Upgrade – அப்கிரேட் – 2018

இது எதிர்காலத்தில் நடப்பது போன்ற Sci Fi திரைப்படம் ‌. 

எதிர்காலத்தில் கார், வீட்டில் உள்ள பொருட்கள் என எல்லாமே குரலின் மூலம் இயங்கும் AI மூலம் கட்டுப்படுத்தப் படுகின்றன. 

படத்தின் நாயகன் க்ரே ( Logan Marshall – Green ) தன் மனைவி ஆஷா (Melanie Vallejo) என இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

ஒரு நாள் இருவரும் க்ரேவின் நண்பனும் கம்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநனரான எரோன் ( Harrison Gilbertson) ஐ சந்தித்து விட்டு வரும் வழியில் தானாகவே ஓடும் காரில் (Self driving car) ஏதோ பிழை ஏற்பட்டது விபத்தில் சிக்குகின்றனர். 

அப்போது அங்கு வரும் ஒரு ரவுடி கும்பல் க்ரேவை படுகாயம் அடைய செய்து விட்டு அவரது மனைவியை கொன்று விடுகிறார்கள். 

உயிர் பிழைத்த க்ரே முதுகெலும்பில் அடி பட்டதன் காரணமாக கை , கால்கள் செயல் இழந்து நடை பிணமாக சக்கர நாற்காலியில் விழுகிறார். 

க்ரேவை பார்க்க வரும் நண்பன் எரோன் தான் கண்டுபிடித்த ஒரு அதிநவீன சிப்பான ஸ்டெம் ஐ பற்றி கூறுகிறான். ஸ்டம்யை உடலில் பொருத்தி கொண்டால் அவன் முன்பு போல் நடக்கலாம் என்கிறான். 

ஒரு கட்டத்தில் சிப்பை பொருத்த ஒத்துக் கொள்ள , க்ரேவின் முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்து ஸ்டெம் பொருத்தப் படுகிறது. 

கொஞ்சம் நாளில் அவனது தலைக்குள் இருந்து குரல் கேட்கிறது. ஆம் ஸ்டெம் எதிர்பார்த்ததை விட சக்தி வாய்ந்ததாக மற்றும் அவனுடன் உரையாடும் திறமைகளை கொண்டு உள்ளது. 

இதற்கு நடுவில் டிடெக்டிவ்வாக வரும் கார்டெஸ் க்ரே மற்றும் அவனது மனைவியின் நிலைமைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணருகிறார். 

ஸ்டெம் விபத்து நடந்த CCTV காட்சியில் இருந்து ஒருவனை அடையாளம் கண்டு விடுகிறது. ஸ்டெம்மின் உதவியுடன் சக்கர நாற்காலியில் இருந்து எழும் க்ரே குற்றவாளிகளை கண்டுபிடித்து பழி வாங்குவது தான் படம். கடைசியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் உடன் முடிகிறது படம்.

எதிர்காலத்தில் உள்ள வீடு, கார், கைகளுக்குள் பொருத்தப்பட்ட துப்பாக்கி (நம்ம சிட்டி ரோபாட் ஸ்டைல்) , கண்களுக்குள் பொருத்தப்பட்ட வீடியோ கேமரா, தும்மல் மூலம் எதிரில் உள்ளவனை கொல்வது போன்ற கற்பனை மற்றும் அதை படமாக்கப்பட்ட விதம் அருமை. 

ஸ்டெம் உதவியுடன் க்ரே சண்டை போடும் காட்சிகள் வித்தியாசமாக உள்ளது. ரோபோ போல் அல்லாமல் மனிதன் போலும் அல்லாமல் ஒரு சிப் கை கால்களை கட்டுப் படுத்தி சண்டை போட வைத்தால் எவ்வாறு இருக்கும் என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளனர்.  

மொத்தத்தில் சாதரணமான பழி வாங்கும் கதையை Sci Fi கலந்து கடைசியில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் உடன் சிறப்பாக கொடுத்து உள்ளார் இயக்குனர். 

வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளதால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல.

IMDb Rating: 7.5/10 

Available in Netflix

Director: Leigh Whannell

Cast: Logan Marshall-Green, Benedict Hardie, Betty Gabriel, Richard Cawthorne, Harrison Gilbertson, Melanie Vallejo, Simon Maiden

Screenplay: Leigh Whannell

Cinematography: Stefan Duscio

Music: Jed Palmer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017

Midnight Runners Tamil Review  Cheong-nyeon-gyeong-chal Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்ஷன் காமெடி திரைப்படம். ட்விட்டரில் ஒரு நண்பர் பரிந்துரை செய்திருந்தார் அதனால் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி. 

Read My Lips – 2001 (French)Read My Lips – 2001 (French)

Read My Lips – 2001 (French)  காது கேட்காத ஆனா உதடுகள் அசைவது  மூலமா சொல்வதை புரிந்து கொள்ளும் பெண்ணும் பெயிலில் உள்ள கைதியும் மாறி மாறி திருட்டுத்தனம் பண்ண உதவி செய்து கொள்கிறார்கள்‌.நல்ல ஒரு ரொமான்டிக் திரில்லர்  நடிப்பு

You Were Never Really Here – 2017You Were Never Really Here – 2017

 Joaquin Phoenix நடித்த ஒரு Crime Drama , படம் இது.  ஹீரோ ஒரு Ex military மேன் காணாமல் போன பெண்களை கண்டுபிடித்து கொடுப்பது தொழில். ஒரு அரசியல்வாதியின் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்த பின்பு அதனால் ஏற்படும் விளைவுகள் தான்