ஓல்ட் பாய் (Old Boy) – 2003

 

இது ஒரு கொரியன் திரில்லர் திரைப்படம். நிறைய நண்பர்கள் மற்றும் பிளாக்கர்கள் இந்த படத்தை பார்க்குமாறு பரிந்துரைத்து இருந்தனர். தலைசிறந்த கொரியன் படங்களில் இதுவும் ஒன்று என்று நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். 
 
எச்சரிக்கை: 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளகிய மனம் படைத்தவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. 
 
 
முதலில் படத்தின் கதையை சுருக்கமாக பார்க்கலாம்.  தன்னை யார் கடத்தினார்கள் எதற்காக கடத்தினார்கள் என்று தெரியாமல் 15 ஆண்டுகள் தனிமைச் சிறையில் வைக்கப்படுகிறார் ஒருவர். 15 ஆண்டுகளுக்குப் பின் வெளியே வரும் அவனுக்கு தன்னை கடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்கு ஐந்து நாட்கள் கொடுக்கப்படுகின்றது. கடத்தியவர்களை கண்டுபிடித்தானா? எதற்காக கடத்தப்பட்டான் என்பதைச் சுற்றி நகர்கிறது கதை. 
 
மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
தேசு ஒரு குடும்பஸ்தன் மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறான். மகளின் பிறந்த தினத்தன்று அளவுக்கதிகமாகக் குடித்து போலீசிடம் மாட்டிக் கொள்கிறான். அவன் நண்பன் அவனை போலீஸிடம் இருந்து மீட்டு கூட்டிக்கொண்டு வருகிறான். வரும் வழியில் ஒரு பொது தொலைபேசியில் இருந்து வீட்டிற்கு போன் செய்கிறான் தேசு.  அவன் நண்பன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு போனில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தேசு காணாமல் போகின்றான். 
 
அடுத்த காட்சியில் ஒரு தனியறையில் சிறை வைக்கப்பட்டுள்ளான். யார் கடத்தினார்கள் எதற்கு கடத்தினார்கள் என்று தெரியாமல் நாட்கள் ஓடுகின்றன. திடீரென்று ஏதோ ஒருவகையான வாயு அறைக்குள் அனுப்பப்படுகிறது பின்னர் உடல் கவசம் அணிந்த சிலர் வந்து செல்கின்றனர்.  அறையில் ஒரே ஒரு டிவி மட்டும் உள்ளது.   அறையில் பொழுது போகாமல் டைரி எழுதுகிறான் மற்றும் வெளியில் வந்தவுடன் தன்னை கடத்தி அவர்களை பழிவாங்குவதற்காக முழுநேரமாக கராத்தே பழகுகிறான். 
 
15 வருடங்கள் கழித்து ஒரு பெட்டியில் வைத்து ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் வீசப்படுகிறான் . 
அங்கிருந்து விட்டு கிளம்பி ஒரு உணவகத்திற்கு செல்கிறான். அங்கு வேலை செய்யும் மிடோ என்ற பெண்ணுடன் நட்பு கொள்கின்றான். திடீரென்று மயக்கம் அடைகிறான் விழித்துப் பார்க்கும் பொழுது மிடோ வின் அறையில் இருக்கிறான். 
 
மிடோ அவனுடைய மனைவி மற்றும் குழந்தையை பற்றி விசாரணை செய்கிறாள் . பல வருடங்களுக்கு முன்பே மனைவி கொல்லப்பட்டதாகவும் அவளைக் கொன்றது கணவனான தேசு என்றும் போலீஸ் சொல்கிறது. 
 
தன் சாப்பிட்ட உணவின் சுவையை வைத்து அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து உணவகங்களிலும் சென்று உணவருந்தி தனக்கு 15 வருடங்களாக சாப்பாடு அனுப்பிய உணவகத்தை கண்டுபிடிக்கிறான். 
 
அவன் சிறை வைத்திருந்த இடத்தைக் கண்டுபிடித்து அதன்மூலம் கிடைக்கும் சின்ன ஆதாரத்தை வைத்து நான் படித்த பள்ளிக்கும் தன்னை கடத்தியவனுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளதை கண்டுபிடிக்கிறான். 
 
இதற்கு நடுவில் மிடோ உடனான நெருக்கம் அதிகரிக்கிறது. 
 
முன்னாள் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரணை செய்யும்போது தங்களுடன் படித்து பின்னர் தற்கொலை செய்துகொண்ட ஒரு பெண்ணை பற்றி அசாதாரணமான உண்மைகள் வெளியே வருகின்றன. 
 
 
 
 
இதற்குமேல் படத்தைப் பற்றி சொன்னால் இதற்கு பிறகு படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும். ஆனால் இறுதியில் வரும் திருப்பம் எவருமே எதிர்பாராதது. இப்படியும் நடக்குமா என ஆச்சரியம் கொள்ள வைக்கும். 
 
மிகவும் நேர்த்தியான திரைக்கதை மற்றும் இசையமைப்பு. இயக்குனர் மிகத் திறமையாக படத்தை எடுத்துள்ளார். 
 
சண்டைக்காட்சிகள் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.‌ 
 
படத்தின் இறுதியில் அவன் கடத்தப்பட்ட தற்கான காரணம் மற்றும் அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கொடூரமானது மற்றும் எவரும் எதிர்பாராதது. 
 
கண்டிப்பாக நான் பார்த்த படங்களில் மிக சிறப்பான ஒரு படம்.  கண்டிப்பாக வாவ் சொல்ல வைக்கும். 
 
IMDB – Link – Rating – 8.4/10
 
 
Director: Park Chan-wook
 
Writer: Hwang Jo-yun, Lim Chun-hyeong, Park Chan-wook
 
Stars: Choi Choi, Yoo Ji-tae, Gang Hye-jung
 
 

2 thoughts on “ஓல்ட் பாய் (Old Boy) – 2003”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

தி வெய்லிங் (The Wailing)தி வெய்லிங் (The Wailing)

தி வெய்லிங் (The Wailing)  இது ஒரு புதுமையான கொரியன்  திகில் படம்.  யார் பேய் என்பதை கடைசி ‌வரை மர்மமாகவே வைத்திருப்பார் இயக்குனர். படம் முழுக்க சின்ன சின்ன தகவல்கள் ஆங்காங்கே யார் பேய் என்பதை யூகிப்பதற்கு சிதற விட்டு

Kill Boksoon – 2023Kill Boksoon – 2023

Kill Boksoon review  Action/Thriller #korean @netflix #Tamil ❌ காசுக்கு கொலை பண்ணும் கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோயின் மகளுக்காக இந்த தொழிலில் இருந்து வெளியே வர முயற்சி செய்கிறார் இதனால் அந்த கம்பெனி ஓனர் & கூட வேலை

Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017Midnight Runners – மிட்நைட் ரன்னர்ஸ் – 2017

Midnight Runners Tamil Review  Cheong-nyeon-gyeong-chal Tamil Review  இது ஒரு கொரியன் ஆக்ஷன் காமெடி திரைப்படம். ட்விட்டரில் ஒரு நண்பர் பரிந்துரை செய்திருந்தார் அதனால் பார்த்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு காமெடி ஆக்ஷன் படம் பார்த்த திருப்தி.