Raid: Redemption – ரெய்டு:ரிடெம்ஷன் – 2011

Raid: Redemption – ரெய்டு:ரிடெம்ஷன் – 2011 தமிழ் விமர்சனம் 

இது தற்காப்புக் கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தோனேசிய ஆக்ஷ்ன் திரைப்படம். 

இது போன்ற சண்டைக் காட்சிகளை சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் பார்த்தது இல்லை. 

Raid: Redemption movie review in Tamil  - ரெய்டு:ரிடெம்ஷன் திரைப்பட விமர்சனம் , Gareth Evans, Iko Uwais, Joe Taslim, Doni Alamsya, Yayan Ruhian, Pierr

கை மற்றும் கால்களை வைத்து போடும் சண்டை, சின்ன கத்தி, பெரிய கத்தி, வாள் மற்றும் துப்பாக்கி சண்டை என படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளும் உள்ளது. அனைத்து சண்டை காட்சிகளும் மிகச்சிறந்த முறையில் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பு. 

கதைக்கு வருவோம். சேரிகளின் நடுவே உள்ள ஒரு 15 மாடி அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் எல்லா சட்டவிரோத காரியங்களும் நடக்கிறது. இந்த அப்பார்ட்மெண்டை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ரவுடி கும்பலின் தலைவன் டாமா. 

டாமாவின் இரண்டு கண்களாக இருப்பது இரண்டு பேர்.  புத்திசாலித்தனமான காய்களை நகர்த்தும் ஆண்டி மற்றும் கருணயே இல்லாத மேட் டாக். 

டாமா வின் அபார்ட்மெண்ட்ல் அதிரடிப்படை தாக்குதல் நடத்தி அனைவரையும் ஒழித்து விட திட்டமிடப்படுகிறுது. 

ஒரு நாளில் 20 பேர் கொண்ட அதிரடிப்படை அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் ‌நுழைகிறது.  நன்றாக போய் கொண்டு இருந்த தாக்குதல் ஒரு கட்டத்தில் டாமாவுக்கு தெரிந்த பின் தலைகீழாக மாறுகிறது. அதிரடிப்படையினரை கொல்பவர்களுக்கு அங்கேயே நிரந்தரமாக இடம் கொடுக்கப்படும் என அறிவிக்கிறான். 

இது போக அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தை சுற்றி Snipers நிறுத்தி வைத்து உள்ளான். அதனால் தப்பிக்க நினைத்து வெளியே செல்பவர்களும் எங்கிருந்து தோட்டா வருகிறது என்று ‌கூட தெரியாமல் செத்து மடிகிறார்கள். 

இந்த சூழ்நிலையை ராமா எப்படி சமாளித்தான்? எத்தனை பேர் தப்பித்தார்கள்? டாமா மற்றும் அவனது வலது மற்றும் இடது கையாக உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது பரபரப்பான ஆக்ஷ்னுடன் வேகம் குறையாமல் செல்கிறது.

ஒரு கட்டத்தில் ராமா படுகாயம் அடைந்த நிலையில் எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கும் போது எதிர்பாராத உதவி அபார்ட்மெண்ட் உள்ளே இருந்து கிடைக்கிறது. 

ஆக்ஷ்ன் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. அடியாட்கள் அனைவரும் கராத்தே தெரிந்தவர்களாக உள்ளார்கள். வித விதமாக சண்டையிட்டு கொடுரமாக செத்து மடிகிறார்கள். 

அதுவும் மேட்டாக் பாத்திரம் வித்தியாசமான ஒன்று. முதலில் சீனியர் படை வீரர் ஒருவரை சுட்டு கொல்வதற்கு வாய்ப்பு இருந்தும் கராத்தே சண்டைக்கு வா என இழுத்து சண்டை போட்டு கொல்கிறான். 

 இறுதியில் ஹீரோ மற்றும் அவனுக்கு உதவி செய்பவன் என இரண்டு பேரையும் ரிலீஸ் செய்து சண்டை தான் போடுவேன் என அடம் பிடிக்கிறான்.  இரண்டு பேரையும் அசால்ட்டாக சமாளிக்கிறான்.

பெரும்பாலும் அறைக்குள், காரிடர் என சின்ன இடத்தில் தான் சண்டை நடக்கிறது. அதுவும் எதிரிகள் கும்பல் கும்பலாக வருகிறார்கள். குறைந்த இடத்தில் கராத்தே செய்யும் வேகத்துடன் போட்டி போடுகிறது கேமரா. வித்தியாசமான கோணங்களில் அந்த அபார்ட்மெண்டை பயமுறுத்தும் வகையில் படம் பிடித்து உள்ளார் ஒளிப்பதிவு இயக்குனர். 

இயக்குனர் மற்றும் சண்டை காட்சிகள் வடிவமைப்பு செய்தவர் மிகவும் திறமைசாலிகள் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் வெகு நாட்கள் கழித்து பார்த்த சிறப்பான சண்டை படம். ஆக்ஷ்ன் பட பிரியர்கள் கண்டிப்பாக பாருங்கள். 

வன்முறை சம்பவங்கள் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மிக மிக அதிகம். 

IMDb Rating – 7.6/10

Available in Amazon Prime with Tamil dubbed

Director: Gareth Evans

Cast: Iko Uwais, Joe Taslim, Doni Alamsya, Yayan Ruhian, Pierre Gruno, Ray Sahetapy, Tegar Satrya, Iang Darawan, Verdi Solaiman

Screenplay: Gareth Evans

Cinematography: Matt Flennery

Music: Mike Shinoda and Joseph Trapanese

இந்த படத்தின் இரண்டாம் பாகம் The Raid 2 : Bernandal 

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Real Steel – 2011Real Steel – 2011

Real Steel – 2011 Movie Review In Tamil  எதிர்காலத்தில் ரோபோக்களை வைத்து போட்டி சண்டைகள் நடத்தும் காலகட்டத்தில் நடக்கும் கதை.‌ IMDb 7 Tamil dub ✅ Available @Sonyliv அப்பாவும் மகனும் குப்பையில் கிடைத்த பழைய ரோபாட்டை

Revenge – ரிவென்ஜ் (2017)Revenge – ரிவென்ஜ் (2017)

இது ஒரு French ரிவென்ஜ் திரைப்படம். வன்முறை அதிகமுள்ள திரைப்படம்.  ஒரு பெண் தன்னை கற்பழித்த ஆண்களை கொடூரமாக பழிவாங்கும் I Spit On Your Grave , The Nightingale – வகையான படம்.  திருமணமான நடுத்தர வயதில் உள்ள

Only Murders in the building – 2021Only Murders in the building – 2021

Only Murders in the building Tamil Review இது‌ ஒரு Crime investigation Thriller + Comedy வழக்கமான Crime Investigation மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார்கள். 1 Season , 10 Episodes (Each