் சிறப்பு 🔥
எனக்கு தெரிந்து இது பெரியவர்களுக்கான அனிமேஷன் படம்.  குழந்தைகளுடன் பார்க்கலாம் ஆனால் சில காட்சிகள் மற்றும் படத்தின் கரு அவர்களுக்கு புரியாமல் போகலாம். 
ஒரு முறை பார்க்கலாம் 👍
Available in Netflix
Director: Shane Acker
Cast: (voices) Elijah Wood, Christopher Plummer, Martin Landau, John C. Reilly, Crispin Glover, Jennifer Connelly
Screenplay: Pamela Pettler, based on a story by Shane Acker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Bad Guys (Sheesh) – 2022The Bad Guys (Sheesh) – 2022

இது ஒரு அனிமேஷன், காமெடி படம்.  ஓநாய், பாம்பு, சுறா, சிலந்தி, பிரான்கா மீன் என இவங்க 5 பேரும் ப்ரண்ட்ஸ் + கொள்ளைக்காரர்கள்.  IMDb 6.9 Tamil dub ❌ OTT ❌ With Family ✅ ஒரு கட்டத்தில்