Project Power Tamil Review ப்ராஜெக்ட் பவர் – 2020
இந்த படம் ரெண்டு நாள் முன்னாடி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது.
படத்தின் plot நன்றாக இருந்தது அது போக சிறந்த நடிகர்கள் வேறு. Jamie Foxx (Django Unchained,Baby Driver) மற்றும் Joseph Gardon -Levitt (Inception, Lincoln ) குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள்.
ஊருக்குள் தொடர்ச்சியாக பல வித்தியாசமான சம்பவங்கள் நடக்கின்றன. ஒருவன் காரை ஒரே கையால் தூக்குகிறான், இன்னொருவன் போலீஸ் காரை ஓடியே முந்தி செல்கிறான்.
இதற்கு எல்லாம் காரணம் ஊருக்குள் புதிதாக வந்த ஒருவிதமான மாத்திரை. இந்த மாத்திரையை யார் முழுங்கினாலும் 5 நிமிடங்கள் அபரிமிதமான சக்தி கிடைக்கிறது. சுருக்கமாக சொன்னால் 5 நிமிடங்கள் யார் வேண்டுமானாலும் சூப்பர் ஹீரோ ஆகலாம்.
ஆனால் எந்த மாத்திரை எந்த மாதிரியான சக்தியை தரும் என்று யாருக்குமே தெரியாது. அது குறித்து முழுங்கிய பின் தான் தெரியும்.
ஆர்வத்தை தூண்டும் கதை ஆனால் எடுத்த விதம் மிகவும் சாதரணமாக உள்ளது.
ராபின் ( Dominique Fishback) பள்ளியில் படிக்கும் மாணவி. தன் அம்மாவின் உடல்நிலை காரணமாக பணம் தேவைப்படுவதால் தன் கசின் உதவியுடன் இந்த சூப்பர் பவர் டேப்லெட்டை விற்கிறார்.
ப்ராங் (Joseph Gardon-Levitt) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஊரை நம்மால் முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இந்த இன்ஸ்டன்ட் சூப்பர் ஹீரோக்களை சமாளிக்க முடியாமல் திணருகிறார்.
ஒரு கட்டத்தில் முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என முடிவு செய்து ராபின்னிடம் இருந்து சூப்பர் பவர் டேப்லெட்டை வாங்கி குற்றவாளிகளை பிடிக்க உபயோகிக்கின்றார்.
ஆர்ட் (Jamie Foxx) ஒரு முன்னாள் ராணுவ வீரர் . இவர் தனியாளாக சூப்பர் டேப்லெட் கூட்டத்தை அழிக்க நினைக்கிறார். இவரது மகளை சில காரணங்கள் காரணமாக சூப்பர் டேப்லெட் கூட்டம் கடத்தி வைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ராபின் மூலம் அவர்கள் எஜமானர்களை பிடிக்க திட்டம் இடுகிறார் ஆர்ட். இந்த திட்டத்தில் ப்ராங்கும் இணைந்து கொள்ள வில்லன்களின் தலைமை இடமாக இருக்கும் ஒரு கப்பலுக்குள் நுழைகிறார்கள்.
ஆர்ட் தன் மகளை மீட்டாரா ? வில்லன்கள் கூட்டத்தை அழித்தார்களா ? என்பதை படத்தில் பாருங்கள்.
கிராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக உள்ளது . அதுவும் ஒருவன் மாத்திரையை போட்டு விட்டு தீப்பிழம்பாக மாறி வீடுகளுக்குள் ஓடுவது.
பச்சோந்தி போல சூழ்நிலையோடு ஒன்றும் மாத்திரையை போட்டு வங்கியை கொள்ளை அடிக்கும் காட்சிகள்.
அதுவும் அந்த பச்சோந்தி மனிதனை ப்ராங் நகர வீதிகளில் துரத்தும் போது அவன் உருவம் இடத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருவது சிறப்பான கிராபிக்ஸ்.
பெரிய தலைகளுக்கு நடிப்பதற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ராபின் கதாபாத்திரத்தில் வரும் பெண் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லன் கூட்டத்திற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கலாம். அவர்கள் யார் , நோக்கம் என்ன எனபது குழப்பமாக உள்ளது.
ஒரு முறை பார்க்கலாம்… டைம் பாஸ் திரைப்படம்.. நடிகர்கள் லிஸ்ட்டை பார்த்து ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்தால் ஏமாற்றமே…
IMDb Rating : 6.1/10
Available in Netflix
Cast: Jamie Foxx, Joseph Gordon-Levitt, Dominique Fishback, Rodrigo Santoro, Colson Baker, Allen Maldonado, Amy Landecker, Courtney B. Vance
Directed by: Henry Joost, Ariel Schulman
Release Date: August 14, 2020