Raid 2 Berandal movie Tamil Review
இது இந்தோனேசியாவில் இருந்து வந்த தற்காப்பு கலையை உபயோகத்தி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகளை கொண்ட திரைப்படம்.
இது 2011 ல் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற Raid -1: Redemption – ரெய்டு ரிடெம்ஷன் என்னும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.
முதல் பாகம் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் 15 மாடி கட்டிடத்திற்குள் ரெய்டு செல்லும் அதிரடிப்படையை பற்றியது.
இரண்டாம் பாகம் முதல் படம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது. அப்பார்ட்மெண்டில் இருந்து தப்பித்து வெளியே வரும் ஹீரோ ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியுடன் சேர்ந்து நகரத்தில் இருக்கும் இரண்டு மிகப் பெரிய ரவுடி கும்பல்களை ஒழித்துக்கட்டி ஊரை சுத்தப்படுத்துவது பற்றிய கதை.
இந்த கும்பல்களைப்பற்றி சரியான விவரம் இல்லாத காரணத்தினால் ஹீரோ Under cover ல் செல்ல திட்டமிடப்படுகிறது.
ஒரு கும்பல் தலைவன் மகன் (யூகோ) ஒரு பிரச்சனையில் சிக்கி ஜெயிலில் இருக்கிறான். ஹீரோ மாறுவேடத்தில் ஜெயிலுக்கு சென்று அவனுடைய நணபனாகிறான்.
ஜெயில் தண்டனை முடிந்த பிறகு வெளியே வரும் ஹீரோ யூகோவின் பரிந்துரையின் மூலம் ரவுடி கும்பல் தலைவனான அவனது அப்பாவிடம் (பேன்கன்) வேலைக்கு சேர்கிறான்.
யூகோவின் அப்பா நேர்மையான ரவுடியாக இருக்கிறார். ஆனால் யூகோவிற்கு இது சுத்தமாக பிடிப்பதில்லை. இதனால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் உரசல் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஊருக்குள் உள்ள மற்றொரு ஜப்பானிய பெரிய ரவுடி கும்பல் உள்ளது.
இந்த உரசலை உபயோகித்து பெஜோ என்னும் மற்றொரு கும்பல் தலைவன் யூகோவை தூண்டி விடுகிறான். ஜப்பான் ரவுடி கும்பலுக்கும் பேன்கன் தலைமையிலான கும்பலுக்கும் இடையே சண்டையை மூட்டி விட முயல்கிறான் பெஜோ.
இந்த இரண்டு கும்பல்களுக்கு இடையேயான சண்டையும் உச்சபட்ச வன்முறை நடக்கிறது. ஆனால் பேன்கன் நேர்மை கரணமாக இந்த சண்டே நின்றுவிடுகிறது.
இந்த கடுப்பில் யூகோ தன் தந்தையை கொன்று ரவுடி கும்பலை தன் வசம் கொண்டு வருகிறான்.
இந்த கும்பலுக்கு நடுவே மாட்டிக்கொண்டு ஹீரோ எவ்வாறு இரண்டு கும்பல்களை ஒழித்து ஊருக்கு நல்லது செய்தான் தான் என்பதை பற்றிய கதை.
முதல் பாகம் போல் இந்த பாகமும் முழுவதுமாக அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன. முதலில் ஜெயில் கழிவறையில் ஆரம்பிக்கும் சண்டையில் இருந்து தொடங்குகிறது படம்.
போன பாகத்தில் சண்டைகள் பல இருந்தாலும் கார் சேஸிங் போன்ற காட்சிகள் விடுபட்டு விட்டது. அதை இந்த பாகத்தில் நிறைவேற்றி உள்ளார் இயக்குனர். கார் சேஸிங் மற்றும் காருக்குள் நடக்கும் சண்டைகள் சிறப்பு.
சில காட்சிகளில் வரும் ஒரு சின்ன கொலைகார கும்பல் கொடூரமாக கொல்கிறது. அதிலும் அந்த கும்பலில் உள்ள ஒரு பெண் சுத்தியலை வைத்து கொடூரமான சண்டையிட்டு கொலை செய்கிறார்.
இன்னொருவன் பேஸ்பால் பேட்டை வைத்து கொடூரமாக கொலை செய்கிறான்.
இயக்குனர் புதிது புதிதாக கொலை செய்வது எப்படி என்று ரூம் போட்டு யோசிப்பார் போல.
படம் முழுவதும் ரத்தம் மற்றும் வன்முறை கரைபுரண்டு ஓடுகிறது. முதல் பாகத்தை ஏற்கனவே பார்த்திருந்ததால் இது எதிர்பார்த்ததுதான். ஆனால் முதல் பாகத்தை விட வன்முறை காட்சிகள் பல மடங்கு அதிகம்.
மொத்தத்தில் பரபரப்பான ஆக்சன் படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். வன்முறை மற்றும் ரத்தம் சொட்டும் காட்சிகள் பிடிக்காதவர்கள் இந்தப் படத்தைத் தவிர்ப்பது நல்லது.
Director: Gareth Evans
Cast: Iko Uwais, Arifin Putra, Tio Pakusodewo, Oka Antara, Alex Abbad, Yayan Ruhian, Donny Alamsyah, Julie Estelle
Screenplay: Gareth Evans
Cinematography: Matt Flannery, Dimas Imam Subhono
Watch Trailer: