தி கேங்ஸ்டர், தி காப், தி‌ டெவில் – The Gangster, The Cop, The Devil

 

தி கேங்ஸ்டர், தி காப், தி‌ டெவில் – The Gangster, The Cop, The Devil 

பொதுவாகவே கேங்ஸ்டர், போலீஸ், சீரியல் கில்லர் திரைப்படங்கள் பிடித்தமான ஒன்று. உலக அளவில் இவ்வகையான படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 

இந்தத் திரைப்படம் ஆர்வத்தை தூண்டும் வகையில் இம் மூன்றையும் கலந்து எடுக்கப்பட்ட ஒரு கொரியன் திரைப்படம். 

படத்தின் ஆரம்பமே கொடூரமாக இருக்கிறது. ஒரு காரின் பின்னே மற்றொரு கார் செல்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் பின்னர் வரும் கார் முன்னால் போகும் காரை லேசாக இடித்து விடுகிறது. காரை ஓட்டி வந்தவர்கள் இறங்குகின்றனர். இடி வாங்கிய காரை ஓட்டியவர் இடித்த  இடத்தை புகைப்படம் எடுக்கிறார் இன்ஷூரன்ஸ்ற்கு தேவைப்படும் என்று. 

சிறிது அசந்த நேரத்தில் காரை இடித்தவன் கத்தியை எடுத்து தாறுமாறாக குத்துகிறான். அவனை ரத்தவெள்ளத்தில் விட்டுவிட்டு குத்தியவன் தப்பித்து விடுகிறான். 

அடுத்த காட்சியில் ஒரு கேங்கின் தலைவன் (Jang) காட்டப்படுகிறான். அவருடைய முதல் காட்சியிலேயே அவன எவ்வளவு கொடூரமானவன் என்பதை காட்டுகிறார் இயக்குனர். இவன் ஊரில் சூதாட்ட விடுதிகள் நடத்துகிறான். ஊரில் உள்ள மிகப் பெரிய ரவுடி கும்பல்களின் தலைவர்களில்  இவனும் ஒருவன். 

அதற்கு அடுத்த காட்சியில் நேர்மையான போலீஸ் அதிகாரி(Jung Tae)  காட்டப்படுகிறார். அவருடைய மேலதிகாரி நேர்மையற்றவாராக இருப்பதால் இவரால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை. முதல் காட்சியில் காட்டப்பட்ட கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்காக செல்கிறார். 

போலீஸ் அதிகாரிக்கு இது ஒரு சீரியல் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. பழைய கொலைகள் குறித்த கோப்புகளை பார்க்கும்பொழுது இது ஒரு சீரியல் கில்லர் வேலை என்று முடிவுக்கு வருகிறார். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் மேலதிகாரி இவர் சொல்வதை நம்ப மறுக்கிறார். 

இந்நிலையில் சில நாள் கழித்து கும்பலின் தலைவன் இரவு பார்ட்டிக்கு பின்பு தனியாக காரில் திரும்புகிறான். முதல் காட்சியில் காட்டப்பட்டது போல இவனுடைய கார் இடிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை சீரியல் கில்லர் இவனை சரியாக குத்த முடியவில்லை. இருவருக்குமிடையே ஆக்ரோஷமான சண்டை நடக்கிறது கும்பல் தலைவன் பல கத்திக்குத்துகள் வாங்குகிறான். ஒரு தருணத்தில் சீரியல் கில்லர் தாக்கு பிடிக்க முடியாமல் அவனை விட்டு விட்டு தப்பித்து ஓடி விடுகிறான்.  Jang உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைக்கிறான். 

உயிர் பிழைத்து வந்த Jang தன்னை குத்தியவனை பழிவாங்க துடிக்கிறான். மேலும் இவன் கத்திக்குத்து வாங்கியதால் ரவுடிகள் கூட்டத்தில் இவனுடைய மரியாதையும் குறைந்து விடுகிறது. இதனால் பலிவாங்கிய தீர வேண்டிய கட்டாயத்தில்  அவனும் அவனுடைய குழுவும் இணைந்து அந்த சீரியல் கொலைகாரனை தேடுகின்றனர். ஆனால் கொலைகாரன் உபயோகித்த கத்தி மற்றும் அவனுடைய காரை மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. 

Jung Tae க்கு இந்த விஷயம் தெரிய வருகின்றது. Jang ஐ விசாரிக்க வந்த இடத்தில் இருவரும் இணைந்து அந்த சீரியல் கொலைகாரனை கண்டுபிடிக்கலாம் என முடிவு செய்கின்றனர். ஆனால் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே அந்த கொலைகாரனை அவர்கள் நினைத்த வண்ணம் தண்டிக்கலாம் என்று முடிவு செய்கின்றனர். 

எதிரெதிர் துருவங்களான இருவரும் இணைந்து இவ்வாறு சீரியல் கொலைகாரனை பிடித்தார்கள் மற்றும் யார் கையில் அவன் சிக்கினான் மற்றும் அவனுடைய முடிவு என்ன என்பதையும் படத்தில் பாருங்கள். 

Jang கதாபாத்திரத்தில் Dong – Seok அதிரடியாக கலக்கியிருக்கிறார்.  கொடூரமான சீரியல் கொலைகாரன் பாத்திரத்தில் Kim மற்றும் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் Mu – Yeol சிறப்பாக நடித்துள்ளனர். 

சண்டைக்காட்சிகள் மற்றும் இறுதியில் வரும் சேசிங் காட்சிகள் அருமை. 

மொத்தத்தில் சிறந்த கதை மற்றும் பரபரப்பான திரைக்கதை என சிறந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர். 

IMDb Rating – 6.9/10

Cast: Don Lee, Kim Moo-yeol, Kim Seong-gyu, Yoo Seung-mok, Choi Min-chul, Kim Yoon-sung, Heo Dong-won, Oh Hee-joon

Director-screenwriter: Lee Won-tae

Producers: Jang Won-seok, Seo Kang-ho

Director of photography: Par Se-seung

Editor: Han Young-kyu

Music: Jo Yeong-wook

Watch Trailer: 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Criminal – கிரிமினல் – 2016Criminal – கிரிமினல் – 2016

இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று Sci Fi கலந்திருக்கிறார் இயக்குனர். படத்தில் நிறைய தெரிந்த நடிகர்கள்.  திறமையான அரசு உள்வாளி Bill Pope ( Ryan Reynolds – 6 Underground) இவரது

Ponniyin Selvan – 2022Ponniyin Selvan – 2022

Ponniyin Selvan Review – பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்  நாவலை படித்து பல வருடங்கள் ஆகிடுச்சு. அதனால் நிறைய மறந்து போச்சு. அதுபோக இவ்வளவு பெரிய கதையை திரையில் கொண்டு வருவது லேசுபட்ட காரியம் இல்ல.எனவே எதிர்பார்ப்பு இல்லாமல் போனேன்.

Admiral Roaring Currents – 2014Admiral Roaring Currents – 2014

1597 ல் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வார் படம்.    ஜப்பான் கொரியா மீது படை எடுக்குது. கடலில் ஒரு பகுதியை தாண்டி விட்டால் கொரியா சோலி முடிஞ்சது.  கொரிய தளபதி வசம் இருப்பது 12 கப்பல்கள்,