The Night Comes For Us – தி நைட் கம்ஸ் ஃபார் அஸ் – 2018

இது  ஒரு இந்தோனேசிய அதிரடி ஆக்ஷன் திரைப்படம். 

ரெய்டு மற்றும் ரெய்டு 2 படங்களை பார்த்த பின்பு இந்தோனேசிய ஆக்ஷ்ன் படங்களின் மீது கொஞ்சம் ஆர்வம் வந்து விட்டது. அதிலும் இத்திரைப்படங்களின் நாயகனான Iko Uwais ஆக்ஷ்ன்னில் கலக்குகிறார்.  இவர் நடித்த இன்னொரு திரைப்படம் தான் The night comes for us. 

தென்கிழக்கு ஆசியாவில் போதைப் பொருள், ஆயுதங்கள், மனிதர்கள் என எல்லாவற்றையும் கடத்தி அதில் பெரும் பணம் சம்பாதிக்கின்றனர் சில குழுக்கள். 

இந்த குழுக்கள் அனைத்தும் இணைந்து ஆறு பேர் (Six Seas)  கொண்ட குழுவை நியமித்து உள்ளனர். இவர்களது அடையாளம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது எல்லாம் தொழில் செய்ய இடையூறு ஏற்படுகிறதோ அப்போது தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டியது Six Seas குழுவின் பொறுப்பு. 

இந்நிலையில் தங்கள் குழுவின் பணத்தை திருடியதாக கூறி ஒரு மொத்த கிராமத்தையும் படுகொலை செய்கிறது(நமம அத்திப்பட்டி மாதிரி)   Ito என்பவனின் தலைமையில் செயல்படும் குழு. 

எல்லாரையும் கொன்று குவித்த நிலையில் ஒரு சிறுமியை கொல்ல வேண்டியது உள்ளது.  அவளை சுட செல்லும் Ito திடீரென ஞானோதயம் பெற்று அவன் குழுவை காலி செய்துவிட்டு சிறுமியை காப்பாற்றி அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.‌ அப்போது நடக்கும் சண்டையில் குண்டடி பட்டு விடுகிறது. 

இதனால் கடுப்பான கடத்தல் குழுக்கள் மற்றும் Six Seas உறுப்பினர்கள் Ito வை கொல்ல  இருக்கின்ற மொத்த அடியாட்களையும் அனுப்புகின்றனர். 

தப்பித்த Ito சிறுமியுடன் தன் வீட்டிற்கு செல்கிறான். அவன் மனைவி முதலுதவி செய்த கையோடு பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அவனின் நண்பர்களை உதவிக்கு அழைக்கிறார். 

தன் நண்பர்களிடம் தனக்கும் அந்த சிறுமிக்கும் புது அடையாளங்களை உருவாக்குமாறு வேண்டுகோள் வைக்கிறான். புதிய அடையாளத்தை வைத்து நாட்டை விட்டு வெளியேறுவது அவனுடைய திட்டம். அப்போது அங்கு உள்ள புகைப்படத்தில் பழைய  நண்பன் ஆரியன்  இவர்களுடன் இல்லாமல் இருப்பதை உணர்கிறான். மேலும் அவன் எங்கே இருப்பான் என்று நினைத்தபடி வெளியே கிளம்புகிறான். 

மேலும் பணம் தேவைப்படுவதால் அங்கு மாமிசக் கடை நடத்தும் அவனுக்கு கீழ் வேலை செய்யும் யோகன் என்பவனை சந்திக்கச் செல்கிறான். 

யோகனுக்கு கடத்தல் குழுக்களிடமிருந்து ஏற்கனவே தகவல் வந்துவிட பணம் தர மறுத்து அவன் மற்றும் அவனுடைய குழு கொடூரமான சண்டையில் இறங்குகின்றனர். 

Ito எல்லோரையும் கொன்று விடுகிறான் ஆனால் யோகன் சாவதற்கு முன்பு யாருக்கோ போன் செய்து விடுகிறான். தப்பிக்க நினைக்கும் வேளையில் போலீஸ் படை வந்து Ito வை தாக்கி மயக்கமடையச் செய்து போலீஸ் வாகனத்தில் போட்டுத் தூக்கிச் செல்கின்றனர்.‌ 

இந்நிலையில் இன்னொரு கும்பல் அவனுடைய வீட்டிற்கு செல்கிறது. அவன் நண்பர்கள் சிறுமியைக் காப்பாற்ற சண்டையில் இறங்குகின்றனர். ஒரு வழியாக அனைவரையும் கொன்று தப்பித்து வெளியே வந்தால் இன்னொரு குரூப் வெளியே நிற்கிறது. கடைசியில் அனைவரும் உயிர்த்தியாகம் செய்ய சிறுமி மட்டும் தப்பிக்கிறார். 

கடத்தல் கும்பலின் தலைவனான Chien Wu  Ito வின் நண்பன் ஆரியனை தொடர்பு கொள்கிறான். அவனுடைய நண்பன் Ito துரோகம் செய்துவிட்டதாகவும். ஆரியன் அவனைக் கொன்றால் SixSea குழுவில் ஒரு அங்கமாக மாறலாம் என ஆசை காட்டுகிறான். 

போலீசில் இருந்து தப்பிக்கும் Ito மீண்டும் சிறுமியுடன் இணைகிறான். மீண்டும் ஒரு கும்பல் வருகிறது அப்போது திடீரென ஒரு பெண் வந்து அனைவரையும் கொன்று விட்டு செல்கிறார். ஆனால் இருவரும் காருக்கு அடியில் ஒளிந்து தப்பிக்கின்றனர். 

ஆரியன், கடத்தல் குழு ஆட்கள், துப்பாக்கி பெண் என மூன்று குழுக்களில் இருந்து Ito சிறுமியை இவ்வாறு கைப்பற்றினான் என்பதை படத்தில் பாருங்கள். 

படம் முழுவதுமே ஆக்சன் காட்சிகள் தான். அதீதமான வன்முறை காட்சிகளும் உள்ளன. 

அந்த துப்பாக்கி பெண் யாரென்று தெளிவாக சொல்லவில்லை ஆனால் தரமான சண்டைக்காட்சிகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் Raid 2 படத்தில் சுத்தியலால் அடித்து கொல்லும் கதாபாத்திரத்தில் வருவார். 

ஆரியன் கதாபாத்திரத்தில் Uco Uwais , Raid படங்களில் ஹீரோவாக நடித்தவர். இவர் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என தெரியாமல் நடுவில் ஊசலாடுகிது. 

க்ளைமாக்ஸ் காட்சியில் Ito வுடன் போடும் சண்டை சூப்பர் 👌

Ito கதாபாத்திரத்தில் Joe Taslim நடித்துள்ளார். இவர் Raid  திரைப்படத்தில் ஹீரோவின் பாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

கதாபாத்திங்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். பெரும்பாலும் ஆக்ஷ்ன் காட்சிகள் தான் படம் முழுவதும்.

ஆக்ஷ்ன் பட பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். 

IMDb Rating : 7.0

Director: Timo Tjahjanto

Cast: Iko Uwais, Julie Estelle, Joe Taslim

3 thoughts on “The Night Comes For Us – தி நைட் கம்ஸ் ஃபார் அஸ் – 2018”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Black Site – 2022Black Site – 2022

5 நாடுகள் சேர்ந்து தீவிரவாத அமைப்புகளை பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள Underground ல ஒரு இடத்தை கட்டி வைத்து இருக்காங்க.  வில்லன் அதற்குள் ஊடுருவி சில தகவல்களை அழிக்க முயற்சி செய்கிறான் . அதில் வெற்றி பெற்றான என படத்தில் பாருங்கள். 

Raid: Redemption – ரெய்டு:ரிடெம்ஷன் – 2011Raid: Redemption – ரெய்டு:ரிடெம்ஷன் – 2011

Raid: Redemption – ரெய்டு:ரிடெம்ஷன் – 2011 தமிழ் விமர்சனம்  இது தற்காப்புக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தோனேசிய ஆக்ஷ்ன் திரைப்படம்.  இது போன்ற சண்டைக் காட்சிகளை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்தது இல்லை.  கை மற்றும் கால்களை வைத்து

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009)

டிஸ்ட்ரிக் 9 – District 9 (2009) இது ஒரு வித்தியாசமான அறிவியல் புனைவு ஏலியன் திரைப்படம்.  இது மற்ற ஏலியன் படங்கள் போல இல்லாமல் மிக  புதுமையான கதையம்சம் கொண்ட திரைப்படம். படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது.