ஒக்ஜா (Okja) – 2017

ஒக்ஜா (Okja) – 2017 – விமர்சனம் / Review 

பிரபல கொரியன் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho வின் மற்றுமொரு படைப்புதான் ஒக்ஜா. இவர் பல அருமையான திரைப்படங்களை இயக்கி உள்ளார் உதாரணமாக மதர், மெமரிஸ் ஆஃப் தி மர்டர் சமீபத்தில் வெளிவந்த ஃபாரசைட் ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்தது. 
இந்தத் திரைப்படம் இவருக்கு ஹாலிவுட் என்டிரி திரைப்படம் ஆகும். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம். 
ஒரு 13 வயது இளம் பெண்ணிற்கும் அவள் வளர்க்கும் ஓக்ஜா என்ற பெரிய சைஸ் பன்றி போன்ற மிருகத்திற்கும் நடக்கும் பாசப் போராட்டத்தை பற்றிய கதை. என்னுடைய பார்வையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் (Mirando Corporation)  கூட்டம் காட்டப்படுகிறது. அதன் தலைமை அதிகாரி லூசி (Tilda Swinton) பேசுகையில் தன் நிறுவனம் இயற்கையான முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு புது பன்றி வகையை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாகவும். இது உலகின் பசி பட்டினியை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பையே இந்த வகை பன்றிகள் ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். 26 பன்றிகள் பிறந்து உள்ளதாகவும் ஒவ்வொரு பன்றியும் தன்னுடைய நிறுவனம் செயல்படும் 26 நாட்டிற்கு அனுப்பப்படும் என்றும் அங்குள்ள அந்த நாட்டின் உள்ள உழவர்களிடம் அதை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும். பத்தாண்டுகள் முடிவவில் சிறந்த பன்றிக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார். 
பத்தாண்டுகள் கழித்து ஒரு கொரிய மலைக்கிராமத்தில் மிஜா (Seo-hyun Ahn) மற்றும் ஒஜா இருவரும் காட்டிற்குள் சுற்றித் திரிகின்றனர்.
நன்றாக வளர்ந்த நிலையில் யானை ஸைசில் மற்றும் நீர் யானை மற்றும் பன்றி என அனைத்தும்  கலந்த கலவையாக உள்ளது ஓக்ஜா.  மிஜாவிற்கு பழங்கள் பறிக்க, மீன் பிடிக்க உதவி செய்கிறது. ஒரு தருணத்தில் மிஜாவின் உயிரைக் காக்கிறது. 
இருவருக்கும் இடையே ஆன பாசப் பிணைப்பு அழகாக காட்டப்படுகிறது. 
அடுத்த நாள் மிரன்டோ கார்ப்பரேஷன் அதிகாரிகள் வந்து ஓக்ஜா வை அழைத்துச் சென்று விடுகின்றனர். சியோல் நகரில் ஓக்ஜா  இருப்பதை அறிந்த மிஜா இரவோடு இரவாக சியோல் நகருக்கு கிளம்புகிறார். 
மிரன்டோ கார்ப்பரேஷன் அலுவலகத்திலிருந்து ஒரு பெரிய ட்ரக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு அமெரிக்க புறப்பட தயாராகிறது ஓக்ஜா . ட்ரக்கை விரட்டிச் செல்கிறார் மிஜோ . ஒரு தருணத்தில் ட்ரக்கில் இருந்து வெளியே வரும் ஓக்ஜாவை காப்பாற்ற போராடும் தருணத்தில் பெரும் கலவரமாக மாறுகிறது ‌ . இக்கட்டான தருணத்தில் இன்னும் ஒரு குழு மிஜாவுடன் இணைந்து ஓக்ஜாவை காப்பாற்ற உதவி செய்கின்றனர். 
பின்னர் தங்கள் விலங்குகள் நலவாரிய குழு வேண்டும் மிருகவதை மற்றும் மிருகங்களை வைத்து ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களிலிருந்து அப்பாவி விலங்குகளை காப்பாற்றுவது தங்களுடைய குறிக்கோள் என்றும் கூறுகின்றனர். 
ஓக்ஜாவை காப்பாற்ற உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் ஆனால் மிஜாவின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். 
மிஜா அவர்களுடைய இணைந்தாரா? இருவரும் இணைந்து பலம் பொருந்திய மிரன்டோ கார்ப்பரேஷனை எதிர்த்து ஓக்ஜாவை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை படத்தில் பார்க்கவும். 
மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் திரைப்படம் விலங்குகள் நலத்தை காக்கும் குழு வந்தவுடன் பரபரப்பாகிறது. 
கிராபிக்ஸில் ஒக்ஜா மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது காட்டும் உணர்ச்சிகள் கிராபிக்ஸில் மிகத் துல்லியமாக உள்ளது. கிராஃபிக்ஸை எவ்வாறு இதுபோன்று உயிரோட்டமாக உள்ள கதைகளில் உபயோகப்படுத்த வேண்டும் என்று நம்மூர் இயக்குனர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
ஓக்ஜா பண்ணை மற்றும் இறைச்சி தொழிற்சாலையில் காட்டப்படும் காட்சிகள் மனதை உலுக்கும் விதத்தில் உள்ளன. இறைச்சி கூடங்களில் மனித உணவுக்காக மிருகங்களுக்கு நேரும் கொடுமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
ஒரு சில காட்சிகள் மற்றும் F**** வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு பார்த்தால் குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய மிகச்சிறந்த திரைப்படம். 
கண்டிப்பாக பாருங்கள் வித்தியாசமான திரைப்படம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Lady Vengeance (லேடி வென்ஜென்ஸ்) – 2005Lady Vengeance (லேடி வென்ஜென்ஸ்) – 2005

    இது பழிவாங்குவதை மையமாக கொண்ட கொரியன் திரைப்படம்.    Oldboy என்ற அருமையான திரைப்படத்தை இயக்கிய Chan-Wook Park  படைப்பில் உருவான இன்னொரு திரைப்படம்.    13 வருடங்கள் செய்யாத தவறுக்காக சிறை தண்டனை அனுபவித்த பெண் விடுதலை

Kingdom – Ashin Of The North – Special Episode-2021Kingdom – Ashin Of The North – Special Episode-2021

கொரியன் ஜாம்பி தொடரான Kingdom -ல் இரண்டு சீசன்கள் Netflix -ல் வெளியாகி சக்கை போடு போட்டது.  ஜாம்பிகள் என்றால் மெதுவாக நகரும் என்ற விதியை உடைத்து மின்னல் வேக ஜாம்பிகளை Train to Busan படம் மூலம் வெளி உலகத்திற்கு

ஓல்ட் பாய் (Old Boy) – 2003ஓல்ட் பாய் (Old Boy) – 2003

  இது ஒரு கொரியன் திரில்லர் திரைப்படம். நிறைய நண்பர்கள் மற்றும் பிளாக்கர்கள் இந்த படத்தை பார்க்குமாறு பரிந்துரைத்து இருந்தனர். தலைசிறந்த கொரியன் படங்களில் இதுவும் ஒன்று என்று நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.    எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள்