Prisoners – பிரிசனர்ஸ்- 2013

X-Men ஹீரோ மற்றும் The Prestige படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த  Hugh Jackman நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு Suspense Thriller.

Prisoners  movie review in tamil, பிரிசனர்ஸ் திரைப்பட விமர்சனம், Jake Gyllenhaal, Hugh Jackman, Terrence Howard, Maria Bello, Viola Davis, Paul Dano

Thanks Giving நாளன்று Dover (Hugh Jackman) தன் குடும்பம் குழந்தைகளுடன் அருகில் இருக்கும் தன் நண்பரின் வீட்டுக்கு விருந்துக்கு செல்கிறார். பெற்றோர்கள் உள்ளே ஜாலியாக பேசிக்கொண்டு இருக்க, வெளியே விளையாட சென்ற இரண்டு சிறுமிகள் திடீரென காணாமல் போய்விடுகிறார்கள். 

சற்று நேரத்திற்கு முன் அங்கே நின்றிருந்த ஒரு வேனில் தான் அவர்களை கடத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அந்த வேனை தேடி மடக்கி பிடிக்கிறது போலீஸ். 

வேனில் குழந்தைகள் இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. வேனை ஓட்டிவந்தது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் (Alex – Okha திரைப்படத்தில் விலங்குகளை காப்பாற்றும் குழுவின் தலைவராக வருபவர்) . அவனிடம் விசாரித்தால் எந்த பதிலும் இல்லை. கைது செய்ய தகுந்த ஆதாரம் இல்லாததால் அவனை அனுப்பி விடுகிறது போலீஸ்.

குழந்தையின் தந்தை Dover-க்கு  (Hugh Jackman) அந்த இளைஞன் Alex-ன் மீது தான் சந்தேகம். எனவே அவனை கடத்திக்கொண்டு போய் ஒரு தனி அறையில் வைத்து, அடித்து உதைத்து உண்மையை அறிய பார்க்கிறான்.  ஆனால் Alex வாயே திறக்க மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறான்.

மறுபக்கம் பல கோணங்களில் விசாரணை செய்யும் Detective Loki (Jakee Gyllenhall) யிடம் இரண்டு வித்தியாசமான குற்றவாளிகள் சிக்குகிறார்கள். 

ஒருவன் பாதிரியார் வீட்டின் ரகசிய அறையில்  சேரில் கை கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் ஒரு பிணமாக கிடைக்கிறான். சுமார் 50 வயது இருக்கும். அவன் யார் எதற்காக அவனை கட்டிவைத்து உயிரோடு கொன்றீர்கள் என்று கேட்க, பாதிரியார் ஒரு பகிரங்கமான செய்தியை சொல்கிறார்.

போன வாரம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வந்த அவன், தான் ஏற்கனவே 16 குழந்தைகளை கடத்தி கொன்று இருப்பதாகவும், இந்த வாரம் மேலும் இரு குழந்தைகளை கடத்த இருப்பதாகவும் கூறினான். 

குழந்தைகளை கொன்ற பாவங்களுக்கு மன்னிப்பே கிடையாது, மேலும் அவனை பாவங்கள் செய்ய விடமால் தடுக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு வழியில்லாமல் கொன்றேன் என்று  வாக்கும்மூலம் கொடுக்கிறார் பாதிரியார்.

Loki-யிடம் சிக்கிய மாற்றொருவன்  இளைஞன். காரணமே இல்லாமல், குழந்தைகளுக்கான துணிமணிகளை மட்டுமே வாங்குவதால் அவன் மீது சந்தேகம் வருகிறது. அவனை பிடித்து விசாரிக்கும் போது, தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போகிறான். 

இறந்து போன இருவருக்கும் காணாமல் போன குழந்தைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என யோசிக்கிறான் Loki. 

5 நாட்கள் கடந்தும் குழந்தைகள் பற்றிய தகவல் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் விரக்தியில் இரு குடும்பங்களும் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு  Alex தான் ஆனால் அவனும் வாய் திறந்து எதுவும் பேச மறுக்கிறான். 

இறுதியில் குழந்தைகளை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் கதை. 

படம் மெதுவாக நகர்ந்தாலும் ஒருவித பரபரப்பு படம் முழுக்க தொத்திக்கொண்டு தான் இருக்கிறது. 

IMDB Rating : 8.1

Available in Amazon Prime

Director: Denis Villeneuve

Cast: Jake Gyllenhaal, Hugh Jackman, Terrence Howard, Maria Bello, Viola Davis, Paul Dano, Melissa Leo

Screenplay: Aaron Gruzikowski

Cinematography: Roger DeakinsM

Music Johann Johannsson

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

The Lost City – 2022The Lost City – 2022

The Lost City – 2022 Movie Review In Tamil  Sandra Bullock, Brad Pitt & Channing Tatum – இந்த மூணு பேர் போதாதா இந்த படத்தை பார்க்க.  வழக்கமான Formula படி வந்து இருக்கும் ஒரு

X – 2022X – 2022

Horror, Porn  கலந்து இது போதாது என Slasher வகையும் சேர்த்து வந்துள்ள படம் இது.   IMDb 7.3 Tamil Dub ❌ OTT ❌ , 18+  Porn Film எடுக்க ஒரு பண்ணை வீட்டுக்கு போகும் குழுவிற்கு நேரம்

Run Hide Fight – 2020Run Hide Fight – 2020

4 பேரு ஒரு பள்ளிக்கூடத்துக்குள்ள நுழைந்து  சிலரை கொன்று அனைத்து மாணவர்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள்.  IMDb 6.3 Tamil dub  OTT Amazon அந்த பள்ளி மாணவியான ஹீரோயின் தன் திறமையால் தானும் தப்பித்து தனது சக மாணவர்களையும் எப்படி