Headshot – ஹெட் ஷாட் – 2016

Headshot – Indonesian Action Movie

இந்தோனேசிய நாட்டில் இருந்து வந்த தற்காப்பு கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மற்றொரு ஆக்ஷ்ன் அதிரடி திரைப்படம் . 

படத்தின் பெயரை பார்த்த உடன் தெரிந்து இருக்கும் வன்முறை தூக்கலான படம் என்று. ஹீரோ சிலாட் தற்காப்புக் கலைகளில் வல்லுநரான Iko Uwais . இவருடைய பிற திரைப்படங்களான Raid, Raid 2 , The night comes for us என அனைத்து திரைப்படங்களும் அதிரடி மற்றும் வன்முறைக்கு பஞ்சமில்லாத திரைப்படங்கள். 

படத்தின் ஹீரோ Iko Uwais மயக்கமடைந்த நிலையில் ஒரு கடற்கரையில் ஒதுங்குகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு மாதங்கள் கோமாவில் இருந்த பின்பு சுய நினைவு வருகிறது. அவருடைய பெயர் என்னவென்று தெரியாமல் இருக்க தன் பெயர் இஸ்மாயில் என்று சொல்லி வைக்கிறார். 

அங்குள்ள இளம் பெண் டாக்டர் ஆலின்க்கு இஸ்மாயில் மீது ஈர்ப்பு. இஸ்மாயில் கும் டாக்டர் மீது ஈடுபாடு இருக்க இருவரும் பழகி வருகின்றனர். 

இஸ்மாயில் க்கு தலையில் குண்டடிபட்ட காரணத்தினால் பழையது அனைத்தும் மறந்து விட்டாலும் சில சில காட்சிகள் கடந்த காலத்திலிருந்து மின்னல் போல குழப்பமாக வந்து போகின்றன. 

இந்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் சிறைச்சாலையில் உள்ள ஒரு குற்றவாளியை‌ (லீ) சந்திக்கச் செல்கிறார். அவர் பழைய பல குழந்தைகளின் புகைப்படங்களை காட்டி இவர்களுக்கெல்லாம் நீ தான் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆனால் குற்றவாளியும் சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறைச்சாலையிலிருந்து தப்பி விடுகிறான். 

இஸ்மாயிலுக்கு சிறிது சிறிதாக பழைய நினைவுகள் வருகின்றன. அதில் ஒரு கூட்டத்தினால் தலையில் சுட்டு கடைசியாக மயக்கம் அடைந்தது ஞாபகம் வருகிறது. 

வெளியில் வந்த லி முதல் வேலையாக உயிர் பிழைத்த இஸ்மாயிலை கொள்வதற்கு தன்னுடைய படையை அனுப்புகிறார். 

இஸ்மாயில் கண்ணில் படாமல் போக அவருடைய காதலியான இளம் டாக்டரையும் அவர் கூட இருக்கும் ஒரு சிறு பெண்ணையும் கடத்திக் கொண்டு போய் விடுகின்றனர் லீ யின் அடியாட்கள். 

யார் இந்த லீ, லீ க்கும் இஸ்மாயிலுக்கும் என்ன தொடர்பு? லீ ஏன் இஸ்மாயிலை கொல்ல துடிக்கிறான்?  இஸ்மாயிலுக்கு பழைய நினைவுகள் திரும்பியதா?

தற்காப்பு கலைகளில் தனிப் பயிற்சி பெற்ற படைகளை வைத்துள்ள லீ இருந்து எவ்வாறு தன் காதலியை காப்பாற்றினான் என்பதை படத்தில் பாருங்கள். 

ஆக்சன் படங்களுக்கே உரித்தான கதைக்களம். நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இளம் டாக்டராக வரும் பெண் அழகாக இருக்கிறார் மற்றும் இறுதிக் காட்சிகளில் சின்னச்சின்ன ஆக்ஷனில் இறங்குகிறார்.

Iko Uwais வழக்கம்போல் அதிரடி காட்சிகளில் கலக்கியிருக்கிறார்.

 Sunny Pang – அமைதியான மற்றும் கொடூரமான வில்லன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். எனக்கு என்னமோ இவரை பார்க்கும்போதெல்லாம் ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் அண்ணனாக வரும் அதுல் குல்கர்னி மனதில் வந்து போகிறார்.

Raid 2 சுத்தியல் பெண் இதிலும் வருகிறார் ஆனால் ஒரே ஒரு சண்டை தான் அவருக்கு. 

மொத்தத்தில் அருமையான ஒரு ஆக்சன் திரைப்படம். வன்முறைக் காட்சிகள் அதிகம் உள்ளதால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல. 

IMDb Rating : 6.3 

Available in Netflix. 

Director: Kimo Stamboel, Timo Tjahjanto

Screenplay: Timo Tjahjanto

Starring: Iko Uwais, Chelsea Islan, Sunny Pang

Country: Indonesia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017

Midnight Runners Tamil Review  Cheong-nyeon-gyeong-chal Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்ஷன் காமெடி திரைப்படம். ட்விட்டரில் ஒரு நண்பர் பரிந்துரை செய்திருந்தார் அதனால் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி. 

Black Crab – 2022Black Crab – 2022

Sweden ல இருந்து வந்து இருக்கும் War based Sci Fi action thriller படம். பனி சூழ்ந்த பகுதியில் நாட்டின் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் எதிரிகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய பொருளை பனிச்சறுக்கு செய்வதன் மூலம் எடுத்து

க்ராவ்ல் (Crawl) – 2019க்ராவ்ல் (Crawl) – 2019

க்ராவ்ல் (Crawl) –  2019  இது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிருகத்தின் ‌இடமிருந்து தப்பிப்பது பற்றிய திரைப்படம்.  நாயகி ஒரு நீச்சல் வீராங்கனையாக வருகிறார்.‌ஒரு நாள் அவருடைய அக்கா  ஃபோன் செய்து அவர்களுடைய அப்பா ஃபோன் எடுக்கவில்லை என்றும் கடுமையான புயல்